மார்பகக் குழி என்பது விலா எலும்புகள், முதுகெலும்பு மற்றும் மார்பெலும்பு ஆகியவற்றால் சூழப்பட்ட ஒரு வெற்று இடமாகும். இவை மற்ற தசைகள் மற்றும் திசுக்களுடன் சேர்ந்து மார்புச் சுவரை உருவாக்குகின்றன. இது மார்பகக் குழிக்குள் இருக்கும் நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்கிறது.
மார்பகக் குழியை மூடியிருக்கும் எலும்புகள் திடமானவை. மற்றும் வலிமையானவை. ஆனால் அதே நேரத்தில் சுவாசத்துடன் தொடர்புடைய இயக்கத்தை அனுமதிக்கும் அளவுக்கு நெகிழ்வானவை.
மார்புச் சுவரில் உருவாகும் கட்டிகள் மிகவும் அரிதானவை. ஆனால் அவை நிகழும்போது, கண்டறிதல் மற்றும் நிர்வகிப்பது ஒரு சவாலான பிரச்சனையாக இருக்கலாம். இந்தகைய கட்டியானது தீங்கற்றதாக இருக்கலாம் (புற்றுநோய் அல்லாத மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவாது) அல்லது வீரியம் மிக்கதாக (புற்றுநோய் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும்) இருக்கலாம். இந்த இரண்டு கட்டிகளும் மிகவும் ஒத்ததாக இருப்பதால், இரண்டையும் வேறுபடுத்துவது மிகவும் சவாலானது. மார்புச் சுவரில் பலவிதமான தசைகள், எலும்புகள் மற்றும் திசுக்கள் இருப்பதால், கட்டியின் தோற்றத்தின் மூலத்தைக் கண்டறிவது கடினமாக இருக்கும்.
விலா எலும்புகளில் உள்ள அசாதாரணங்கள், மார்புச் சுவர் கட்டிகள், வலிமிகுந்த எலும்பு முறிவு, மார்பு குழிக்குள் இரத்தப்போக்கு அல்லது தற்செயலான கண்டுபிடிப்பு போன்றவையாகவும் வெளிப்படும்.
மார்புச் சுவர் அல்லது விலா எலும்புகளில் உள்ள கட்டிகளின் அறிகுறிகள் பின்வருமாறு:
மார்புச் சுவர் மற்றும் விலா எலும்புக் கூண்டுகளில் ஏதேனும் அசாதாரணங்கள் உள்ளனவா என்பதைத் தீர்மானிக்க, பரிசோதிப்தற்கான ஆரம்பக் கருவியாக இது பயன்படுத்தப்படுகிறது.
இது மார்புக் கட்டியைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் மிகவும் ஆழமான இமேஜிங் சோதனை. கட்டியின் அளவு, கட்டி எவ்வளவு சுறுசுறுப்பாக உள்ளது, மற்றும் கட்டி தோன்றிய பகுதி முதலியவற்றைக் கண்டறிய இது மருத்துவருக்குத் துணைபுரிகிறது.
இந்த சோதனையானது கட்டியின் ஆழம் மற்றும் அளவை அளவிடவும் அறுவை சிகிச்சை தேவைப்படும் பகுதிகள் மற்றும் மாற்று பொருட்களை பயன்படுத்தி மருத்துவர் எவ்வாறு சேதமடைந்த திசுக்களை மீட்டெடுக்க முடியும் என்பதையும் அறிய பயன்படுகிறது.
அறுவை சிகிச்சை நிபுணர் கட்டியின் வளர்ச்சியின் அளவைக் கண்டறிய ‘எம்ஆர்ஐ ஸ்கேன்’ உதவுகிறது. ஒரு கட்டி வளரும்போது அது தசை திசுக்களில் படையெடுக்கத் தொடங்குகிறது. நரம்புகள், நரம்பியல் இரத்தக் குழாய் கட்டு மற்றும் முதுகெலும்பு நெடுவரிசை முதலியவற்றைத் தாக்கத் தொடங்கக்கூடும் என்பதால் கட்டியுடன் நரம்பு மண்டல ஈடுபாட்டின் அளவைக் கண்டறியவும் இது உதவுகிறது.
இது ஒரு உயிரியல் சோதனையாகும். இது கட்டி பரவலின் அளவை மதிப்பிட அனுமதிக்கிறது. உடலில் வேறு எங்காவது நோய் இருக்கிறதா என்பதையும் இதன் மூலம் மதிப்பிட முடியும். இது மீண்டும் நிகழக்கூடிய சாத்தியத்தை தீர்மானிக்கவும் பயன்படுத்தப்படலாம்.
மிகவும் பொதுவான விலா எலும்பு அசாதாரணங்கள் விலா எலும்பு முறிவுகள் ஆவை. அவை ‘ஃபிளைல்’ பிரிவுகளுடனும் இருக்கலாம் அல்லது ‘ஃபிளைல்’ பிரிவுகளுடன் இல்லாமலும் இருக்கலாம். விலா எலும்புக் கூண்டின் ஒரு பகுதி ஒரே விலா எலும்பில் இரண்டு சந்திப்புகளில் உடைந்து அந்தப் பகுதி சுவாசத்தைச் செயலிழக்கச் செய்து, மற்ற மார்புச் சுவரில் இருந்து பிரிக்கப்படும் நிலையே ‘ஃப்ளைல்’ பிரிவு ஆகும்.
ஐசிடிஎஸ்ஸில், விலா எலும்புகளில், முன்னரே செய்யப்பட்ட விலா தகடுகளை பொருத்துவதன் மூலம் இந்த சிக்கலை எதிர்கொள்கிறோம். இது சுவாச இயக்க ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது.
பொதுவாக, தீங்கு விளைவிக்காத மார்பு சுவர் கட்டிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றன. அறுவைசிகிச்சை என்பது இலக்கு திசுக்களை அகற்றுவதாகும். சில சமயங்களில் கட்டி பெரியதாக இருக்கும்போது, மார்புச் சுவரின் மறுசீரமைப்புக்குப் பிறகு பிரித்தெடுத்தல் தேவைப்படும்.
வீரியம் மிக்க கட்டிகளுக்கு அதே செயல்முறை தேவைப்படும். இருப்பினும், அவர்களுக்கு தொடர்புடைய தசைகள் நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களின் பிரித்தல் தேவைப்படலாம். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவர்களுக்கு மறுசீரமைப்பு தேவைப்படும். இங்கே எங்கள் மையத்தில், உலகின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட உலோகம் அல்லாத உள்வைப்பைச் செய்து புனரமைப்பதில் நாங்கள் முன்னோடிகளாக இருக்கிறோம். மறுசீரமைப்புக்குப் பிறகு, நோயாளியின் சுவாச இயக்கவியல் விரைவாக மேம்படுத்தப்பட வேண்டும். கட்டியானது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருந்தால், கதிர்வீச்சு சிகிச்சை மற்றும்/அல்லது கீமோதெரபி வடிவில் கூடுதல் சிகிச்சை தேவைப்படும்.