உணவுக்குழாய் என்பது வாயை வயிற்றுடன் இணைக்கும் ஒரு நீண்ட தசை உறுப்பு ஆகும். இது உணவை வயிற்றுக்குள் தள்ளும் தசைகளின் அடுக்குகளால் ஆனது.
வயிற்றின் திறப்பில், உணவுக்குழாய் சுழல் எனப்படும் உறுப்பு உள்ளது, இது உணவுகள் மற்றும் திரவங்களை செரிமானத்திற்காக வயிற்றுக்குள் நுழைய அனுமதிக்கும் ஒரு வழி உள்நுழைவாக(‘வால்வு’) செயல்படுகிறது.
உயிரணுக்களில் உள்ள டிஎன்ஏ சேதமடையும் போது, உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுகிறத. இதனால் உயிரணுக்கள் கட்டுப்பாடற்ற முறையில் பெருகும். இது ஒரு கட்டியை உருவாக்குகிறது.
உணவுக்குழாய் புற்றுநோய்க்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் நோய்க்கான பல ஆபத்து காரணிகள் உள்ளன. உணவுக்குழாய் புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகள் பின்வருமாறு:
உணவுக்குழாய் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள்:
சிங்கப்பூரில் உணவுக்குழாய் புற்றுநோய் நிபுணர், நோயின் நிலையைக் கண்டறிய ஆய்வகப் பரிசோதனையுடன் தொடர்ச்சியான உடல் பரிசோதனைகளை நடத்துகிறார்.
இது உணவுக்குழாயைக் காட்சிப்படுத்த ‘எக்ஸ்ரே இமேஜிங்’கின் சிறப்புத் தொடர். நோயாளி பேரியம் கொண்ட ஒரு திரவத்தை குடிக்கிறார். இது உணவுக்குழாயில் உள்ள எந்த கட்டிகளையும் எக்ஸ்-ரேயில் பார்க்க எளிதாக்குகிறது.
கட்டியை நேரடியாகக் காண உணவுக்குழாயில் ஒரு முனையில் LED விளக்கு மற்றும் கேமரா பொருத்தப்பட்ட குழாயை அறுவை சிகிச்சை நிபுணர் வைப்பார். பலூனைச் செருகுவதன் மூலம் சுருக்கப்பட்ட உணவுக்குழாயை விரிவுபடுத்துவதற்கும், உணவுக் குழாயில் இருக்கும் தடையை கீழ்நோக்கி நகர்த்துவதற்கும் எந்தவொரு தடையையும் விடுவிக்கவும் இது பயன்படுகிறது.
‘ஒசபோகஸ்கோபி’யின் போது, அறுவைசிகிச்சை நிபுணர் எந்த அசாதாரண அல்லது புற்றுநோய் உயிரணுக்களைப் கண்டறிய ஆய்வக சோதனைக்காக மாதிரி உணவுக்குழாய் திசுக்களை அகற்றலாம்.
இந்த செயல்முறை ஓயோஸ்பாகோகோபியின் போது உள் கட்டமைப்புகளைப் படம்பிடிக்க அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது உணவுக்குழாயின் திசுக்களில் வளரும் கட்டிகளைக் கண்டறிய உதவுகிறது.
மார்பு மற்றும் அடிவயிற்றில் பரவும் கட்டியின் அளவை மதிப்பிடுவதற்கு இந்த சோதனை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
PET CT ஸ்கேன் பெரும்பாலும் நோயின் பரவலை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் ‘ஸ்டேஜிங்’ செயல்முறைக்கும் சிகிச்சைக்கும் உதவுகிறது.
உணவுக்குழாய் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான செயல்முறை ‘ஓசோபாஜெக்டோமி’ ஆகும். புற்றுநோய் உயிரணுக்களைக் கொண்ட உணவுக்குழாயின் பகுதிகள் அல்லது அதைச் சுற்றியுள்ள திசுக்களை அகற்ற இந்த வகை செயல்முறை செய்யப்படுகிறது. அறுவைசிகிச்சை நிபுணர் வயிற்றை மேலும் மார்புக்கு மேலே வைப்பார் அல்லது உணவுக்குழாய் செயல்பாட்டைப் பாதுகாக்க சிறுகுடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்துவார். நிணநீர் புற்றுநோயை சரிபார்க்க அவர் நிணநீர் முனைகளிலிருந்து மாதிரிகளை அகற்றலாம்.
உணவுக்குழாய்க்கு அப்பால் கட்டி பரவாத சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும். துரதிர்ஷ்டவசமாக, 25 சதவீதத்திற்கும் குறைவான உணவுக்குழாய் புற்றுநோய்கள் இந்த ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுகின்றன. எனவே, அறிகுறிகளை நிவாரணம் அறுவை சிகிச்சை அடிக்கடி வழங்கப்படுகிறது. இங்கே எங்கள் மையத்தில், இயந்திரமனித-உதவியால் ‘ஓசோபாஜெக்டோமி’ செயல்முறையையே விருப்பமான செல்முறையாக கொண்டுள்ளோம். இந்த முறையின் மூலம், நோயாளிக்கு அடிவயிற்றில் 3 முதல் 4 சிறிய கீறல்கள் மற்றும் மார்பில் 3 முதல் 4 சிறிய கீறல்கள் மட்டுமே தேவைப்படும், இது விரைவாக குணமடைய உதவுகிறது. அணுகுமுறையின் மற்ற முறைகள் வீடியோ உதவி அறுவை சிகிச்சை அல்லது வழக்கமான திறந்த அறுவை சிகிச்சை ஆகும். உணவுக்குழாய் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
இந்த வகையான சிகிச்சையானது எக்ஸ்-கதிர்கள் மற்றும் புரோட்டான்களைப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த ஆற்றல் கற்றைகளை உருவாக்குவதை உள்ளடக்கியது. அவை துல்லியமாக புற்றுநோய் உயிரணுக்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று அவற்றைக் கொல்லும். உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதை அறுவை சிகிச்சைக்கு முன் பயன்படுத்தப்படலாம். அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு, இது கீமோதெரபியுடன் இணைந்து முதன்மையான சிகிச்சை முறையாக இருக்கும். கடைசியாக, உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது வலியைக் குறைப்பதற்கான ஒரு சிகிச்சையாக இருக்கலாம்.
இது வழக்கமாக வாரங்கள் அல்லது மாதங்களில் நிர்வகிக்கப்படும் வாய்வழி மற்றும் ஊசிவழி மருந்துகளின் ஒருங்கிணைந்த சிகிச்சையாகும். இவை புற்றுநோய் உயிரணுக்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் மிகவும் வலுவான மருந்துகள். மற்றும் புற்றுநோயைக் குறைக்க அறுவை சிகிச்சைக்கு முன் பயன்படுத்தப்படலாம். அறுவைசிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சையுடன் இணைக்கப்படலாம். கடைசியாக, உடல் முழுவதும் பரவியிருக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியைக் குறைக்க இது ஒரு வகையான சிகிச்சையாகும்.
இவை கட்டிகள் சிறியதாக இருக்கும் போதும் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவாமலிருக்கும் போதும் கண்டறியப்பட்ட கட்டிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன. மற்றும். இது நோயாளியின் உணவுக்குழாய் அகற்றப்படாமல் எண்டோஸ்கோபி முறையில் செய்யப்படுகிறது.
உணவுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கட்டி பெரியதாக இருக்கும் சந்தர்ப்பங்களில், விழுங்குவதை மேம்படுத்த, அடைப்பில் உள்ள துளையை வெட்டுவதற்கு எண்டோஸ்கோபிக் லேசர் சிகிச்சை பயன்படுத்தப்படலாம்.
இந்த சிகிச்சையானது வெப்பமற்ற ஒளி மூலம் செயல்படுத்தக்கூடிய மருந்துகளைப் பயன்படுத்துகிறது. இந்த மருந்துகள் புற்றுநோய் உயிரணுக்களால் உள் வாஙங்கப்பட்டு செயல்படுத்தப்படும் போது புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும். இது உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுகிறது. குறிப்பாக, விழுங்குவதில் இருக்கும் சிரமத்தை.