மேலோட்டம்

மூச்சுக்குழாய் கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து மார்பு வரை நீண்டுள்ளது. இது ஒரு அரை-மீள் குழாய் ஆகும். இது நெகிழ்வான மற்றும் திடமான கூறுகளைக் கொண்டுள்ளது. இது வெளியில் இருந்து நுரையீரலுக்கு காற்றை அனுப்ப அனுமதிக்கிறது. சுற்றியுள்ள கட்டமைப்புகளின் சிக்கலான தன்மை மற்றும் மூச்சுக்குழாயின் முக்கியத்துவம் காரணமாக, இதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் உயிருக்கு ஆபத்தானவை ஆகலாம்.

இங்கே, மார்பக அறுவை சிகிச்சைக்கான சர்வதேச மையத்தில் (ICTS), மூச்சுக்குழாய் கட்டிகள் மற்றும் மூச்சுக்குழாய் அடைப்புகளுக்கு சிகிச்சையளிப்பதில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளோம்.

மூச்சுக்குழாய் ஸ்டெனோசிஸ்

மூச்சுக்குழாய் ஸ்டெனோசிஸ் என்பது மூச்சுக்குழாய் குறுகுவது. இது மூச்சுத்திணறல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மற்றும் மூச்சுக்குழாயின் உள்ளே இருக்கும் நோயின் வகையைப் பொறுத்து திடீரென்று அல்லது படிப்படியாக இந்தப் பிரச்சனைகள் வரலாம்.

சில நேரங்களில், மூச்சுக்குழாயில் நீண்ட காலமாக செருகப்பட்ட ஒரு குழாய் அகற்றப்படும்போது ஸ்டெனோசிஸ் ஏற்படுகிறது. இது ஒரு ‘ட்ரக்கியோஸ்டமியை’ (கழுத்தில் ஒரு அறுவை சிகிச்சை மூலம் மூச்சுக்குழாயில் திறப்பு) அகற்றிய பின்னரும் நிகழலாம். மற்றும் குணமடைதல் வடுக்களை ஏற்படுத்தும்.

மூச்சுக்குழாய் ‘ஸ்டெனோசிஸ்ஸுக்கு’ சிகிச்சை தேவைப்படுகிறது. ஏனெனில் இது நோயாளியின் சுவாசத்தைத் தடுக்கிறது. மற்றும் ஸ்டெனோசிஸ் செயல்முறையின் வகை, அது அமைந்துள்ள இடம் மற்றும் நோயியல் வகையைப் பொறுத்தது.

மூச்சுக்குழாய் கட்டி

மூச்சுக்குழாய் கட்டிகள் சாதாரணமாக உருவாபவை அல்ல. மற்றும் அனைத்து கட்டிகளுடன் ஒப்பிடுகையில் இவை 2% க்கும் குறைவாகவே உருவாகின்றன. அவை வீரியம் மிக்கதாவோ (புற்றுநோயின் பாதிப்பு) அல்லது தீங்கற்றதாகவோ இருக்கலாம். இருப்பினும், அவை ஒரு குறுகிய குழாயை அடைப்பதால் அறிகுறிகள் தொடர்பான பிரச்சினைகள் ஒரே மாதிரியாக இருக்கும்.

மூச்சுக்குழாயின் முதன்மைக் கட்டிகள் உருவாவது அரிது. மற்றும் இரண்டாம் நிலை கட்டிகள் (பிறந்த இடங்களிலிருந்து மூச்சுக்குழாய்க்குப் பரவுதல்) மிகவும் பொதுவானவை. எங்கள் மையத்தில், சிக்கல்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும், அறிகுறிகளை விரைவாக அகற்றுவதற்கும் சிகிச்சையைத் தொடருவதற்கும் மற்ற சிறப்புச் சிகிச்சைகளுடன் நெருக்கமாக செயல்படுகிறோம்.

மூச்சுக்குழாயின் தீங்கற்ற கட்டிகளும் அதன் பாதையைத் அடைக்கும் போது அதே அளவிலான பலவீனத்தை ஏற்படுத்தும். எனவே, ‘ட்ரேச்சியல் ஸ்டீனோசிஸ்’ (காற்றுக்குழாய் குறுகுதல்) அல்லது ‘ட்ரேச்சியோப்ரான்சியல் மாலேசியா’ (மூச்சுக்குழாயின் சுவரின் பலவீனம்) ஆகியவை கட்டி தீங்கற்றதா அல்லது வீரியமானதா என்பதை வரையறுக்கும் பொதுவான காரணியாக இருக்கலாம்.

அறிகுறிகள்

மூச்சுக்குழாய் கட்டிகள் மற்றும் மூச்சுக்குழாய் ஸ்டெனோசிஸ் அறிகுறிகள் பெரும்பாலும் தடுப்பை உண்டாக்கும் அம்சங்களுடன் தொடர்புடையவை:

  • ‘ஸ்ட்ரைடார்’ (அசாதாரண, உயர்-சுருதி, 'இசை' சுவாச ஒலி) மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்
  • மூச்சு விடுவதில் சிரமம்
  • அரிதாக, அவர்கள் குரல் கரகரப்பான தன்மைக்கு வழிவகுக்கும் நரம்பு வாதத்துடன், வெளியில் இருந்து அழுத்தும் அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்.

நோய் கண்டறிதல் மற்றும் விசாரித்தல்

இந்தச் சந்தர்ப்பங்களில் வெளிப்படையான அறிகுறிகள் தெரியும் வரை நோயறிதல் கடினமாக இருக்கலாம். அரிதாக, அவர்கள் மற்ற நிலைமைகளுக்கு பரிசோதிக்கப்படும்போது, அவை தற்செயலாகக் கண்டறியப்படலாம்.

ப்ரோன்கோஸ்கோபி

நோய்களைக் கண்டறிய ஒரு நெகிழ்வான மற்றும் கடினமான மூச்சுக்குழாய் பரிசோதனை தேவைப்படும். பரிசோதனையின் போது சில நேரங்களில் ஒரு திசு நோயறிதலுக்காக பெறப்படும். சில சமயங்களில் ப்ரோன்கோஸ்கோபி, நோயின் வெளிப்பாட்டைப் பொறுத்து நோயறிதலாகவும் சிகிச்சையாகவும் இருக்கலாம்.

CT ஸ்கேன்

கட்டியின் அளவு, மூச்சுக்குழாயின் ‘லுமேன்’ (உட்புற இடைவெளி) மற்றும் சுற்றியுள்ள கட்டமைப்புகளுடன் தொடர்பு ஆகியவற்றை தீர்மானிக்க CT ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது. முப்பரிமாண புனரமைப்பு சில நேரங்களில் கட்டியின் அளவையும் மூச்சுக்குழாயின் உட்புற இடைவெளி குறுகலடைவதையும் கண்டறியும்.

PET CT ஸ்கேன்

அருகில் உள்ள உறுப்புகள் அல்லது திசுக்களில் பரவல், ‘எக்ஸ்ட்ராடோராசிக்’ (மார்பகத்தின் வெளிப்புறப் பரவல்) மேலும் ‘மெட்டாஸ்டேடிக்’ (உடலின் மற்ற பாகங்களுக்கு புற்றுநோய் உயிரணுக்களின் பரவல்) முதலியவற்றைக் கண்டறிய. இந்த உயிரியல் ஸ்கேனின் மூலம் சுற்றியுள்ள நிணநீர் முனைகளின் படத்தைப் பெறுவதுடன் அவற்றின் நிலையையும் அறியலாம்.

நுரையீரல் செயல்பாடு சோதனை

நுரையீரல் எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது என்பதையும் மூச்சுக்குழாய் அடைப்பு முறை பற்றியும் அறிந்து கொள்ள.

பயாப்ஸி

பொதுவாக 'பரோன்கோஸ்கோப்’ செய்யப்படும் அதே நேரத்தில் கட்டியின் ‘பயாப்ஸி’ தொடக்கத்தில்லேயே செய்யப்படுகிறது. இதற்கு பயாப்ஸி வடிகுழாய்களுடன் கூடிய கடினமான மற்றும் நெகிழ்வற்ற ‘bronchoscope’ (ஒரு லென்ஸ் அல்லது சிறிய வீடியோ கேமரா முனையில் பொருத்தப்பட்ட மெல்லிய குழாய்) தேவைப்படலாம்.

மூச்சுக்குழாய் கட்டிக்கான சிகிச்சைகள்

இந்தச் சிகிச்சை, பொதுவாக நோய் எந்த கட்டத்தில் உள்ளது என்பதை பொறுத்து உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சையே இந்த நோயின் சிகிச்சையில் முக்கியப் பங்கை ஆற்றுகிறது.

அறுவை சிகிச்சை

வழக்கமாக, தீங்கற்ற அல்லது வீரியம் மிக்க கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது விருப்பமான தேர்வாகும். ஏனென்றால், மூச்சுக்குழாய் காற்றை கடத்துவதற்கு பொறுப்பாகும். அதில் ஒர் அடைப்பு ஏற்பட்டால், நோயாளி மிக விரைவாக சுவாசக் கோளாறுக்கு ஆளாவார்.
அறுவைசிகிச்சை மூலம் மூச்சுக்குழாய் கட்டியை அகற்றுவது ஒரு சிக்கலான செயல்முறையாகும். ஏனெனில் மூச்சுக்குழாயின் உடற்கூறியல் மற்றும் அதன் இரத்த ஓட்ட முறையும் சிக்கலானது. இங்கே ICTS இல், நாங்கள் மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி மூச்சுக்குழாயின் அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறோம். மூச்சுக்குழாயில் ஒரு வெற்றிகரமான அறுவை சிகிச்சையானது கட்டியை முழுவதுமாக அகற்றுவது, அதன் மென்மையான இரத்த விநியோகத்தை பராமரிப்பது மற்றும் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் சிக்கல்களை நிர்வகிப்பதும் ஆகும்.
நீங்கள் நன்கு புரிந்துகொள்வதற்காக திட்ட வரைபடங்கள் மற்றும் அறுவை சிகிச்சைப் படங்கள் மூலம் உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் உங்களுக்கு விரிவாக விளக்குவார்.

ப்ரோன்கோஸ்கோபிக் சிகிச்சைகள்

மூச்சுக்குழாய் கட்டி மற்றும் நோய் உள்ள அனைத்து நோயாளிகளும் அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர்கள் அல்லர். அவர்களில் பலருக்கு, மீண்டும் சுவாசிக்க உதவ, வலிநீக்கும் சிகிச்சைகள் தேவைப்படலாம்.

மூச்சுக்குழாய் சிகிச்சைகள் ஒரு சிறிய கேமராவைப் பயன்படுத்துகின்றன. இது வாய் வழியாக செருகப்பட்டு பின்னர் மூச்சுக்குழலைப் பார்க்கிறது. மூச்சுக்குழாய் மற்றும் மூச்சுக்குழாய் ஸ்கோப்பைப் பயன்படுத்தி பல வகையான சிகிச்சைகள் செய்யப்படலாம். ICTS இல், எங்கள் நோயாளிகளுக்கு உதவ பல மூச்சுக்குழாய் சிகிச்சைகள் உள்ளன.

  1. ‘ஸ்டென்ட்’ சிகிச்சை: மூச்சுக்குழாய் திறந்த நிலையில் இருக்க சிலிகான் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட குழாய் செருகப்படுவது காற்றுப்பாதை ‘ஸ்டென்ட்’ ஆகும். இது சிறப்பு உபகரணங்கள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. மற்றும் இது அறுவை சிகிச்சைக்குப் முன் அல்லது அதற்கு பிறகு பயன்படுத்தப்படலாம். மேலும் நோயாளிக்கு ஏற்படும் வலி அல்லது நோயின் தீவிரத்தை குறைக்க இது உதவுகிறது. இது ஒரு குறுகிய சுவாசப்பாதையைத் திறக்கவும் நோயாளி மீண்டும் சுவாசிக்கவும் உதவுகிறது. இது அறுவை சிகிச்சை அல்லது லேசர் சிகிச்சைக்கு துணையாக இருக்கலாம்.
    இது பொதுவாக ஒரு கடினமான மூச்சுக்குழாய் மற்றும் ICTS இல் உள்ள மேம்பட்ட சாதனங்களின் உதவியுடன் செய்யப்படுகிறது.
  2. லேசர் சிகிச்சை: ICTS இல், கட்டியை அகற்ற அல்லது சுருக்குவதற்கு மேம்பட்ட லேசர் சிகிச்சையைப் பயன்படுத்துகிறோம். இது அறுவை சிகிச்சைக்கு முன் அல்லது சில சமயங்களில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு செய்யப்படலாம். இதற்குப் பிறகு ‘ஸ்டென்ட்’ சிகிச்சையும் செய்யப்படலாம். இது நோயினால் ஏற்படும் வலி மற்றும் அறிகுறிகளைப் போக்கி நோயாளி மீண்டும் சிரமமின்றி சுவாசிக்க பயன்படுத்தப்படலாம்.
கதிர்வீச்சு சிகிச்சை

நோயாளி அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவர் என்றும் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு நிணநீர் முனையங்கள் அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டாலும், நோயாளிக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படலாம். சில நேரங்களில் கதிர்வீச்சு சிகிச்சையானது கட்டியின் அளவைக் குறைக்க அறுவை சிகிச்சைக்கு முன் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் சில சமயங்களில் அது கட்டி மீண்டும் வராமல் தடுக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு அப்பகுதியை கிருமி நீக்கம் செய்ய துணை சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் உங்களை ஒரு கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணரிடம் பரிந்துரைப்பார். அவர் இந்த சிகிச்சை எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது பற்றி மேலும் விரிவாக உங்களுக்கு விளக்குவார்.

கீமோதெரபி / இம்யூனோதெரபி

பெரிய மூச்சுக்குழாய் கட்டிகளுக்கு சிகிச்சையளிக்க கதிர்வீச்சு சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சையுடன் இணைந்து கீமோதெரபி பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக தனியாக அல்லது மற்ற மருந்துகளுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இது கட்டி உயிரணுக்களின் வளர்ச்சியை நிறுத்த அல்லது மெதுவாக்க முயற்சிக்கும். இந்த புதிய வகை சிகிச்சையானது நோயெதிர்ப்பு சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது.
இந்த சிகிச்சையின் விவரங்கள் உங்கள் நோயின் தன்மையை மதிப்பாய்வு செய்யும் மருத்துவ புற்றுநோயியல் நிபுணரிடம் கலந்தாலோசிக்கப்படும்.