ICTS

பரிசோதனைப் பொட்டலங்கள்

ஆரம்பகால நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை

நுரையீரல் புற்றுநோயானது உலகளவில் அதிகமானோரை பாதிக்கும் புற்றுநோயாகக் கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில், இது ஆண்களுகிடையில் புற்றுநோய் இறப்புக்கு மிகவும் பொதுவான காரணமாகவும், பெண்களில் 2 வது பொதுவான காரணமாகவும் உள்ளது.

ஆரம்பகால நுரையீரல் பரிசோதனை நுரையீரல் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தைக் கண்டறிந்து கொள்ள உதவுகிறது. இதன் விளைவாக நுரையீரல் புற்றுநோயைக் குணப்படுத்த 80% வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதால் அதிக சிகிச்சைத் தெரிவுகளுக்கு வாய்ப்பளிப்பதுடன் சிறந்த விளைவுகளுக்கும் வழிவகுக்கிறது. நோயாளி குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய அறுவை சிகிச்சை முறைக்கும் தகுதியுடையவராக இருக்கலாம் - இது விரைவாக குணமடைவதற்கும் குறுகிய காலம் மருத்துவமனையில் தங்குவதற்கும் வழிவகுக்கும்.

பரிசோதனைப் பொட்டலங்கள் பின்வருமாறு:

திரையிடல் தொகுப்புகள்

 Essential
$488 (Before GST)
Comprehensive
$888 (Before GST)
மார்பக அறுவை சிகிச்சை நிபுணருடன் பரிசோதனைக்கு முந்தைய ஆலோசனை
 
 
குறைந்த அளவிலான CT ஸ்கேன்
 
 
நுரையீரல் செயல்பாட்டுச் சோதனை 
 
நிபுணர் மதிப்பாய்வு மற்றும் பரிந்துரை அறிக்கை
 
 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?

நுரையீரல் புற்றுநோய், அதன் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், குணப்படுத்தப்படக்க்கூடியதே. சிறிய, ஆரம்ப கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, குணமடையும் விகிதம் 80-90% வரை அதிகமாக இருக்கும். புற்றுநோய் கடுமையாகும் போதும் நிணநீர் கணுக்கள் அல்லது உடலின் பிற பகுதிகள் பாதிப்புக்குள்ளானாலும் இந்த விகிதங்கள் குறையும்.

நுரையீரல் புற்றுநோய் பரிசோதனைக்கு யார் செல்ல வேண்டும்?

நுரையீரல் புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளவர்கள் பரிசோதனைக்குச் செல்லுமாறு பரிந்துரைக்கப் படுகிறார்கள். சில காரணிகள் பின்வருமாறு:

  • புகைப்பிடிப்பவர்கள்
  • கடந்த 15 ஆண்டுகளில் புகைபிடிப்பதை விட்டுவிட்ட முன்னாள் புகைப்பிடிப்பவர்கள்
  • புகைபிடிப்போரின் புகையை உள்வாங்குதலுக்கு உற்பட்ட நபர்கள்
  • நுரையீரல் புற்றுநோயின் குடும்ப வரலாற்றைக் கொண்ட நபர்கள்
  • 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள்
  • நுரையீரல் புற்றுநோயின் வரலாற்றைக் கொண்ட நபர்கள்
  • ‘சிஓபிடி’ போன்ற நுரையீரல் புற்றுநோய்க்கான பிற ஆபத்து காரணிகளைக் கொண்ட நபர்கள்
  • காற்று மாசுபாட்டிற்கு ஆளான நபர்கள்

நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை எவ்வளவு துல்லியமானது?

நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை 80% நுரையீரல் புற்றுநோயை அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டுபிடிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது பரிசோதனையின்றி காணப்படும் 70% நுரையீரல் புற்றுநோய்களுக்கு மாறாக உள்ளது. மேலும் அறிகுறிகள் தெரியும் போது நோய் முற்றிய நிலைகளில் உள்ளது.

நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை வலியை ஏற்படுத்துமா?

இல்லை, இந்த சோதனைகள் வலியற்றவை. மற்றும் குறைந்த அளவு ஊடுருவக்கூடியவை. மேலும் சோதனைகள் நடத்தப்படும் போது முடிந்தவரை நீங்கள் அசௌகரித்துக்குள்ளாக மாட்டீர்கள்.

நுரையீரல் புற்றுநோய் பரிசோதனைக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

இது ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆகாது. ஓரே நாளில் செய்யலாம். பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் டாக்டர் அனீஸ் உடனான விரிவான மதிப்பாய்வுக்காக உங்களுக்காக ஒரு சந்திப்பு திட்டமிடப்படும்.

ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?

முன்பதிவு செய்துகொள்ளுங்கள்