ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் (ஃபோகல் ஹைப்பர்ஹைட்ரோசிஸ்) அல்லது முழு உடலிலும் (பொதுவான ஹைப்பர்ஹைட்ரோசிஸ்) அதிகப்படியான வியர்வை உண்டாவதால் ஏற்படும் நிலை.
இது இளமை பருவத்தில் தொடங்கும். பொதுவாக உள்ளங்கைகள், பாதங்கள் மற்றும் அக்குள் முதலிய பகுதிகள் பாதிக்கப்படும். இது உயிருக்கு ஆபத்தான நிலை இல்லையென்றாலும், தொழில்சார் சூழலில் பணிபுரிபவர்களுக்கு இது சமூக ரீதியாக தீங்கு விளைவிக்கும்.
ICTS இல், நாங்கள் ‘ஆக்சிலரி ஹைப்பர்ஹைட்ரோசிஸ்’ (அக்குளில் வியர்த்தல்) மற்றும் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் (உள்ளங்கைகளில் வியர்த்தல்) ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். உங்கள் உடல் பாகங்களில் வியர்வையை கட்டுப்படுத்த சிங்கப்பூரில் ‘ஹைப்பர்ஹைட்ரோசிஸ்’ அறுவை சிகிச்சை செய்யும் நிபுணர்கள் எங்களிடம் உள்ளனர்.
இந்த நோய்க்கு உற்பட்டவர்களுக்கு பொதுவாக வியர்வை உள்ளங்கைகள், அக்குள் மற்றும் பாதங்களில் வெளிப்படுகிறது. இது முழு உடலிலும் ஏற்படலாம். பொதுவாக, நேர்காணல்கள் மற்றும் தேர்வுகள் போன்ற மன அழுத்த சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் நாள்களில் நோயாளிகளால் இது அனுபவிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் இரவில் தூங்கும் போது இந்த நிலைக்கு உள்ளாவதில்ல.
டாக்டர் அனீஸ் நோயாளிகளின் மருத்துவ வரலாறு மற்றும் தற்போதைய அறிகுறிகளை மதிப்பாய்வு செய்வார். ‘ஹைப்பர் தைராய்டிசம்’ அல்லது இதயம் தொடர்பான நிலைமைகள் போன்ற ஒத்த அறிகுறிகளுடன் வேறு சுகாதார நிலைகள் இல்லை என்பதை நிர்ணயிக்க இரத்தப் பரிசோதனையும் செய்யப்படலாம். அரிதான சந்தர்ப்பங்களில், வியர்வை சுரப்பிகள் பாக்டீரியா தொற்றுக்கு பகுப்பாய்வு செய்யப்படலாம். ICTS இல், ‘ஆன்டிஸ்பெர்ஸ்பிரண்ட்’, ‘நியூரோடாக்சின்’ சிகிச்சை அல்லது ‘மைக்ரோவேவ் தெரபி’ போன்ற அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள் மூலம் எங்கள் நோயாளிகளுக்கு ஹைப்பர்ஹைட்ரோசிஸைக் குறைக்க முயற்சிக்கிறோம். ஆனால் சில சந்தர்ப்பங்களில், சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் உண்மையில் வேலை செய்யாது. அப்போது, எங்கள் நோயாளிகளுக்கு ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கிறோம். டாக்டர் அனீஸ், உள்ளங்கை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ‘உள்ளங்கை வியர்த்தல்’ அறுவை சிகிச்சை (ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அறுவை சிகிச்சை) செய்வதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.
இந்த செயல்முறை ‘சிம்பதெக்டோமி’ என்று அழைக்கப்படுகிறது. இது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும். இது வியர்வை சுரப்பிகளது நரம்பு முடிவுகளை துண்டிப்பதை உள்ளடக்கியது. இது வியர்வை சுரப்பிகள் வியர்வை சுரப்பதை நிறுத்துகிறது.
டாக்டர் அனீஸ் கடந்த 15 ஆண்டுகளாக பிரத்யேகமாக ‘சிம்பதெகடமி’ சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை கிளினிக்கை நடத்தி வருகிறார். இங்கே ICTS இல், இரண்டு பக்கங்களிலும் தலா 3 மிமீ அளவு சிறிய கீறல்கள் மூலம் செயல்முறை செய்யப்படுகிறது. மற்றும் நோயாளி அதே நாள் மாலை வீட்டிற்குச் செல்கிறார். செயல்முறை ஒரு மணி நேரம் நீடிக்கும். இது முழு நிலையில் செய்யப்படுகிறது. நோயாளி ஓய்வுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வேலைக்குச் செல்லலாம்.
ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அறுவை சிகிச்சைக்கு முன் (‘உள்ளங்கைகளின் வியர்த்தல்’ அறுவை சிகிச்சை), நோயாளி அறுவை சிகிச்சை நிபுணருடன் செயல்முறை மற்றும் அதனுடன் வரும் எச்சரிக்கையைப் பற்றி விரிவாக கண்டறிந்துகொள்வார். இது நிரந்தர தீர்வாகும், பின்வாங்க முடியாது. உடல் ‘தெர்மோஸ்டாட்’ (உடலின் வெப்பநிலையை கட்டுகுகுள் வைத்திருத்தல்) சரிசெய்யப்படும் வரை எங்கு வியர்க்க முடியும் என்பதைப் பற்றி அலோசனை வழங்கப்படும். இது ‘கம்பன்ஷனரி ஹைப்பர்ஹைட்ரோசிஸ்’ பற்றிய ஆலோசனையாகும். நோயாளி உடலின் மற்ற பாகங்களான கழுத்தின் முனை மற்றும் தொடையின் பின்புறம் முதலிய இடங்களில் வியர்க்க முடியும். பொதுவாக, நோயாளிகள் 3 முதல் 6 மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்.
இவற்றை மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அறிகுறிகளுக்கு தற்காலிக நிவாரணம் வழங்க இது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அல்லது பரிந்துரைக்கப்படாத மருந்தாக இருக்கலாம். இதனுடன் உடலில் தடவும் கிரீம்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த சிகிச்சையின் போது வியர்வை சுரப்பிகளில் ‘நியூரோடாக்சின்’கள் செலுத்தப்படிகின்றன. இது 6 மாதங்கள் வரை தற்காலிக நிவாரணம் அளிக்கும்.
வியர்வை சுரப்பிகளில் வியர்வை உற்பத்தியைத் தூண்டுவதிலிருந்து, நரம்புகளைத் தடுப்பதன் மூலம் இது செயல்படுகிறது.
இந்த சிகிச்சையானது வியர்வை சுரப்பிகளில் அதிக ஆற்றல் மிக்க அலைகளை செலுத்தி அதை திறம்பட அழிக்கிறது. இது பாதிக்கப்பட்ட பகுதியில் செயல்படும் வியர்வை சுரப்பிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.