ICTS

எங்களை பற்றி

எங்பள் மருத்துவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

Dr அனீஸைப் பற்றி

மார்பக அறுவை சிகிச்சைக்கான சர்வதேச மையம், (ICTS) மருத்துவ இயக்குநரும் மூத்த ஆலோசகருமான மார்பக அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அனீஸ் டோ.ப. அகமது(阿尼兹医生) அவர்களின் தலைமையில் இயங்குகிறது. டாக்டர் அனீஸ் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மார்பக அறுவை சிகிச்சை துறையில் ஈடுபட்டு வருகிறார். முக்கியமாக மனித-இயந்திர மார்பக அறுவை சிகிச்சை மற்றும் மார்பக புற்றுநோயியல் ஆகியவற்றில் சிறப்பு ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். ICTS ஆகும் மவுண்ட் அல்வேர்னியா மருத்துவமனையில் வசதியாக அமைந்துள்ளது, மவுண்ட் எலிசபெத் நோவெனா மருத்துவமனை மற்றும் ஃபாரர் பார்க் மருத்துவமனை.

சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் இருதய மார்பகப் பயிற்சியை முடித்த பிறகு, எடின்பரோவில் உள்ள ‘ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸில் பெல்லோஷிப்’ தேர்வில் தேர்ச்சி பெற்றார். டாக்டர் அனீஸ் தனது தனியார் மருத்துவத்தைத் தொடங்குவதற்கு முன்பு, சிங்கப்பூர் டான் டோக் செங் மருத்துவமனையில் (TTSH) பொது அறுவை சிகிச்சைத் துறையில் மார்பக அறுவை சிகிச்சையின் சேவைத் தலைவராக பணியாற்றினார்.

மார்பக அறுவைசிகிச்சைக்கான சர்வதேச மையம் பல்வேறு மார்பக நிலைமைகளுக்கு குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு தீர்வுகளை வழங்குகிறது. மனித-இயந்திர அறுவை சிகிச்சையில் டாக்டர் அனீஸின் ஆர்வம், ஐரோப்பிய இதய மார்பக அறுவை சிகிச்சை கல்லூரியில் (EACTS) மனித-இயந்திர மார்பக அறுவை சிகிச்சையில் நிலை III சான்றிதழ் சிறப்புப் பயிற்சியைப் பெற்ற ஆசியான் குழுவில் முதலாமவராக அங்கீகரிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. மனித-இயந்திர மார்பக அறுவை சிகிச்சையில் மேம்பட்ட பயிற்சிக்காக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சப்பாட்டிகல்ஸ் முடித்த அவர் இப்போது ஆசியான் மற்றும் தெற்காசியாவில் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான பயிற்சித் திட்டத்தை வழிநடத்துகிறார். சிங்கப்பூரின் மனித-இயந்திர அறுவைசிகிச்சை சங்கத்தின் (RS3) உடனடித் தலைவராகவும் உள்ளார்.

டாக்டர் அனீஸ் டோ.ப. அகமதுவின் நம்பிக்கைகளின் அடிப்படையில் கட்டப்பட்ட, மார்பக அறுவை சிகிச்சைக்கான சர்வதேச மையம், வாழ்க்கையை மேம்படுத்த உதவும் தொழில்நுட்பம் மற்றும் அறுவை சிகிச்சையின் ஒருங்கிணைப்பை உறுதியாக நம்புகிறது. மனித-இயந்திர-உதவி அறுவை சிகிச்சையானது, வழக்கமான திறந்த அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, மனித-இயந்திர-உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை மிகவும் துல்லியமாகவும் கட்டுப்பாட்டுடனும் அறுவை சிகிச்சையைச் செய்ய அனுமதிக்கிறது. மனித-இயந்திர அறுவை சிகிச்சை, சிறிய அறுவைச் சிகிச்சை சகீறல்கள் மூலம் செய்யப்படுகிறது, இது நோயாளியை விரைவாக தேர வழிவகிக்கிறது. குறைந்த வடுக்கள் மற்றும் தொற்றுநோய்க்கான ஆபத்தையும் குறைக்கிறது

எங்கள் மருத்துவரைப் பற்றி எல்லாம்

டாக்டரின் பேரார்வம்

டாக்டர் அனீஸின் அவரது நோயாளிகளுக்கு சிறந்த தரமான பராமரிப்பை வழங்க மார்பக அறுவை சிகிச்சையின் எல்லைகளைத் தள்ளுவதைத் தம் மருத்துவ நடைமுறையாகக் கொண்டுள்ளார். மார்பக அறுவை சிகிச்சையில் அவருக்கு இருந்த சிறப்பு ஆர்வம் அவரை மார்புச் சுவர் பிரித்தல் மற்றும் மறுகட்டமைப்பு முதலியவற்றில் முன்னோடியாக இருக்க வழிவகுத்தது. டாக்டர் அனீஸ் உலகின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட “பாலிமர்” விலா எலும்புக் கூடு புனரமைப்பையும் செய்துள்ளார்

மருத்துவப் பணிகளைத் தவிர, டாக்டர் அனீஸ் கற்பிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். 2010 ஆம் ஆண்டு முதல், டாக்டர் அனீஸ் TTSH இல் மேம்பட்ட மார்பக தாதியர் படிப்பில் (ATNC) ஒரு திட்டத்தை முன்னோடியாக நடத்தினார். இது ஆசியா முழுவதிலும் உள்ள செவிலியர்களைப் பயிற்றுவிப்பதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அவர் எடின்பரோவில் உள்ள ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்களின் தேர்வாளராகவும் உள்ளார்.

டாக்டர் அனீஸ் சர்வதேச அளவில் பல்வேறு மார்பக அறுவை சிகிச்சை குழுக்களில் உறுப்பினராக உள்ளார். அவர் ‘ஆசியன் சொசைட்டி ஆஃப் கார்டியோடோராசிக் சர்ஜரியில்’ (ASCVTS) தோராசிக் டொமைன் போர்டு உறுப்பினராகவும் உள்ளார். மேலும் அவர் தென்கிழக்கு ஆசிய மார்பக அறுவை சிகிச்சை சங்கத்தின் (SEATS) தற்போதைய பொதுச் செயலாளராக உள்ளார்.

குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு மார்பக அறுவை சிகிச்சையில் அவருக்கு இருக்கும் நிபுணத்துவம் மற்றும் அறிவு, இப்பகுதியில் மாநாடுகள் மற்றும் பட்டறைகளுக்கு பேச்சாளராக பல அழைப்புகளுக்கு வழிவகுத்தது. தம் நாட்டிலுள்ள பிற மருத்துவமனைகள் மற்றும் மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பிற பகுதிகளிலிருந்தும் அவருக்கு நோயாளிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஊடகம்

டாக்டர் அனீஸ் அஹமட், மார்பக நிலைமைகள் மற்றும் கிடைக்கக்கூடிய பல்வேறு சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்குக் கற்பிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.
அவர் பல்வேறு ஊடக தளங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மற்றும் CNAயின் Talking Point, Channel 8யின் 8 视界போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார். மற்றும் ‘கலர்ஸ் டிவி’ ஆசியா-பசிபிக்கின் சலாம் நமஸ்தே, மற்றும் MONEY FM 89.3 மற்றும் CNA93.8 உடனான வானொலி நேர்காணல்கள். அங்கு அவர் நுரையீரல் தொடர்பான பல நிலைமைகள் மற்றும் ஆவியிழுத்தலின் மூலம் புகைத்தலின் விளைவுகள் பற்றி பேசினார். ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’, ‘லியான்ஹே ஜாவோபாவோ’, ‘லியான்ஹே வான்பாவோ’, ‘ஆசியா ஒன்’ போன்ற பல்வேறு அச்சு வெளியீடுகளிலும், ‘எக்ஸ்பாட் லிவிங்’, ‘போர்ட்ஃபோலியோ’, ‘பிரைம்’ ‘மற்றும் குளோபல் ஹெல்த் ஆசியா-பசிபிக்’ போன்ற சஞ்சிகைகளிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?

முன் பதிவு செய்ய
cross