மேலோட்டம்

நியூமோதோராக்ஸ் என்றால் என்ன?

"நியூமோ" என்பது காற்றாகவும், "தோராக்ஸ்" என்பது மார்பாகவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே, நியூமோதோராக்ஸ் என்பது சரிந்த நுரையீரலுக்கான மருத்துவச் சொல்லாகும். இதன் விளைவாக காற்று ப்ளூரல் இடைவெளியில் (நுரையீரலுக்கும் மார்பு குழிக்கும் இடையே உள்ள இடைவெளி) புகுந்துவிடும்.

சேதப்படுத்தும் நியூமோதோராக்ஸ், வாகன விபத்துக்கள் அல்லது விளையாட்டுகளின் போது ஏற்படும் மோதல்கள், உடைந்த விலா எலும்புகள், துப்பாக்கி குண்டு அல்லது கத்தியால் மார்பில் காயம், CPR அல்லது பயாப்ஸி போன்ற மருத்துவ நடைமுறைகளினால் நுரையீரல் சேதப்படுதல் மற்றும் ஆழ்கடல் நீச்சலின் போது சுற்றியுள்ள காற்றழுத்தங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற சேதப்படுத்தும் சம்பவத்தின் விளைவாக ஏற்படலாம்.

எந்த காரணமும் இல்லாமல் ஏற்படும் நியூமோதோராக்ஸின் மிகவும் பொதுவான வடிவம் தன்னிச்சையான நியூமோதோராக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வை இரண்டு குறிப்பிட்ட நிகழ்வுகளாக வகைப்படுத்தலாம்:

  • முதன்மை தன்னிச்சையான நியூமோதோராக்ஸ் (PSP): நுரையீரல் நோய் வரலாறு இல்லாத இளம், வளரிளம் பருவத்தினர், மெல்லிய மற்றும் உயரமான பதின்ம வயதினருக்கு ஏற்படுகிறது
  • இரண்டாம் நிலை தன்னிச்சையான நியூமோதோராக்ஸ் (SSP):நுரையீரல் புற்றுநோய், ‘சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்’, காசநோய் போன்ற நுரையீரல் பிரச்சினைகள் உள்ள வயதானவர்களுக்கு ஏற்படுகிறது.

நியூமோதோராக்ஸின் அறிகுறிகள்

அறிகுறிகள் லேசானது முதல் உயிருக்கு ஆபத்தானது வரை இருக்கலாம். நிமோதோராக்ஸின் லேசான நிகழ்வுகள் கவனிக்கப்படாமல் போகலாம். பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

  • நெஞ்சு வலி
  • மூச்சு திணறல்
  • இருமல்
  • சோர்வு
  • வேகமாக சுவாசித்தல்
  • விரைவான இதயத் துடிப்பு

விசாரணை

ஊடுகதிர் (எக்ஸ்-ரே)

நோயைப்பற்றி அறிய இது மிகவும் பொதுவான முறையாகும். இதன் மூலம் நோயின் நிலமையின் அளவு மற்றும் தீவிரத்தை மருத்துவர் தெரிந்துகொள்வார்.

CT ஸ்கேன்

நோயாளி அனுபவிக்கும் எந்த அடிப்படை நுரையீரல் நிலைகளையும் மதிப்பிடுவதற்கும் நோயாளிகளின் எதிர் நுரையீரலின் நிலையை மதிப்பிடவும் இது உதவுகிறது.

அல்ட்ராசவுண்ட்

நிலையின் தீவிரத்தை மதிப்பிடவும், சிகிச்சையின் போது மார்புக் குழாயைச் செருகவும் பயன்படுகிறது.

சிகிச்சைகள்

பழமைவாத அணுகுமுறை

PSP களின் சிறிய பிரச்சனாகள் உள்ளவர்களுக்கு, அறுவை சிகிச்சை நிபுணர், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க பரிந்துரைக்கலாம். இது பொதுவாக முதல் 24-48 மணி நேரத்திற்குள் சரியாகிவிடும். சில சந்தர்ப்பங்களில், நோயாளிகள் ‘ஹைபோக்ஸியா’ எனப்படும் நுரையீரலில் பிராணவாயு அளவு குறைவதை அனுபவிக்கலாம். இதற்கு நாசி வழி பிராணவாயு செலுத்தும் சிகிச்சை அளிக்கப்படும்.

தோராகோஸ்டமி (மார்புக் குழாய் செருகல்)

ஒரு குழிவான ஊசி ப்ளூரல் குழிக்குள் கவனமாகச் செருகப்படுகிறது. பின்னர் காற்றை வடிகட்டவும், நுரையீரல் குணமடைய மீண்டும் விரியவும் மார்புக் குழாய் செருகப்படுகிறது.

அறுவை சிகிச்சை

ஒரு நோயாளி தன்னிச்சையான நியூமோதோராக்ஸை ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்களை அனுபவித்திருந்தால் அல்லது நுரையீரல் மீண்டும் விரிவடைய முடியாத அளவுக்கு நுரையீரல் குழிக்குள் அதிக அளவு காற்று சிக்கியிருந்தால், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். அரிதாக, சில தொழில்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் அறுவை சிகிச்சைக்கான அறிகுறியாக மாறும்.
2-3 சாவித் துளை கீறல்களை உள்ளடக்கிய வீடியோ-உதவி அறுவை சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது, இதில் ‘புலெக்டோமி’ மற்றும் ‘ப்ளூரோடெசிஸ்’ (பிளூராவின் இணைவு) ஆகியவை அடங்கும். இதனால் ‘நியூமோதோராக்ஸ்’ மீண்டும் வராது. பொதுவாக அறுவை சிகிச்சைக்குப் 2-3 நாட்களுக்குப் பிறகு நோயாளிகள் மருதுவமனையிலிருந்து வீடு திரும்பிவிடலாம்..