ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அறுவை சிகிச்சை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

By ICTS
ஜூன் 15, 2022
all about hyperhidrosis surgery

ஹைப்பர்ஹைட்ரோசிஸுக்கு எவ்வாறான அறுவை சிகிச்சை அளிக்கப்படலாம்?

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்பது உடல் செயல்பாடு அல்லது வெப்பத்துடன் தொடர்பில்லாத காரணங்களால் அதிகப்படியான வியர்வையை விளைவிக்கும் ஒரு நிலை. இது அனைத்து தட்பவெட்ப நிலைகளில் வாழும் நபர்களை பாதிக்கிறது. இதை உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பாதிப்பது அல்லது முழு உடலையும் பாதிப்பது என வகைப்படுத்தலாம். ஹைப்பர்ஹைட்ரோசிஸ் கைகள், கால்கள், அக்குள் மற்றும் முகம் போன்ற பகுதிகளை பாதிக்கிறது மற்றும் உடலின் இருபுறமும் பாதிக்கிறது.

முள்ளந்தண்டு வடத்திற்கு இணையாக இயங்கும் ‘ஸிம்படிக் சேய்ன்’ எனப்படும் நரம்புகளின் குழுவால் வியர்வை கட்டுப்படுத்தப்படுகிறது. நரம்புகள் உள்ளங்கையில் மற்றும் அக்குள்களில் உள்ள வியர்வை சுரப்பிகளுக்கு வியர்வை உற்பத்திக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்றன.

ஹைப்பர்ஹைட்ரோசிஸ்க்கான சிகிச்சையை மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை என பிரிக்கலாம்.

  • மருத்துவ சிகிச்சையானது பொதுவாக அறிகுறிகளின் தற்காலிக நிவாரணத்தை சுமார் 6 மாதங்களுக்கு வழங்குகிறது. இது பாதிக்கப்பட்ட வியர்வை சுரப்பிகளுக்கு வழங்கும் நரம்புகளைத் தடுக்க வியர்ப்பதைத் தடுக்கும் மருந்துகள் மற்றும் ‘நியூரோடாக்சின்’ ஊசிகள் முதலியவற்றைப் பரிந்துரைப்பதைக் கொண்டுள்ளது. ‘அயன்டோபோரேசிஸ்’, அதாவது பாதிக்கப்பட்ட பகுதிகளை குளியல் தொட்டியில் வைத்து, மின்னோட்டத்தை கடத்தும் சிகிச்சையையும் இதற்குத் தேர்வு செய்யலாம். இந்த சிகிச்சைகள் அனைத்தும் பெரும்பாலும் தற்காலிக நிவாரணம் அளிக்கும்.
  • ஹைப்பர்ஹைட்ரோசிஸுக்கு அறுவை சிகிச்சை ஒரு உறுதியான மற்றும் நிரந்தர தீர்வாகும். சிங்கப்பூரில் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள பல வழிகள் உள்ளன. இதில் பாதிக்கப்பட்ட வியர்வை சுரப்பிகளை அகற்றுவது அல்லது வியர்வையை அதிகமாக உற்பத்தி செய்யும் வியர்வை சுரப்பிகளை விநியோகிக்கும் நரம்புகளை துண்டிப்பது (சிம்பதெக்டோமி) ஆகியவை அடங்கும்.

ICTS இல், ‘ஹைப்பர்ஹைட்ரோசிஸ்’ அறுவை சிகிச்சையானது இருதரப்பு VATS ‘சர்விகல் சிம்பதெக்டோமி’ (கழுத்து நரம்புகளை அழிக்க அல்லது துண்டிக்கும் அறுவை சிகிச்சை) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சிறிய அளவில் ஊடுருவும் அறுவை சிகிச்சை ஆகும். இதில் மார்பில் மிகச் சிறிய வெட்டுக்கள் [3மிமீ] மட்டுமே செய்யப்படும். ஹைப்பர்ஹைட்ரோசிஸிற்கான அனைத்து அறுவை சிகிச்சைகளைப் போலவே, இது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும். இதில் சிறப்பு அறுவை சிகிச்சை கருவிகளைப் பயன்படுத்தி மார்புப் பகுதியில் உள்ள வியர்வை சுரப்பிகளை வழங்கும் நரம்புகள் துண்டிப்படுகின்றன. இது வியர்வை சுரப்பிகளுக்கு சமிக்ஞைகள் அனுப்பப்படுவதை நிறுத்தி, வியர்வையைத் தடுக்கும்.

உடலின் இருபுறமும் 3-4 மிமீ அளவில் இரண்டு சிறிய வெட்டுக்களை செய்து உடலின் இருபுறமும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. வெட்டுக்கள் மார்பில், அக்குளின் கீழே இருக்கும். ஒரு வெட்டு அறுவை சிகிச்சை கருவியைச் செருகுவதற்காகவும் மற்றொன்று கேமராவுக்காகவும் ஆகும். ‘ஸிம்படிக் சேய்ன்’ கேமராவில் காட்சிப்படுத்தப்படுகிறது (இது விலா எலும்பின் தலைப் பகுதியில் இயங்குகிறது). மேலும் 2வது மற்றும் 3வது விலா எலும்பில் அகற்றப்படும் இலக்கின் முக்கிய புள்ளிகள் அடையாளம் காணப்படும். வெப்பசக்தியைப் பயன்படுத்தி (எலக்ட்ரோகாட்டரி), 2வது மற்றும் 3வது விலா எலும்பில் நரம்புகள் துண்டிக்கப்படும். சிம்பதெக்டோமியின் வெற்றி பின்னர் உள்ளங்கைகளில் வெப்பநிலை அதிகரிப்பதன் மூலம் சரிபார்க்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை முடிந்ததும், கருவிகள் அகற்றப்பட்டு. தோல் பசையைப் பயன்படுத்தி கீறல்கள் மூடப்படும். தையல் தேவையில்லை; எனவே, அறுவை சிகிச்சை கிட்டத்தட்ட வடுக்கள் இல்லாமல் இருக்கும். ETS அறுவை சிகிச்சை பொதுவாக ஒரு மணிநேரம் (ஒவ்வொரு பக்கத்திலும் 30 நிமிடங்கள்) எடுக்கும். மேலும் நோயாளிகள் பொதுவாக அறுவை சிகிச்சைக்கு 4 மணிநேரம் கழித்து அதே நாளில் வீட்டிற்குச் செல்லலாம். இச் செயல்முறை முழு மயக்க நிலையில் செய்யப்படுகிறது.

அறுவை சிகிச்சையின் அபாயங்கள் என்ன?

அனைத்து அறுவை சிகிச்சைகளைப் போலவே, ‘சர்விகல் சிம்பதெக்டோமி’ (கழுத்து நரம்புகளை அழிக்க அல்லது துண்டிக்கும் அறுவை சிகிச்சை) சில அபாயங்களை உள்ளடக்கியது. இதில் இரத்தப்போக்கு, தொற்று மற்றும் சுற்றியுள்ள கட்டமைப்புகளுக்கு காயம் ஏற்படுதல் ஆகியவை அடங்கும். சிறியதாக இருக்கும்போதும், சிகிச்சசை பயனளிக்காமல் போக வாய்ப்பு உண்டு அல்லது ஹைப்பர்ஹைட்ரோசிஸ் மீண்டும் வரலாம். பக்கவாதம், மாரடைப்பு மற்றும் நுரையீரல் காயம் போன்ற மயக்கநிலையை ஏற்படுத்தும் மருந்துடன் தொடர்புடைய சில ஆபத்துகளும் இருக்கலாம். இருப்பினும், இந்த ஆபத்து காரணிகள் ஒவ்வொரு நோயாளியின் மருத்துவ சுயவிவரத்தைச் சார்ந்து இருக்கும். மற்றும் அதைப் பற்றி அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு, மயக்க மருந்து நிபுணரிடம் மேலும் கலந்துரையாடப்படும்.

இருப்பினும், குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட அறுவைசிகிச்சையானதால் அபாயங்கள் ஒட்டுமொத்தமாக குறைவாகவே உள்ளன. மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுவது குறைவு. அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது மற்றும் சிக்கல், அபாயங்கள் அனைத்தும் 0.5%-1%க்கும் குறைவாக இருக்கும்.

‘ஹைப்பர்ஹைட்ரோசிஸ்’ அறுவை சிகிச்சை எவ்வளவு வெற்றிகரமாக உள்ளது?

ஒரு ‘சிம்பதெக்டோமி’ ஹைப்பர்ஹைட்ரோசிஸுக்கு நிரந்தர தீர்வாகும். வெற்றி விகிதம் நோயாளிகளுக்கு நோயாளிகளுக்கு மாறுபடுவதோடு ஹைப்பர்ஹைட்ரோசிஸால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இடையில் வேறுபடும். சரியாகச் செய்தால், இந்த நரம்புகள் மீண்டும் வளரா. துண்டிப்பு நிரந்தரமானது.

அதிகமாக உள்ளங்கைகளில் வியர்ப்பதைத் தடுக்க உதவுவதில் 99-100%டும், அக்குளில் வியர்ப்பதைத் தடுப்பதில் 66%டும் மற்றும் பாதத்தின் உள்ளங்காலில் வியர்ப்பதைத் தடுப்பதில் 33%டும் வெற்றி விகிதம் உள்ளது[1]. ETS முக்கியமாக உள்ளங்கைகள் மற்றும் அக்குள் போன்ற உடலின் மேல் பாதியில் வியர்ப்பதைக் குறிவைக்கும் என்பதால் இந்த வெற்றி விகிதம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அறுவை சிகிச்சையின் பக்க விளைவுகள் என்ன?

"பக்க விளைவுகள்" என்ற சொல் இங்கு பொருந்தாது. ஹைப்பர்ஹைட்ரோசிஸ் உள்ள நோயாளிகள் அதிக உடல் வெப்பநிலையைக் கொண்டுள்ளனர். மேலும் குளிரூட்டுவதற்கான வழிமுறை பொதுவாக அவர்களின் கைகள் மற்றும் அக்குள் வழியாக இருக்கும். அறுவைசிகிச்சை இந்த பகுதிகளில் வியர்வை வெளியாவதை நிறுத்துவதால், உடலின் மாற்று இடங்கள் உடலை குளிர்விப்பதற்காக ஈடுசெய்யும் ‘ஹைப்பர்ஹைட்ரோசிஸ்’ எனப்படும் ஒரு நிகழ்வில் வியர்வை அதிகரிக்கும். இதனால் முதுகு, வயிறு, தொடைகள், கால்கள் ஆகியவை பொதுவாகப் பாதிக்கப்பட்டும் பகுதிகள் ஆவை. இருப்பினும், இது சுமார் 3-6 மாதங்கள் நீடித்த பின் மறைந்துவிடும். 1%டினருக்கு மட்டுமே தொடர்ச்சியான ‘ஈடுசெய்யும் ஹைப்பர்ஹைட்ரோசிஸ்’ இருக்கலாம்.

chevron-left
chevron-right