மேலோட்டம்

நுரையீரல் முடிச்சு என்றால் என்ன?

இது நுரையீரலில் 0.5-2 செமீ வரையிலான சிறிய வளர்ச்சியாகும். இந்த அளவை விடப் பெரியதாகி விட்டால் நுரையீரலின் அசாதாரணமான வளர்ச்சியாகிவிடும். இது புற்றுநோயாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இது புற்றுநோயா என்பதைத் தீர்மானிக்க மருத்துவர்கள் நுரையீரல் முடிச்சுகளின் எண்ணிக்கை அல்லது அளவில் அதிகரிப்பு உள்ளதா என்பதைப் பார்க்க பொதுவாக இந்த முடிச்சுகளின் இமேஜிங் சோதனைகளை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.
இந்த முடிச்சுகளைக் கண்டறிவது அரிது. X-கதிர்களில் 1% மற்றும் CT ஸ்கேன்களில் 30% மட்டுமே கண்டறியப்படுகின்றன.

நுரையீரல் முடிச்சுகளின் காரணங்கள்

நுரையீரல் முடிச்சுகளில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. தீங்கு விளைவிக்காத முடிச்சுகள் (புற்றுநோய் அல்லாதது) அல்லது வீரியம் மிக்க முடிச்சுகள. அவை வளர்ச்சியின் அளவு, வடிவம், பண்பு மற்றும் உள்ளடக்கம் உட்பட பல அம்சங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.

தீங்கற்ற முடிச்சுகள் காசநோய் அல்லது பூஞ்சை தொற்று போன்ற நோய்களின் தொற்றுகளால் ஏற்படலாம். அல்லது முந்தைய நோய்த்தொற்றுகளின் வடுவின் விளைவாக இருக்கலாம். முடக்கு வாதம் போன்ற தீரா நோய்களும் கட்டிகளை உருவாக்கும். பின்னர் அவை நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். கடைசியாக, நுரையீரலில் உள்ள நார்ச்சத்து திசுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியான நார்ச்சத்து வளர்ச்சியும் நுரையீரல் முடிச்சுகளுக்கு வழிவகுக்கும்.

முதன்மை நுரையீரல் புற்றுநோயிலிருந்து உடலின் மற்ற பகுதிகளிலிருந்து பரவிய புற்றுநோய் வரை பல்வேறு வகையான புற்றுநோய்களின் காரணமாக புற்றுநோய் முடிச்சுகள் உருவாகலாம்.

நுரையீரல் முடிச்சுகளின் அறிகுறிகள்

அவை பொதுவாக அறிகுறியற்றவை (அறிகுறிகள் இல்லாதவை). பெரும்பாலும் நோயாளிகள் பரிசோதனைக்குச் செல்லும்போது இவை கண்டுபிடிக்கப்படுகின்றன. நோயாளிகள் சிகிச்சையை பெற்ற போதிலும் அவ்வப்போது அவர்கள் நீங்காத ஒரு தொடர்ச்சியான இருமலுக்கு உள்ளாவார்கள்.

விசாரணை

மார்பு எக்ஸ்ரே

நுரையீரல் முடிச்சுகள் பொதுவாக 1cm விட்டம் அதிகமாக இருந்தால் மார்பு ஊடுகதிர் பரிசோதனைகளில்(X-rays) புள்ளியாகக் தெரியும். இதன் விளைவாக, நோயாளிகள் மற்ற சுவாச நிலைமைகளை ஒட்டி பரிசோதித்து கொள்ளும் போது மட்டுமே இது பொதுவாக கண்டறியப்படுகிறது.

CT ஸ்கேன்


சமீபத்திய ஆண்டுகளில், சிடி ஸ்கேன்கள் இதுபோன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்யும் பொதுவான முறையாக மாறி வருகிறது. ICTS இல், 5 மிமீ விட்டம் கொண்ட சிறிய முடிச்சுகளை எடுத்துக் காட்டக்கூடிய குறைந்த அளவில் கதிர்வீச்சுத் தாக்கம் கொண்ட ‘கான்ட்ராஸ்ட் அல்லாத’ CT ஸ்கேன் அடங்கிய பரிசோதனைத் தொகுப்பை நாங்கள் வழங்குகிறோம். இந்த முடிச்சுகள் அளவில் வளர்கின்றனவா அல்லது எண்ணிக்கையில் பெருகுகின்றனவா என்பதை ஆராய சிறிது காலம் வரை கண்காணிக்கப்படும். இது புற்றுநோய் கட்டிகளை கண்டறிய உதவும்.

PET CT ஸ்கேன்

CT ஸ்கேன் அல்லது பயாப்ஸி மூலம் புற்றுநோய் முடிச்சு இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன், வளர்சிதை மாற்ற செயல்பாட்டு நிலைகளை மதிப்பீடு செய்ய ‘பிஇடி’ சிடி ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது. ஒரு புற்றுநோய் முடிச்சு வளர அதிக வளங்கள் தேவைப்படும், இதனால் அது உயர் வளர்சிதை மாற்ற மட்டத்தில் செயல்படுகிறது. PET CT ஸ்கேன் இந்த பகுதிகளில் ஒளிரும். இதன் மூலம் இந்த புற்றுநோய் முடிச்சுகளின் இருப்பிடம் சுட்டிக்காட்டப்படும்.

பயாப்ஸி

CT ஸ்கேன் வழிகாட்டுதலின் மூலம் இயக்கப்பட்ட ஒரு ஊசி, திசுக்களின் மாதிரியைப் பெற முடிச்சுக்குள் செருகப்படும். பின்னர், இந்தத் திசுவில் ஏதேனும் அசாதாரண செயல்பாடு உள்ளதா என்று சோதிக்க அனுப்பப்படும். இது, டாக்டர் அனீஸ், முடிச்சு புற்றுநோயா என்பதை கண்டறிய உதவும்.

ப்ரோன்கோஸ்கோபி


இந்த செயல்முறை ‘ப்ரோன்கோஸ்கோப்’பைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது – இது ஒரு கேமராவுடன் இணைக்கப்பட்ட ஒரு நெகிழ்வான குழாய்.
பயாப்ஸியை மேற்கொள்வதற்காக அது வாயின் வழியாக காற்றுப்பாதைகளுக்குள் செலுத்தப்படும்.

மின்காந்த வழிகாட்லின் மூலம் ப்ரோன்கோஸ்கோபி


மேம்பட்ட இந்த இந்க செயல்முறை திசுக்களின் துல்லியமான மாதிரியை அடைய ஒரே அளவிலான முடிச்சுகளை குறிவைக்கும் வழிகாட்டி முறையைப் பயன்படுத்துகிறது. முடிச்சுகளை துல்லியமாக அகற்றுவதற்கு, அறுவை சிகிச்சைக்கு முன் சாயத்தைக் கொண்டு முடிச்சுகளை குறிப்பதற்காக அவை பயன்படுத்தப்படுகின்றன.

சிகிச்சைகள்

தீங்கு விளைவிக்காத முடிச்சுகளுக்கு, எந்த சிகிச்சையும் தேவையில்லை. இருப்பினும், அது கிருமித்தொற்று காரணமாக இருந்தால், அந்தப் பிரச்சினை மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

‘பயாப்ஸி’க்கு உட்படுத்தப்பட்ட போதிலும் நோயாளி ஒரு உறுதியான நோயறிதலைப் பெற முடியாவிட்டால், அறுவைசிகிச்சை முறைகள் மூலம் முடிச்சுகளை அகற்ற ‘எக்சிஷன்’(முற்றிலுமாக அகற்றும் செயல்முறை) பயாப்ஸி பரிந்துரைக்கப்படும். ICTS இல், குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு அறுவை சிகிச்சை முறைகக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

வீடியோ உதவி தொராசி அறுவை சிகிச்சை (VATS)

காணொளி உதவியுடனான மார்பக அறுவை சிகிச்சை. மார்பில் 2-3 சாவித் துளை கீறல்கள் மூலம் நிகழ்கிறது, இது வேகமாக தேரிவர உதவுகிறது. பின்னர் முடிச்சு அகற்றப்படும்.

மனித இயந்திரத்தின் உதவியுடன் மார்பக அறுவை சிகிச்சை

இந்த செயல்முறை ஒரு மனித இயந்திரத் தளத்திலிருந்து செய்யப்படுகிறது. இது அறுவை சிகிச்சையின் போது அறுவை சிகிச்சை நிபுணருக்கு அதிக துல்லியத்தை கொடுக்க முடியும். கீறலுக்கான இடத்தை மேலும் சுட்டிக்காட்ட ஒரு சிறப்பு அடையாளச் சாயம் பயன்படுத்தப்படுகிறது. இது சிறிய வெட்டுக்ளுக்கும் குறுகிய மீட்பு நேரங்களுக்கும் வழிவகுக்கிறது.

தோரகோடோமி

இது திறந்த நுரையீரல் அறுவை சிகிச்சையின் பாரம்பரிய வடிவமாகும். இதன் மூலம் அறுவை சிகிச்சை நிபுணருக்கு முடிச்சுகளை அகற்ற மார்பு சுவரில் ஒரு கீறல் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சையின் இந்த வடிவம் மிகவும் ஊடுருவக்கூடியதாக இருப்பதால் குணமடைவதற்கு நீண்ட காலம் எடுப்பதுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காலமும் கூடுகிறது.