மேலோட்டம்

மெசோதெலியோமா என்றால் என்ன?

வீரியம் மிக்க ‘ப்ளூரல் மீசோதெலியோமா’ (எம்பிஎம்) என்பது ஒரு அரிய வகை புற்றுநோயாகும். இது மார்புக் குழியை வரிசைப்படுத்தி நுரையீரலை உள்ளடக்கிய திசுக்களின் மெல்லிய அடுக்கிலோ அல்லது வயிற்றை வரிசைப்படுத்தி உள் உறுப்புகளை உள்ளடக்கிய திசுவின் மெல்லிய அடுக்கான ‘பெரிட்டோனியத்திலோ’ ஏற்படுகிறது.

‘மீசோதெலியோமா’ என்பது ஒரு அரிய வகை புற்றுநோயாகும். மேலும் இது ஒவ்வொரு நாட்டினது வளர்ச்சிக் கட்டங்களில் ஏற்படும் கல்நார் இழைகளின்(அஸ்பெஸ்டாஸ்) வெளிப்பாட்டிற்க் உள்ளாகும் போது ஏற்படுகிறது. சிங்கப்பூரில், 1960-1990க்கு இடையில் கல்நார் இழைகளின்(அஸ்பெஸ்டாஸ்) வெளிப்பாட்டிற்க் உள்ளாகுதல் உச்சத்தை எட்டியது. மற்றும் ஆசியானின் பிற பகுதிகளில், நாடுகள் வெவ்வேறு விகிதங்களில் வளர்ச்சியடைவதால், அதன் வெளிப்பாடு இன்னும் தொடர்கிறது.

சில பழைய கட்டிடங்களின் கட்டமைப்புகளில் அஸ்பெஸ்டாஸ் இன்னும் பொதுவாகக் காணப்படுகிறது. இந்த கட்டமைப்புகள் உறுதியற்றவையா இருந்தாலோ மற்றும் அவற்றின் கட்டமைப்புக்கு தொந்தரவு இழைக்கப்பட்டாலோ இந்த சேதப்படுத்தும் இழைகள் காற்றில் வெளியிடப்படும். ‘பிரேக் பேட்கள்’, கூரை செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள், ‘வினைல்’ ஓடுகள் மற்றும் சில சிமென்ட் குழாய்களின் உற்பத்திப் பகுதியாக கல்நார் இன்னும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சுரங்க வேலையின் போது வெளியாகும் சில பாறை அமைப்புகளிலும் கல்நார் காணப்படுகிறது.

மெசோதெலியோமாவின் காரணங்கள்

இது பொதுவாக சுவாசிக்கும்போது கல்நார் இழைகளை உள்ளிழுப்பதால் ஏற்படுகிறது. மற்றும் கப்பல் கட்டுதல், தெளிப்பு-சாயம் பூசுதல், குழாய்கள் சார்ந்த தொழில்கள்(பிளம்பிங்) மற்றும் வாகனம் சார்ந்த தொழில்கள் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு இது நிகழலாம். இரு வகையான இழைகள் உள்ளன. நீல நிற இழைகள் [amphibolic fibres] திசுக்களில் புதைந்து அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. வெளிப்பட்ட 10-80 ஆண்டுகளுக்கு இடையில் மீசோதெலியோமா உருவாகலாம்.

மெசோதெலியோமாவின் அறிகுறிகள் என்ன?

துரதிர்ஷ்டவசமாக, மீசோதெலியோமாவின் அறிகுறிகள் ஆரம்ப கட்டங்களில் அரிதாகவே தோன்றும். பெரும்பாலான நோயாளிகள் புற்றுநோயின் பிற்பகுதியில் இதை அனுபவிப்பார்கள். அறிகுறிகள் பின்வருமாறு:

  • நுரையீரலில் திரவம் தேங்குவதால் ஏற்படும் மூச்சுத் திணறல் (ப்ளூரல் எஃப்யூஷன்)
  • மந்தமான மார்பு வலி அல்லது விலா எலும்புக் கூண்டின் கீழ் வலி
  • அடிவயிற்றில் வலி அல்லது வீக்கம் (வயிறு)
  • அடிவயிற்றில் கட்டிகள்
  • அறியப்படாத காரணத்தினால் எடை இழப்பு

விசாரணை

உடல் தேர்வு மற்றும் வரலாறு

கட்டிகள் அல்லது வேறு ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் போன்ற நோயின் அறிகுறிகளைக் கண்டறிய நோயாளியின் பொது ஆரோக்கியத்தைப்பற்றிய பொதுவான மதிப்பீடு செய்யப்படும். உடல் நலப் பழக்கவழக்கங்கள், கல்நார் பாதிப்பு, கடந்தகால நோய்கள், தொழில் வரலாறு மற்றும் சிகிச்சைகள் பற்றிய கேள்விகளை மருத்துவர் கேட்பார்.

CT ஸ்கேன்

மார்பு குழிக்குள் உள்ள திசுக்களின் அசாதாரண வளர்ச்சிகள் அல்லது தடித்தல் மற்றும் வெளியேற்றத்திற்கான சான்றுகள் ஆகியவற்றை கண்டறிகிறது.

PET ஸ்கேன்

நோய் எந்த அளவிற்கு பரவியுள்ளது மற்றும் ‘மெட்டாஸ்டாசிஸ்’ (புற்றுநோய் உயிரணுக்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுதல்) ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிகிறது.

பயாப்ஸி

நுண்ணோக்கியின் கீழ் மருத்துவ பரிசோதனைக்காக மார்பு அல்லது அடிவயிற்றின் புறணியிலிருந்து மாதிரி திசுக்களை அகற்றுதல். ஏதேனும் அசாதாரண உயிரணு செயல்பாடு உள்ளதா என்று மருத்துவர் தேடுவார். ஒரு மெல்லிய ஊசியைப் பயன்படுத்தி அல்லது தேவையான திசுக்களை வெளியே எடுக்க ஒரு சிறிய வெட்டு மூலம் ஒரு பயாப்ஸி செய்யலாம். சில சமயங்களில், மருத்துவருக்கு வீடியோ உதவியுடனான அறுவை சிகிச்சை பயாப்ஸி தேவைப்படும்.

ப்ரோன்கோஸ்கோபி

ப்ரோன்கோஸ்கோப் என்பது ஒரு குழாய் போன்ற சாதனமாகும். இது ஒரு விளக்கையும் காற்று செல்லும் பாதைகளுக்குள் உள்ள கட்டமைப்புகளைக் காண ஒரு லென்ஸ்ஸையும் கொண்டுள்ளது. நுரையீரலில் இருந்து மாதிரிகளைப் பெறுவதற்கும் இது பயன்படுகிறது.

சைட்டாலஜி

பளூரல் எஃப்யூஷன் திரவம் மார்பு குழியிலிருந்து சேகரிக்கப்பட்டு, புற்றுநோய் உயிரணுக்களைக் கண்டறிய நுண்ணோக்கின் கீழ் காணப்படுகிறது.

சிகிச்சைகள்

மீசோதெலியோமாவின் சிகிச்சைக்கு பல துறைகளில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் குழுவின் அணுகுமுறை தேவைப்படுகிறது. இது பொதுவாக அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு ஆகியவற்றின் துறைகளாகும். இதன் மூலம் சிறந்த விளைவுகளைக் காணலாம். அறுவை சிகிச்சை: மொத்த ‘ரேடிகல் ப்ளூரெக்டோமி’ மற்றும் ‘டெகோர்டிகேஷன்’

தோராசென்டெசிஸ்

இது நுரையீரல் மற்றும் மார்புச் சுவரில் இருக்கும் ப்ளூராவை அகற்றுவதையும், உதரவிதானத்தையும் சில சமயங்களில் ‘பெரிகார்டியத்தையும்’ [இதயத்தின் திசு மூடுதல்] அகற்றுதல் மற்றும் மறுசீரமைப்பதையும் உள்ளடக்கியது. மார்புச் சுவர் சம்பந்தப்பட்டிருந்தால், அதன் ஒரு பகுதியை அகற்றி மறுசீரமைக்கலாம்.
உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரால் அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை திட்ட வரைபடங்கள் மற்றும் வீடியோக்களின் உதவியுடன் காண்பிக்க முடியும்.

கீமோதெரபி

இது வழக்கமாக வாரங்கள் அல்லது மாதங்களில் நிர்வகிக்கப்படும் வாய்வழி மற்றும் ஊசி மருந்துகளின் ஒருங்கிணைந்த சிகிச்சையாகும். இவை புற்றுநோய் உயிரணுக்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் மிகவும் வலிமையான மருந்துகளாகும். இச் சிகிச்சை புற்றுநோயைக் குறைக்க அறுவை சிகிச்சைக்கு முன்னும் அல்லது அறுவைசிகிச்சைக்குப் பின் மேலும் புற்றுநோய் உயிரணுக்கள் எஞ்சி இருப்பதாக மருத்துவர் சந்தேகித்தால் பயன்படுத்தலாம்.

கதிரியக்க சிகிச்சை

இந்த வகையான சிகிச்சையானது எக்ஸ்-கதிர்கள் மற்றும் புரோட்டான்களைப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த ஆற்றல் கற்றைகளை உருவாக்குவதை உள்ளடக்கியது, அவை துல்லியமாக புற்றுநோய் உயிரணுக்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று அவற்றைக் கொல்லும். இது பொதுவாக அறுவைசிகிச்சைக்குப் பின் நிர்வகிக்கப்படுகிறது. அறுவைசிகிச்சையின் போது விடுபட்ட புற்றுநோய் உயிரணுக்களைக் கொல்லவும் அல்லது மீண்டும் அவை உருவாவதைத் தடுக்கவும் இச்சிகிச்சை நிர்வகிக்கப்படலாம்.