மார்பெலும்பு உட்குழிவு (Pectus Excavatum)


மார்பெலும்பு உட்குழிவு என்பது பிறப்பிலிருந்தே இருக்கும் ஒரு நிலை ஆகும். இது  மார்பெலும்பின் அசாதாரண வளர்ச்சியைக் குறிக்கிறது. இது மார்புச் சுவரில் ஒரு தாழ்வான பகுதியை உருவாக்குகிறது. காலப்போக்கில், இந்த நிலை இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை பாதிக்கக்கூடும். எனவே தகுந்த மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.

பட உரிமை: www.mayoclinic.org

மார்பெலும்பு உட்குழிவு (Pectus Excavatum) என்றால் என்ன?

பெண்களை விட ஆண்களில் அதிகமாகக் காணப்படும் இந்த நிலை, மார்பெலும்பு உள்ளே அசாதாரணமாக வளர்வதால் ஏற்படுகிறது, இது மார்புச் சுவரை "தோண்டப்பட்ட" தோற்றமாகக் காட்டுகிறது. இதன் தோற்றம் காரணமாக, இது " அமிழ்ந்த மார்பு" அல்லது "புனல் மார்பு" என்றும் அழைக்கப்படுகிறது.

பிறப்பிலிருந்தே இந்த நிலை இருந்தாலும், பருவமடையும் போது வளர்ச்சி முடுக்கத்தின்போது தான் இது பொதுவாக கவனிக்கப்படுகிறது. மார்பெலும்பின் அசாதாரண வளர்ச்சி காரணமாக, இந்த நிலை உள்ளவர்களுக்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடு குறைந்திருக்கலாம். எனவே, உகந்த செயல்பாட்டை மீட்டெடுக்க மருத்துவச் சிகிச்சை பெரும்பாலும் தேவைப்படுகிறது.

மிதமான நிகழ்வுகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாத முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், கடுமையான நிகழ்வுகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இன்று, குறைந்தபட்ச ஊடுருவும் அறுவை சிகிச்சை முறை மார்பெலும்பு உட்குழிவு உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. அது அவர்களுக்கு எளிதாகக் கிடைக்கிற ஒரு தேர்வாக அமைகிறது.

அறிகுறிகள்

மார்பெலும்பு உட்குழிவு உள்ள நோயாளிகளுக்கு பின்வரும் செயல்பாட்டு சிக்கல்கள் ஏற்படலாம்:

  • சோர்வு
  • உடல் செயல்பாடுகளின் போது மற்றவர்களுடன் ஒப்பிடும் போது மூச்சுத் திணறல் அல்லது உடலில் வலிமை குறைதல்
  • மார்பு வலி
  • ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
  • இதயத் துடிப்பு விரைவாக அடித்தல்
  • மயக்கம் அல்லது தலைசுற்றல்
  • மேல் சுவாசக்குழாய்த் தொற்றுகள் அடிக்கடி வருதல்

உடல் ரீதியான அறிகுறிகளுடன், இந்த நிலை உள்ளவர்கள் தங்கள் மார்பின் தோற்றம் காரணமாக தன்னம்பிக்கை பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். மிகவும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் சந்தர்ப்பங்களில், இந்த நிலையினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் அவமானம் மருத்துவ மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.

காரணங்கள்

மார்பெலும்பு உட்குழிவு உண்டாவதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. சில நிபுணர்கள் ‘மார்ஃபன்’ நோய்க்குறி (Marfan syndrome) போன்ற திசு நோய்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். மற்றவர்கள் மரபியல் தொடர்பு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

நோய் கண்டறிதல் மற்றும் சோதனைகள் 

மார்பெலும்பு உட்குழிவு பதின்ம வயதின் போது போதுமான அளவு கவனிக்கத்தக்கதாகத் தெரிந்தவுடன் பொதுவாக ஒரு எளிய உடல் பரிசோதனையின் மூலம் கண்டறியப்படும். ஆனால் மார்பெலும்பு உட்குழிவு அருகிலுள்ள உறுப்புகளை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை மருத்துவர் தீர்மானிக்க, கூடுதல் சோதனைகள் தேவைப்படலாம். அவை:

முப்பரிமாண மறுகட்டமைப்புடன் கூடிய கணினி ‘டோமோகிராபி’ (CT) ஸ்கேன். அல்லது காந்த அதிர்வு ‘இமேஜிங்’ (MRI) போன்ற போன்ற படிம சோதனைகள்.

(PFTs) போன்ற நுரையீரல் செயல்பாட்டுச் சோதனைகள்

‘எலக்ட்ரோ கார்டியோகிராம்’ (EKG) அல்லது ‘எக்கோ கார்டியோகிராம்’ போன்ற இதய செயல்பாட்டு சோதனைகள்

உடற்பயிற்சி செயல்பாடுச் சோதனை 

மேலுள்ளவற்றின் அடிப்படையில், ஒரு இதய-நுரையீரல் மருத்துவ நிபுணர் நோயாளியின் நிலையின் தீவிரத்தை தீர்மானிக்க முடியும். பொதுவாக, ‘ஹாலர்’ குறியீடு (Haller Index) என்ற ஒரு தீவிர மதிப்பீடு பயன்படுத்தப்பட்டு, படிம சோதனை முடிவுகளின் அடிப்படையில் நோயாளியின் நிலை மிதமான, நடுத்தர அல்லது கடுமையானது என வகைப்படுத்துகிறது. குறிப்பாக, படிம முடிவுகளின் அடிப்படையில் மார்பில் ஏற்பட்டிருக்கும் தாழ்வின் அளவை வகைப்படுத்த இந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

மேலாண்மை மற்றும் சிகிச்சை

மார்பெலும்பு உட்குழிவுக்கான சிகிச்சை, நோயாளியின் நிலையின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். மிதமான நிகழ்வுகளுக்கு, உடல் சிகிச்சை மற்றும் மருத்துவ சாதனங்கள் மூலம் இந்த நிலையை நிர்வகிக்க முடியும். மிகவும் கடுமையான நிகழ்வுகளில், அறுவை சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள்

மிதமான நிகழ்வுகளில், நோயாளிகள் உடல் சிகிச்சை அல்லது தோரணை சிகிச்சை பெற ஊக்குவிக்கப்படலாம். இந்த செயல்பாடுகள் மார்புப் பகுதியில் இடத்தை அதிகரித்து, இதயம் மற்றும் நுரையீரல் சிறப்பாக செயல்பட உதவும்.

மாற்றாக, சிறு வயதுக் குழந்தைகளுக்கு மார்பெலும்பின் நிலையை மேம்படுத்த ‘வெற்றிட மணி’ சிகிச்சை ஒரு வாய்ப்பாகும். ஒரு கோப்பை வடிவ சாதனத்தைப் பயன்படுத்தி மார்பெலும்பை மெதுவாக முன்னோக்கி இழுத்து, நெஞ்சுச் சுவரில் அதிக இடம் உருவாக்கப்படுகிறது. இதன் செயல்திறனை உறுதிப்படுத்த, இந்த சாதனம் ஒரு நாளைக்கு பல மணி நேரம் 12 முதல் 15 மாதங்கள் வரை பயன்படுத்தப்பட வேண்டும்.'

அறுவை சிகிச்சை 

கடுமையான உடல் அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு, அந்த அறிகுறிகளைக் குறைக்க அறுவை சிகிச்சை தேவைப்படலாம். . இதில் குறைந்தபட்ச ஊடுருவும் அறுவை சிகிச்சை அல்லது பாரம்பரிய திறந்த அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும். உங்கள் நிலையைப் பொறுத்து, உங்கள் இதய-நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் பொருத்தமான சிகிச்சை தேர்வை அறிவுறுத்த முடியும். 

 • ‘நுஸ்’ நடைமுறை என்று அழைக்கப்படும் குறைந்தபட்ச ஊடுருவும் அறுவை சிகிச்சை: 

  • இந்த நடைமுறையின் போது, ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் நோயாளியின் மார்பின் பக்கத்தில் இரண்டு சிறிய வெட்டுகளைச் செய்து, ஒரு வழிகாட்டும் கேமராவை செருகுவார். 
  • பிறகு ஒரு வளைந்த எஃகு கம்பி செருகப்பட்டு, மார்பெலும்பின் கீழ் வைக்கப்பட்டு, மார்புச் சுவரில் அதிக இடம் உருவாக்கப்படும். 
  • மார்புப் பள்ளம் சரி செய்யப்பட்ட பிறகு, இறுதியில் அகற்றப்படும் வரை, இந்தப் பட்டை பல வருடங்கள் உள்ளே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

• பாரம்பரிய திறந்த அறுவை சிகிச்சை, ‘ராவிட்ச்’ செயல்முறை என்று அழைக்கப்படுகிறது: 

  • மார்பின் முன்புறத்தில் ஒரு வெட்டு உருவாக்கப்படுகிறது, அங்கு ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மார்பின் உள்தள்ளலை ஏற்படுத்தும் அசாதாரண திசு வளர்ச்சியை அகற்றுவார். 
  • பின்னர் மார்புச் சுவரில் இடத்தை உருவாக்க, மார்பெலும்பு முன்னோக்கி இழுக்கப்படும்.
  • மார்பெலும்பின் நிலையை பாதுகாக்க, ஒரு சிறிய தட்டு மற்றும் பட்டை உள்ளே வைக்கப்படும். 
  • இறுதியாக, 12 மாதங்களில், பட்டை ஒரு குறுகிய நாள் அறுவை சிகிச்சையில் அகற்றப்படும். ஆனால் தட்டு மார்பில் இருக்கும்.

அறுவை சிகிச்சைக்கு உட்படும் நோயாளிகள் பொதுவாக, அவர்களின் மேம்பட்ட அறிகுறிகள் மற்றும் மார்பின் தோற்றத்தில் திருப்தி அடைகிறார்கள். மேலும், பல மாதங்களில் அவர்கள் முழுமையாக குணமடைய முடிகிறது. உகந்த விளைவுகளுக்கு, 10 முதல் 14 வயதுக்குட்பட்ட நோயாளிகளுக்கு, மார்புச் சுவர் இன்னும் நெகிழ்வானதாக இருக்கும் போது அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

எந்த ஒரு அறுவை சிகிச்சையையும் போலவே, அரிதான ஆனால் சாத்தியமான சிக்கல்கள் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, இரத்தப்போக்கு, தொற்று அல்லது அருகிலுள்ள அமைப்புகளுக்கு காயம் ஏற்படுதல் போன்றவை. எனவே, இத்தகைய சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்க, நோயாளிகள் அனுபவம் வாய்ந்த இதய நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர்களைத் தேடி அணுகுவது மிகவும் ஊக்கப்படுத்தப்படுகிறது.

சாத்தியமான சிக்கல்கள்

சிகிச்சையளிக்கப்படாத மார்பு மூழ்கிய நிலையில்,  உள்ள நோயாளிகளில், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் அறிகுறிகள் படிப்படியாக மோசமடையக்கூடும். இதில் பின்வருவன அடங்கும்:

  • மீண்டும் மூச்சுத் திணறல் அல்லது நுரையீரல் கொள்ளளவு குறைதல் போன்ற சுவாசப் பிரச்சினைகள் 
  • இதய அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு ஒழுங்கின்மை போன்ற இதயச் சிக்கல்கள்
  • கவலை மற்றும் தன்னம்பிக்கை குறைதல் போன்ற உளவியல் தாக்கங்கள்
  • பிற உறுப்புகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கங்கள்

ஒரு மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்

பிறந்தபோது கண்டறியப்படவில்லை என்றால், மார்பு தொடர்ந்து மூழ்கும்போது மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளை நீங்கள் கவனிக்க ஆரம்பிக்கலாம். இது துல்லியமான நோயறிதலை வழங்கக்கூடிய மற்றும் உங்களுடன் சரியான சிகிச்சைத் திட்டத்தை உருவாக்கக்கூடிய ஒரு நிபுணரைச் சென்று காணத் தூண்டக்கூடும். உங்கள் அறிகுறிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், அவை மோசமடைந்தால் எப்போது அறுவை சிகிச்சை தேவைப்படும் என்பதை தீர்மானிக்கவும், நீங்கள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் சிங்கப்பூரில், மார்பு அறுவை சிகிச்சைக்கான சர்வதேச மையத்தில் (ICTS) இல் மருத்துவ இயக்குனரும் மூத்த ஆலோசனை மார்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் அனீஸ் டொ.ப. அஹமது அவர்களுடன் ஆலோசனைக்கு நேரம் ஒதுக்கலாம். 2 தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட டாக்டர் அனீஸ், மார்பெலும்பு உட்குழிவு (பெக்டஸ் எக்ஸ்கவாட்டம்) அறுவை சிகிச்சை உற்பட சிக்கலான மார்பு அறுவை சிகிச்சைகளைக் கையாள்வதில் அனுபவம் வாய்ந்தவர். 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

  1. ‘பெக்டஸ் எக்ஸ்கவாட்டம்’ அல்லது மார்பெலும்பு உட்குழிவு ஆபத்தானதா?
    1. ‘பெக்டஸ் எக்ஸ்கவாட்டம்’ எப்போதும் ஆபத்தானது அல்ல. இருப்பினும், மிகவும் உள் தள்ளிய மார்பைக் கொண்டவர்கள் கடுமையான அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும்.
  2. உள் தள்ளிய மார்பு மோசமடைவதைத் தடுக்கும் பயிற்சிகள் உள்ளனவா?
    1. ஆம், மார்புச்சுவரை விரிவுபடுத்தவும், உள் தள்ளுதலைத் தடுக்கவும் ஆழமான சுவாச நுட்பங்கள் முதல் தோரணை சிகிச்சை மற்றும் பல வகையான பயிற்சிகள் உள்ளன.
  3. உள் தள்ளிய மார்புக்கான அறுவை சிகிச்சை (பெக்டஸ் எக்ஸ்கவாட்டம்) எவ்வளவு நேரம் எடுக்கும்? 

a. அறுவை சிகிச்சையின் வகையைப் பொறுத்து, ‘பெக்டஸ் எக்ஸ்கவாட்டம்’ அறுவை    

சிகிச்சை பொதுவாக பல மணி நேரம் எடுக்கும்.

குறிப்புகள்

  1. ‘பெக்டஸ்அப்’. என் மார்பெலும்பு உட்குழிவின் தீவிரம். ‘பெக்டஸ்அப்’. ஜூன் 22, 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது. நவம்பர் 23, 2025 அன்று அணுகப்பட்டது.  https://pectusup.com/en/severity-of-my-pectus-excavatum/ pectusup.com
  2. மார்பெலும்பு உட்குழிவு. ‘கிளீவ்லேண்ட்’ மருந்தகம். ‘பி எக்ஸ்காவடம்’. மார்பெலும்பு உட்குழிவு: அறிகுறிகள், காரணங்கள் & சிகிச்சை. ‘கிளீவ்லேண்ட்’ மருந்தகம். வெளியிடப்பட்டது [தேதி குறிப்பிடப்படவில்லை]. நவம்பர் 23, 2025 அன்று அணுகப்பட்டது.

 https://my.clevelandclinic.org/health/diseases/17328-pectus-excavatum Cleveland Clinic

  1. மார்பெலும்பு உட்குழிவு: நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை. ‘மயோ’ மருந்தகம். மார்ச் 14, 2025 அன்று வெளியிடப்பட்டது. நவம்பர் 23, 2025 அன்று அணுகப்பட்டது.  https://www.mayoclinic.org/diseases-conditions/pectus-excavatum/diagnosis-treatment/drc-20355488 mayoclinic.org

Comprehensive Lung Care with Minimally Invasive Robotic Precision

This article has been medically reviewed by Dr Aneez D.B. Ahmed
Dr Aneez D.B. Ahmed is a Senior Consultant Thoracic Surgeon and Medical Director of the International Centre for Thoracic Surgery (ICTS), with over 20 years of experience in thoracic surgery. Practising at Mount Alvernia, Mount Elizabeth Novena and Farrer Park Hospitals, he specialises in robotic thoracic surgery and thoracic oncology. Widely recognised as a pioneer in the field, Dr Aneez was the first in ASEAN to achieve Level III Certification in Robotic Thoracic Surgery from the European College of Cardiothoracic Surgery and continues to train surgeons regionally and internationally. His practice combines advanced surgical innovation with a strong commitment to patient-centred care.

Dr Aneez D.B. Ahmed

MBBS (India)
Diploma of The National Board Surgery
FRCS (Edinburgh, UK)
MMed (Surgery) (Singapore)
FRCS (Glasgow, UK)
FRCS Cth (Edinburgh, UK)