மேலோட்டம்

நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன

நுரையீரல் என்பது மார்புக் குழிக்குள் அமைந்துள்ள இரண்டு உறுப்புகள். இவை சுவாசத்தின் போது வாயுக்களின் பரிமாற்றத்திற்கு பொறுப்பேற்கின்றன. உயிரணுக்கள் உயிரணுப் பிரிவு சுழற்சியின் கட்டுப்பாட்டை இழந்து, வேகமாகப் பெருகத் தொடங்கும் போது, கட்டுப்பாடற்ற முறையில் நுரையீரலுக்குள் கட்டிகளை உருவாக்கும் போது புற்றுநோய் ஏற்படுகிறது. நுரையீரல் புற்றுநோய், நோயின் கொடிய வடிவங்களில் ஒன்றாக இருக்கிறது. நுரையீரல் புற்றுநோய் நுரையீரலின் திசுக்களில் ஏற்பட்டு முழு உறுப்புக்கும் பரவத் தொடங்கும்.

உள்ளிழுக்கும் சிகரெட் புகையில் அதிக எண்ணிக்கையிலான கார்சினோஜென்கள் இருப்பதால், புகைபிடிப்பவர்களுக்கு புற்றுநோய்க்கு உள்ளாகும் ஆபத்து அதிகம் உள்ளது - உயிரணுக்களுக்கு டிஎன்ஏ சேதத்தை ஏற்படுத்தும் பொருட்கள் இதனால் கட்டுப்பாடற்ற உயிரணுப் பிரிவுக்கு வழிவகுக்கும். இருப்பினும், சமீப ஆண்டுகளில், பெண்களுக்கிடையில், புகைபிடித்தலுக்குத் தொடர்பில்லாத நுரையீரல் புற்றுநோய்கள் அதிகரித்து வரும் போக்கு உள்ளது.

lung cancer stages

நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்

துரதிர்ஷ்டவசமாக, நோயின் ஆரம்ப கட்டங்களில், இது அரிதாகவே எந்த அறிகுறிகளையும் காட்டுகிறது. நோய் அதன் பிற்பகுதிக்கு முன்னேறிய பின்னரே அறிகுறிகள் தோன்றும்.
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்:

 • நீங்காத புது இருமல்
 • இருமலின் போது இரத்தம் வெளுயாதல், சிறிதளவாகவும் இருக்கலாம் [ஹீமோப்டிசிஸ்]
 • மூச்சு திணறல்
 • நெஞ்சு வலி
 • குரல் கரகரப்பு
 • முயற்சி செய்யாமல் எடை குறைதல்
 • எலும்பு வலி
 • தலைவலி

சிங்கப்பூரில் நுரையீரல் புற்றுநோய் நிபுணரை எப்போது பார்க்க வேண்டும்?

மேலே கூறப்பட்டதைப் போன்ற அறிகுறிகளை நீங்கள் கவனிக்கத் தொடங்கும் போது உடனடியாக சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நுரையீரல் புற்றுநோய் நிபுணர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாதவர்களுக்கு உதவ ஆலோசனை, மருந்துகள் மற்றும் சிகரெட்டுகளுக்கு மாற்று தயாரிப்புகள் போன்ற வழிகாட்டப்பட்ட உத்திகளையும் வழங்க முடியும்.

நுரையீரல் புற்றுநோய்க்கான காரணங்கள்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, சிகரெட் புகையில் உயிரணுக்களை சேதப்படுத்தும் பொருள்கள் உள்ளன. நுரையீரல் திசுக்களுக்கு இந்த சேதம் கிட்டத்தட்ட உடனடியாக ஏற்படலாம். உயிரணுக்கள் முரட்டுத்தனமாக செல்வதைத் தடுக்கவும் சேதத்தை சரிசெய்யவும் உடலில் "தவறியக்க-பாதுகாப்புகள்" உள்ளன. இருப்பினும், காலப்போக்கில், சேதத்தின் ஒட்டுமொத்த விளைவு உடலால் கையாள முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கலாம். இதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

நுரையீரல் புற்றுநோயின் வகைகள்

types of lung cancer

நுரையீரல் புற்றுநோயை இரண்டு பெரிய குழுக்களாக பிரிக்கலாம். நுண்ணோக்கின் கீழ் நுரையீரல் உயிரணுக்களை பரிசோதித்தல் மற்றும் கவனிப்பதன் மூலம் இது தீர்மானிக்கப்படுகிறது:

 • சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோய் கடுமையான புகைப்பிடிப்பவர்களுக்கு மிகவும் பொதுவானது.
 • ‘ஸ்குவாமஸ் செல் கார்சினோமா’, ‘அடினோகார்சினோமா’ மற்றும் பெரிய உயிரணு ‘கார்சினோமா’ உள்ளிட்ட அனைத்து வகையான நுரையீரல் புற்றுநோய்களையும் தொகுக்க மருத்துவர்கள் பயன்படுத்தும் சொல், சிறியதல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோய்.

ஆபத்துக் காரணிகள்

இதை வளர்வதைத் தடுக்க சில வாழ்க்கை முறை தேர்வுகளை மாற்றலாம். இருப்பினும், குடும்ப வரலாறு மற்றும் மரபியல் போன்ற பிற காரணிகளைக் கட்டுப்படுத்த முடியாது.

நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகள் பின்வருமாறு:

 • புகைபிடித்தல் நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். நிகோடினின் அடிமையாக்கும் பண்புகளுடன் அதன் ஒட்டுமொத்த விளைவும் புகைப்பபிடித்தலை விட்டு விலகுவதைக் கடினமாக்குகிறது. இருப்பினும், புகைப்பபிடித்தலை விட்டு விலகுவது நோயை உருவாக்கும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது.
 • அதே வகையான புற்றுநோய்களின் பாதிப்பு இருப்பதால், புகைபிடிப்போரின் புகையைச் சுவாசிப்பதால் கூட, நுரையீரல் புற்றுநோயை உருவாகும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
 • மற்ற வகை புற்றுநோய்களுக்கு அல்லது நுரையீரல்களுக்கு சிகிச்சையளிக்க எடுக்கப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சையானது கூட நுரையீரல் புற்றுநோயின் வாய்ப்பை அதிகரிக்கும். ஏனெனில் இது உயிரணுக்களின் ‘டி.என்.ஏவை’ சேதப்படுத்தும்.
 • நம்மைச் சுற்றியுள்ள மண், பாறை மற்றும் நீரில் ஏற்படும் இயற்கை முறிவு செயல்பாட்டின் போது உற்பத்தி செய்யப்படும் ‘ராண்டன்’ வாயுவின் வெளிப்பாட்டிற்கு உள்ளாவது. இருப்பினும், இது அதிக அளவில் ஏற்படும் போது நச்சுத்தன்மையுடையதாக மாறும்.
 • ஒருவரின் பணியிடத்திலோ அல்லது வசிக்கும் இடத்திலோ கல்நார் மற்றும் உயிருள்ள திசுக்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் திறன் கொண்ட பிற பொருள்களைக் கையாளுதல்.
 • அசாதாரண உயிரணு வளர்ச்சிக்கான மரபணு குறியீட்டு முறை ஒர் தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அனுப்பப்படுவதால், நுரையீரல் புற்றுநோயின் குடும்ப வரலாறும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

சிக்கல்கள்

நுரையீரல் புற்றுநோயால் பின்வரும் சிக்கல்கள் ஏற்படலாம்:

 • புற்றுநோய் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். ஏனெனில் கட்டிகள் பெரிதாகி முக்கிய காற்றுப்பாதைகளைத் தடுக்கும். திசுக்களுக்கு ஏற்படுத்தப்படும் சேதம், மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரல் முழுமையாக விரிவடைவதைத் தடுக்கும். மேலும் இடைநிலை திரவம் (‘ப்ளூரல் எஃப்யூஷன்’) கசிவு மற்றும் திரட்சியை ஏற்படுத்தும்.
 • நுரையீரல் திசுக்களுக்கு ஏற்படும் சேதத்தின் விளைவாக இருமலின் போது இரத்தத்தை கக்குதல் (ஹீமோப்டிசிஸ்) ஏற்படலாம். இரத்தப்போக்கு கடுமையாக இருந்தால், மரணமும் ஏற்படலாம்.
 • நுரையீரல் மற்றும் எலும்புகள் போன்ற புற்றுநோய் பரவும் உடலின் மற்ற பகுதிகளில் வலி உணரப்படலாம்.
 • புற்றுநோய் உயிரணுக்கள் நுரையீரலின் புறணியை உடைத்து இரத்த ஓட்டம் வழியாக தொலைதூர இடங்களுக்கு பயணிக்கும் போது புற்றுநோய் உயிரணுக்களின் ‘மெட்டாஸ்டாசிஸ்’ ஏற்படுகிறது. இதனால் உடலின் மற்ற பகுதிகளுக்கு புற்றுநோய் பரவுகிறது.
lung cancer complications

பகுப்பாய்வு

நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை

மார்பக அறுவை சிகிச்சைக்கான சர்வதேச மையத்தில் நாங்கள் நுரையீரல் புற்றுநோய்க்கான விரிவான பரிசோதனை திட்டத்தை வழங்குகிறோம், இதில் மார்பின் குறைந்த அளவிலான ‘CT ஸ்கேன்’ மற்றும் விரிவான நுரையீரல் செயல்பாட்டு சோதனை அடங்கும்.
நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களுக்குத் தகுதிபெறும் அல்லது கலந்தாலோசிப்பு தேவைப்படும் நபர்கள் இங்கே கிளிக் செய்வதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளவும்.

‘இமேஜிங்’ சோதனைகள்

மார்பு எக்ஸ்ரே - பொதுவாக பெரிய காயங்களைக் கண்டறிவதற்கான முதல் கருவி.
CT ஸ்கேன் - எக்ஸ்ரே கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. சிறிய புண்கள் மற்றும் பிற நோயியல் ஏதேனும் இருந்தால் அவற்றைக் கண்டறிய உதவுகிறது.
‘எம்ஆர்ஐ’ - கட்டி ஈடுபாட்டின் ஆழத்தை மற்ற மட்டங்களில் அளவிடுவதற்கு எப்போதாவது சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது.
PET CT ஸ்கேன் - புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டாலோ அல்லது சந்தேககிக்கப்பட்டாலோ இந்த ஸ்கேன் நோயின் பரவலை மதிப்பிடுவதற்கும், கிச்சையின் பிரதிபலிப்பாகவும் செய்யப்படுகிறது.

‘ஸ்பூட்டம் சைட்டாலஜி’

உங்களுக்கு இருமல் இருந்து, சளி உருவாகும் பட்சத்தில், நுண்ணோக்கியின் கீழ் சளியைப் பார்ப்பதன் மூலம் சில சமயங்களில் நுரையீரல் புற்றுநோய் உயிரணுக்கள் இருப்பதைக் கண்டறியலாம்.

திசு மாதிரி (பயாப்ஸி)

பயாப்ஸி எனப்படும் ஒரு செயல்முறையில், நுரையீரலுக்குள் உருவாகும் அசாதாரண உயிரணுக்கள் அகற்றப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. இது ஒரு மூச்சுக்குழாய் வழியாகச் செய்யப்படலாம். அங்கு ஒளி மற்றும் கேமரா அமைப்பு இணைக்கப்பட்ட ஒரு குழாய் தொண்டை வழியாக மற்றும் நுரையீரலுக்குள் செருகப்பட்டு சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்கிறது.

மீடியாஸ்டினோஸ்கோபி

இந்த நடைமுறையில், மருத்துவர் நிணநீர் முனையிலிருந்து திசு மாதிரிகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். இது கழுத்தின் அடிப்பகுதியில் ஒரு கீறல் மூலம் செய்யப்படுகிறது, அதைத் தொடர்ந்து திசு மாதிரிகளை எடுக்க அறுவை சிகிச்சை கருவிகளைப் பயன்படுத்துகின்றன.
மற்றொரு நடைமுறையில் ஊசி ‘பயாப்ஸி’ ஆகும், இதில் மருத்துவர் எக்ஸ்ரே போன்ற மருத்துவ இமேஜிங்கைப் பயன்படுத்துகிறார். இது மாதிரி-சேகரிப்புக்காக நுரையீரலில் தேவையான பகுதிகளுக்கு ஊசியை வழிகாட்ட உதவுகிறது.
இந்த மாதிரிகள் விரிவான பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, உங்களுக்கு எந்த வகையான புற்றுநோய் உள்ளது மற்றும் அதன் தீவிரம் என்ன என்பதை மருத்துவர் அறிந்தகொள்வார்.

சிகிச்சைகள்

அறுவை சிகிச்சை

அறுவைசிகிச்சையின் போது, நுரையீரல் புற்றுநோயையும் ஆரோக்கியமான திசுக்களின் விளிம்பையும் உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் அகற்று பணியாற்றுவார். நுரையீரல் புற்றுநோயை அகற்றுவதற்கான நடைமுறைகள் பின்வருமாறு:

 • ஆரோக்கியமான திசுக்களின் விளிம்புடன் கட்டியைக் கொண்டிருக்கும் நுரையீரலின் ஒரு சிறிய பகுதியை அகற்ற கட்டியை ஆப்பு வடிவ பகுதியுடன் புற்றுநோயை அகற்றுவது
 • நுரையீரலின் ஒரு பெரிய பகுதியை அகற்றுவதற்கான பிரிவு பிரித்தல், ஆனால் முழு மடலும் அல்ல.
 • ஒரு நுரையீரலின் முழு மடலையும் அகற்றுவதற்கான ‘லோபெக்டோமிய.
 • நுரையீரல் முழுவதையும் அகற்றும் ‘நிமோனெக்டோமி’.
 • நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால், உங்கள் மார்பில் உள்ள நிணநீர் கணுக்களை புற்றுநோயின் அறிகுறிகளை பரிசோதிப்பதற்காக உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் அகற்றலாம்.

அறுவைசிகிச்சைக்கு முன் உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

 • நான் எந்த வகையான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்? நிணநீர் முனைகள் அகற்றப்படுமா?
 • அறுவை சிகிச்சை எவ்வளவு நேரம் எடுக்கும்?
 • நான் எவ்வளவு காலம் மருத்துவமனையில் இருப்பேன்?
 • அறுவைசிகிச்சைக்குப் பிறகு என் குணமடைதல் எவ்வாறு இருக்கும் என்பதை விவரிக்க முடியுமா?
 • நான் அனுபவிக்கும் பக்க விளைவுகள் பற்றி கூற யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்? மற்றும் எவ்வளவு விரைவில்?
 • இந்த அறுவை சிகிச்சையின் நீண்ட கால விளைவுகள் என்ன?
கதிர்வீச்சு சிகிச்சை

இந்த வகையான சிகிச்சையானது கதிர்வீச்சுக் -கதிர்கள் மற்றும் ‘புரோட்டான்களைப்’ பயன்படுத்தி சக்தி வாய்ந்த ஆற்றல் கற்றைகளை உருவாக்குவதை உள்ளடக்கியது, அவை துல்லியமாக புற்றுநோய் உயிரணுக்கள் இருக்கும் இடங்களுக்குச் செலுத்தப்பட்டு புற்றுநோய் உயிரணுக்களைக் கொல்லும். உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை அறுவை சிகிச்சைக்கு முன் பயன்படுத்தப்படலாம். அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு, இது கீமோதெரபியுடன் இணைந்து முதன்மையான சிகிச்சை முறையாக இருக்கும். கடைசியாக, உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது வலியைக் குறைப்பதற்கான ஒரு சிகிச்சையாக இருக்கலாம்.

கீமோதெரபி

இது வழக்கமாக வாரங்கள் அல்லது மாதங்களில் நிர்வகிக்கப்படும் வாய்வழி மற்றும் ஊசி மருந்துகளின் ஒருங்கிணைந்த சிகிச்சையாகும். இவை புற்றுநோய் உயிரணுக்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் மிகவும் வலுவான மருந்துகள் மற்றும் புற்றுநோயைக் குறைக்க அறுவை சிகிச்சைக்கு முன் பயன்படுத்தப்படலாம். அறுவைசிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சையுடன் இணைக்கப்படலாம். கடைசியாக, உடல் முழுவதும் பரவியிருக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வலியைக் குறைக்க இது ஒரு வகையான சிகிச்சையாகும்.

‘ஸ்டீரியோடாக்டிக்’ உடல் கதிரியக்க சிகிச்சை

கதிரியக்க அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படும் இந்த முறை, அறுவை சிகிச்சை செய்ய முடியாத நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றல்மிக்க கற்றைகள் பல்வேறு கோணங்களில் இருந்து புற்றுநோயை இலக்காகக் கொண்டு செயல்படும். சிறிய நுரையீரல் புற்றுநோய் அல்லது மூளை போன்ற பகுதிகளுக்கு மாற்றப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு பொதுவான தீர்வு.

இலக்கு மருந்து சிகிச்சை

இந்த சிகிச்சையானது உயிரணுக்கள் முரட்டுத்தனமாக செயல்படுவதைத் தடுக்க உயிரணுக்ககளுக்குள் இருந்து சேதத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, டிஎன்ஏ சேதமடையும் போது சாதாரண உயிரணுக்கள் புற்றுநோய் உயிரணுக்களாக மாறும். மற்றும் உயிரணுக்கள் தங்கள் உயிரணு வளர்ந்து பிரிக்கப்படும் தொடர்ச்சியான நிகழ்வின் கட்டுப்பாட்டை இழக்கின்றன. இந்த மருந்துகள் கூறப்பட்ட சேதத்தை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் அவை பொதுவாக மேலும் கடுமையான அல்லது மீண்டும் வரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

நோயெதிர்ப்பு சிகிச்சை

இது முற்றிய நிலைகளுக்கு முன்னேறிய புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது மீண்டும் மீண்டும் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மற்றொரு சிகிச்சையாகும். புற்றுநோய் புரதங்களை உற்பத்தி செய்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அது ஒரு சாதாரண உயிரணு என்றும் அதை அழிக்க வேண்டாம் என்றும் கூறி உயிரணுக்கள் கட்டுப்பாடில்லாமல் கட்டிகளாகப் பெருக வழி வகுக்கிறது. இந்த மருந்துகள் இந்த புரத உற்பத்தியைத் தடுக்கின்றன. இதனால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்தி புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன.

வேதனை தணிக்கும் கவனிப்பு

இந்த சிகிச்சை நோயாளியின் அசௌகரியத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு மருத்துவத் துறையாகும். நோயின் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளால் ஏற்படும் எந்த வலியையும் சமாளிக்க இந்த சிச்சை வழங்கப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சையுடன் ஒரே நேரத்தில் வேதனை தணிக்கும் கவனிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மனநிலை, வாழ்க்கைத் தரம் மற்றும் உயிர்பிழைப்பதில் கூட முன்னேற்றம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.