தைமோமா & தைமிக் கார்சினோமா

மேலோட்டம்

‘தைமோமா’ மற்றும் ‘தைமிக் கார்சினோமா’ என்றால் என்ன?

‘தைமோமா’ மற்றும் ‘தைமிக் கார்சினோமா’ ஆகியவை ‘தைமஸ்’ சுரப்பியின் வெளிப்புற மேற்பரப்பை உள்ளடக்கிய உயிரணுக்களில் உருவாகக்கூடிய இரண்டு வகையான அரிய புற்றுநோய்கள் ஆகும். தைமஸ் சுரப்பி என்பது ‘மீடியாஸ்டினம்’மின் (மார்பக எலும்புக்குப் பின்னால்) இருக்கும் ஒரு உறுப்பு. இது பருவமடையும் வரை செயல்படுகிறது மற்றும் டி-உயிரணுவின் மத்தியஸ்த நோய் எதிர்ப்பு சக்திக்கு பொறுப்பாகும். தைமஸ் சுரப்பி பின்னர் சுருங்கி மறைந்துவிடும்.

இச்சுரப்பி தொடர்ந்து இருந்தால், அது "தைமோமா" என்ற கட்டியை உருவாக்கலாம். இது ‘மயஸ்தீனியா கிராவிஸ்’, முடக்கு வாத ‘ஸ்ஜோகிரென்ஸ் சிண்ட்ரோம்’(நோயெதிர்ப்பு மண்டலத்தின் கோளாறு) மற்றும் ‘ஹைபோகாமக்ளோபுலினீமியா’ போன்ற பிற நோய்களுடன் தொடர்புடையது. இது அரிதானது. மற்ற எல்லா புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் 1%க்கும் குறைவாகவே உள்ளது.

தைமஸில் உருவாகும் 90% புற்றுநோய்கள் தைமோமாக்கள். அவற்றில் 10% ‘தைமிக் கார்சினோமா’, ‘லிம்போமாஸ்’ அல்லது ‘கார்சினாய்டு’ கட்டிகளாக இருக்கலாம். தைமோமா அறுவை சிகிச்சை என்பது தைமோமாவை அகற்றுவதற்கான ஒரு பொதுவான அறுவை சிகிச்சை முறையாகும். இது ஒரு இடைநிலை ‘ஸ்டெர்னோடமி’(இதயம் அல்லது அருகிலுள்ள உறுப்புகள் மற்றும் இரத்த நாளங்களை அடைய அனுமதிக்கும் ஒரு செயல்முறை). இது ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணரால் செய்யப்படுகிறது.

அறிகுறிகள் மற்றும் நோய் கண்டறிதல்

‘தைமோமா’ மற்றும் ‘தைமிக் கார்சினோமா’வால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 25% நோயாளிகளில் அறிகுறிகள் தெரியாது. நோயாளி மற்ற விஷயங்களுக்காக பரிசோதிக்கப்படும்போது அல்லது வழக்கமான மார்புப் பகுதி எக்ஸ்ரேயின் போது அவை பொதுவாக கண்டறியப்படுகின்றன.

இவற்றின் சில அறிகுறிகளில், மார்பு வலி, இருமல் மற்றும் மேல் காற்றுப்பாதை பிரச்சனை ஆகியவை அடங்கும். அவை ‘மயஸ்தீனியா கிராவிஸு’டன் தொடர்புடையதாக இருக்கலாம். மற்றும் நோயாளிக்கு தசை பலவீனம், சோர்வு அல்லது மூச்சுத் திணறல் அல்லது விழுங்குவதில் சிரமம், அத்துடன் இரத்த சோகை போன்றவை இருக்கலாம்.

நோயறிதலுக்கான பெரும்பாலான நேரம் CT ஸ்கேன் உதவியுடன் செய்யப்படுகிறது. இதற்கு பயாப்ஸி தேவையில்லை. ஆனால் ‘தைமிக் கார்சினோமா’ இருக்கும் என்ற சந்தேகம் இருந்தால் அல்லது கட்டி பெரியதாக இருந்தால் அல்லது ‘லிம்போமா’ போன்ற பிற நோய்கள் இருந்தால் ஸ்கேனில் நோயறிதல் சாத்தியப்படவில்லை என்றால் பயாப்ஸி செய்யப்படும்.

விசாரித்தல்

மார்பு எக்ஸ்ரே

இந்தக் கட்டிகள் தற்செயலாக மார்புப்பகுதி எக்ஸ்ரேயில் கண்டறியப்படலாம்.

CT ஸ்கேன்

இது கட்டியின் அளவையும் அருகிலுள்ள கட்டமைப்புகளுடன் அதன் தொடர்பையும் கண்டறிய செய்யப்படும் மிகவும் பொதுவான ஆய்வாகும்

PET CT ஸ்கேன்

புற்றுநோய் உறுதி செய்யப்பட்டால், PET CT ஸ்கேன் மூலம் நோயின் அளவையும், உடலின் மற்ற பகுதிகளில் நோய் பரவியிருந்தால் அதைக் கண்டறியவும், நிணநீர் முனையின் ஈடுபாட்டைக் கண்டறியவும் இது செய்யப்படுகிறது.

எம்ஆர்ஐ ஸ்கேன்

நரம்புகள் அல்லது இரத்த நாளங்களின் ஈடுபாடு இருக்கிறது என்ற சந்தேகம் எழும் போது அரிதாகவே செய்யப்படுகிறது.

உங்கள் விஷயத்தில் என்னென்ன விசாரணைகள் செய்ய வேண்டும் என்பதை உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் உங்களுக்கு விளக்குவார்.

சிகிச்சைகள்

சிகிச்சையானது பொதுவாக நோயின் கட்டத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் அறுவை சிகிச்சையே இந்த நோயில் பெரும் பங்கை ஆற்றுகிறது.

அறுவை சிகிச்சை

அறுவைசிகிச்சை, கட்டியை முழுமையாக பிரித்தெடுத்தல் அல்லது கட்டியை செயலிழக்கச் செய்யதல் ஆகியவற்றிற்காகச் செய்யப்படலாம்.

‘தைமோமாவை’ முழுமையாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது அறுவை சிகிச்சையின் குறிக்கோள். இங்கே ICTS இல், நாங்கள் இயந்திர-மனித உதவியுடன் குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய அணுகலின் மூலம் அறுவை சிகிச்சையை வழங்குகிறோம். அங்கு புற்றுநோய் சிகிச்சையில் எந்த குறையும் இல்லாத வகையில் ஒரு ‘சாவித்துளை’ அறுவை சிகிச்சை மூலம் நியாயமான அளவிலான தைமோமாக்கள் அகற்றப்படுகின்றன. ஆனால் ‘தைமோமா’க்கள் பெரியதாக இருக்கும் போது அல்லது அவை ‘தைமிக் கார்சினோமாவாக’ இருந்தால், அவற்றை முழுமையான அகற்ற ஒரு முழுமையான அறுவை சிகிச்சை, ‘median sternotomy’(இதயம் அல்லது பிற உடல் பாகங்களுக்கான அணுகலை உருவாக்குவதற்கான ஒரு செயல்முறை), அல்லது ‘ஹெமி-கிளாம்ஷெல்’ அல்லது ‘தோரகோடமி’(மார்பின் வலது அல்லது இடது பக்கத்தில் மார்புக் கீறல்செய்தல்) உள்ளடக்கியதாக இருக்கும்.

உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் உங்கள் விஷயத்தில் இருக்கும் தேர்வுகளைப் பற்றி உங்களுக்கு விளக்குவார். மேலும் உங்கள் விஷயத்தில் மிகவும் பொருத்தமான அறுவை சிகிச்சை முறைகள் பற்றி உங்களுடன் விரிவாக விவாதிப்பார்.

கதிரியக்க சிகிச்சை

கதிரியக்க சிகிச்சை பொதுவாக ‘தைமோமாக்’கள் மற்றும் ‘தைமிக் கார்சினோமா’ ஆகியவற்றில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நிகழும் அபாயத்தைக் குறைக்க துணை சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது. கட்டி பெரியதாக இருந்தால் மற்றும் மீண்டும் உருவாவதற்க்கான ஆபத்து அதிகமாக இருந்தால், கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணருடன் கலந்துரையாடிய பிறகு நோயாளிக்கு துணை கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும்.

கீமோதெரபி

கீமோதெரபி ‘தைமிக் கார்சினோமா’ நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அல்லது ‘தைமோமா’வின் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும் அல்லது அறுவைச்சிகிச்சையால் அகற்றப்பட முடியாத மீண்டும் மீண்டும் வரும் புற்று நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் அவை கட்டியின் அளவைக் குறைக்க அறுவை சிகிச்சைக்கு முன் பயன்படுத்தப்படலாம்.

இம்யூனோதெரபி

இந்த புதிய சிகிச்சை முறை இன்னும் சோதனை நிலையில் உள்ளது. ஆனால் சில சந்தர்ப்பங்களில், புற்றுநோய் முற்றிய நிலையில் இருக்கும் போது நோயைக் கட்டுப்படுத்த உதவும் துணை அல்லது முதன்மை சிகிச்சையாகப் பயன்படுத்தலாம். இதைப் பற்றி மருத்துவ புற்றுநோயியல் நிபுணரிடம் கலந்தரையாடலாம். மற்றும் சிகிச்சை நெறிமுறையை அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் மற்றும் நோயாளி ஆகியோருக்கு இடையே முடிவு செய்யப்படலாம்.