நுரையீரல் விரிவாக்கத்தை கட்டுப்படுத்தும் நோய்களின் விளைவாக நுரையீரல் மற்றும் மார்புக் குழிக்கு இடையே உள்ள இடைவெளியில் திரவத்தை சேகரிப்பதை ‘ப்ளூரல் எஃப்யூஷன்’ என்று வழங்கப்படுகிறது. நுரையீரல் மற்றும் மார்பு குழிக்கு இடையில் ஒரு மெல்லிய இடைவெளி உள்ளது. சுற்றியுள்ள திசுக்களில் உள்ள நுண்குழாய்களால் உற்பத்தி செய்யப்படும் இடைநிலை திரவம், போன்ற திரவம் இவ்விடைவெளியில் உள்ளது. இது பொதுவாக சராசரியாக 30 மில்லி ஆகும். இது சுவாசம் போன்ற செயல்முறைகளின் போது நுரையீரல் மற்றும் மார்பு குழிக்கு இடையே உராய்வுப் பொருளாக செயல்படுகிறது. இந்த திரவம் பொதுவாக நிணநீர் நுண்குழாய்களால் வடிகட்டப்படுகிறது. இது நுரையீரலில் சேகரிக்கப்பட்டு அழுத்தம் கொடுக்காது.
முக்கியமாக மூன்று வகையான ‘ப்ளூரல் எஃப்யூஷன்’ உள்ளன. அதிகப்படியான திரவம் உற்பத்தி செய்யப்படும் ‘டிரான்சுடேடிவ்’ மற்றும் ‘எக்ஸுடேடிவ் எஃப்யூஷன்’ அல்லது நிணநீர் நாளங்கள் திரவத்தை சீராக வெளியேற்ற முடியாத நிணநீர் வெளியேற்றம்.
இரத்த அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக அதிக திரவம் நுண்குழாய்களில் இருந்து வெளியேறும் போது ‘டிரான்ஸ்யூடேடிவ் எஃப்யூஷன்’ ஏற்படுகிறது. அத்தகைய நிகழ்வை ஏற்படுத்தும் சூழ்நிலைகள்:
பெரிய மூலக்கூறுகள் நுண்குழாய்களின் சுவர்கள் வழியாக உள்ளே செல்ல முடியாத போது ‘எக்ஸுடேடிவ் எஃப்யூஷன்’ ஏற்படுகிறது. இது சவ்வூடு பரவல் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் நீர் மூலக்கூறுகள் நுண்குழாய்களிலிருந்து வெளியேறுகிறன்றன. இதை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள்:
நிணநீர் நாளங்கள் திரவத்தை சரியாக வெளியேற்ற முடியாதபோது நிணநீர் வெளியேற்றம் ஏற்படுகிறது, இதனால் அது நுரையீரலில் சேகரிக்கப்படுகிறது. சில காரணங்கள் பின்வருமாறு:
அறிகுறிகள் வெளியேற்றத்தின் தீவிரத்தை மிகவும் சார்ந்துள்ளது. ஒரு சிறிய வெளியேற்றம் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும். அதே நேரத்தில் ஒரு பெரிய வெளியேற்றம் குறிப்பிடத்தக்க வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். சில அறிகுறிகள் பின்வருமாறு:
அறுவை சிகிச்சை நிபுணர் திரவத்தை வெளியேற்றுவதற்கு விலா எலும்பின் மேல் ஒரு ஊசியை கவனமாக செருகுவார். இது அறிகுறிகளை நிவர்த்தி செய்யவும் ‘ப்ளூரல் எஃப்யூஷ’னுக்கான முக்கிய காரணத்தைப் பற்றி அவருக்கு நல்ல புரிதலை அளிக்கவும் உதவும்.
திரவங்களின் வெவ்வேறு தோற்றங்கள், நோயாளி எந்த வகையான “ப்ளூரல் எஃப்யூஷனால்” பாதிக்கப்படுகிறார் என்பதை அறுவை சிகிச்சை நிபுணருக்கு வகைப்படுத்த உதவும்.
‘டிரானுடேடிவ்’ திரவம்: தெளிவானது
எக்ஸுடேடிவ் திரவம்: நோயெதிர்ப்பு உயிரணுக்களைக் கொண்டுள்ளது, இதனால் தெளிவில்லாத தன்மையை கொண்டுள்ளது.
நிணநீர் திரவம் கொழுப்புகளால் நிரப்பப்பட்டு பால் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
மார்பக எக்ஸ்ரே, CT ஸ்கேன் மற்றும் ‘அல்ட்ராசவுண்ட்’ ஆகியவை நோயறிதலுக்கு மேலும் உதவுவதோடு, கட்டிகள் போன்று நுரையீரலுக்குள் வேறு ஏதேனும் நோய்கள் உள்ளனவா என்பதை மருத்துவர் கண்டறியவும் உதவும்.
சிகிச்சை முறைகள் அடிப்படை சுகாதார நிலையால் உண்டாகும் வெளியேற்றத்தைத் பொறுத்தது. மேலும் இந்த வெளியேற்றம் மூச்சுத் திணறல் மற்றும்/அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற கடுமையான சுவாச அறிகுறிகளை ஏற்படுத்தினால், அதைப் பொறுத்தும் சிகிச்சை முறைகள் இருக்கும்.
இதய செயலிழப்பு அடிப்படை சுகாதார நிலையாக இருந்தால் ‘டையூரிடிக்ஸ்’ மற்றும் பிற இதய செயலிழப்பு மருந்துகள் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும். புற்றுநோய் உயிரணுக்களால் ஏற்படும் ஒரு வீரியம் மிக்க வெளியேற்ற பிரச்சனையைத் தீர்க்க கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி தேவைப்படலாம். மூச்சுத்திணறல் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்ட ‘தோராசென்டெசிஸ்’ஸால் அல்லது ‘தோராகோஸ்டமி’யால் (மார்புக் குழாயைப் பயன்படுத்துவதன் மூலம்) திரவத்தை வெளியேற்றலாம்.
அறுவை சிகிச்சைக்கு இரண்டு அணுகுமுறைகள் உள்ளன.
முதலாவது காணொளி உதவியுடனான மார்க அறுவை சிகிச்சை. இது மார்பில் 2-3 சாவித் துளை கீறல்கள் மூலம் நிகழும். அதைத் தொடர்ந்து திரவம் வெளியேற்றப்படும். சில சந்தர்ப்பங்களில், ‘பயாப்ஸி’ அல்லது ‘ப்ளூரோடெசிஸ்’ தேவைப்படுகிறது. இது டால்க் பவுடரைப் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமாகிறது. கடைசியாக, திரவத்தை வெளியேற்ற ஒரு மார்புக் குழாய் கீறல்களில் வைக்கப்படுகிறது.
இரண்டாவதாக, மார்புச் சுவரின் குறுக்கே கீறல் செய்யப்படும் பாரம்பரிய ‘தோரகோடமி’ ஆகும். இது தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படும்போது அல்லது கதிர்வீச்சு ஒட்டுதல்களின் பிந்தைய காலக்கட்டத்தில் செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து திரவம் வெளியேற அனுமதிக்க மார்புக் குழாய்கள் செருகப்படும்.
ICTS இல், குறைந்தபட்ச ஊடுருவும் செயல்முறைகள் விரும்பப்படுகின்றன. இருப்பினும், அனைத்து தெரிவுகளும் ஆலோசனையின் போது நோயாளியுடன் விவாதிக்கப்படும்.