நீங்கள் ஒரு மார்பக அறுவை சிகிச்சை நிபுணரிடம் பரிந்துரைக்கப்படுவதற்கான காரணங்கள்

By ICTS
நவம்பர் 15, 2022
Reasons Why You Would Be Referred To A Thoracic Surgeon

மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் என்றால் என்ன?

மார்புக் குழியை உருவாக்கும் எலும்பு கட்டமைப்புகள் மற்றும் திசுக்கள், இதயம், நுரையீரல், உணவுக்குழாய் மற்றும் மார்பு / மார்பில் உள்ள முக்கிய இரத்த நாளங்கள் முதலியவற்றில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் ஒரு மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். மார்பில் உள்ள தீங்கற்ற மற்றும் வீரியம் மிக்க நிலைமைகள் இரண்டிற்கும் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

மார்பக அறுவை சிகிச்சை நிபுணர், வயது வந்தோருக்கான இருதய அறுவை சிகிச்சை, குழந்தை இதய அறுவை சிகிச்சை அல்லது நுரையீரல், மார்புச் சுவர் போன்ற உறுப்புகளை உள்ளடக்கிய மார்பு அறுவை சிகிச்சை போன்றவற்றுள் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கலாம்.

சிங்கப்பூரில் உள்ள மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்கள். மற்றும் மார்பு அறுவை சிகிச்சை துறையில் பயிற்சி பெற மேலும் முதுகலை பயிற்சி பெற்றவர்கள். மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்களின் சிறப்புப் பயிற்சியின் போது, கல்லூரிகளுக்கிடையிலான தேர்வான MRCS இல் தேர்ச்சி பெற்ற பிறகு ‘ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்’ (MRCS) சிறப்புச் சான்றிதழின் உறுப்பினர் போன்ற முதுகலை மருத்துவப் பட்டங்களை பெற்றவர்கள்.

மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் சிகிச்சை அளிக்கக்கூடிய நிலைமைகள் யாவை?

இதயம், நுரையீரல், உணவுக்குழாய் மற்றும் மார்புச் சுவர் மறுசீரமைப்பு போன்ற மார்புச் சுவரில் காணப்படும் உறுப்புகள் மற்றும் திசுக்களுடன் தொடர்புடைய பல்வேறு வகையான நிலைமைகளுக்கு மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் சிகிச்சை அளிக்க முடியும். இத்தகைய கோளாறுகளுக்கு மட்டுமின்றி பின்வரும் கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்:

  • இதய நிலைமைகள்
    • இதய வால்வு கோளாறுகள்
    • இதய தமனி நோய்
    • இதய மாற்று அறுவை சிகிச்சை
  • நுரையீரல் நிலைமைகள்
    • ‘மீசோதெலியோமாஸ்’ உட்பட நுரையீரல் புற்றுநோய்கள்
    • ‘ப்ளூரல் எஃப்யூஷன்’
    • ‘நியூமோதோராக்ஸ்’
    • நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை
    • ‘எம்பிஸிமா’
  • இரைப்பை குடல் பாதை நிலைமைகள்
    • உணவுக்குழாய் புற்றுநோய்
    • இரைப்பை உணவுக்குழாய் ‘ரிஃப்ளக்ஸ்’ நோய் (GERD)
  • நரம்பியல் நிலைமைகள்
    • ‘ஹைப்பர்ஹைட்ரோசிஸ்’
    • ‘மயஸ்தீனியா கிராவிஸ்’
  • மார்பு சுவர் மறுசீரமைப்பு
  • முதுகெலும்பு அறுவை சிகிச்சை

மார்பக அறுவை சிகிச்சை நிபுணரைப் பார்ப்பதற்கான காரணங்கள்

சிங்கப்பூரில், பின்வரும் அறிகுறிகளை நீங்கள் எதிர்நோக்கினால், நீங்கள் ஒரு மார்பக அறுவை சிகிச்சை நிபுணரைப் பார்க்க பரிந்துரைக்கப்படலாம்:

  • நெஞ்சு வலி
  • மூச்சு திணறல்
  • இதயத் துடிப்பு
  • அடிக்கடி மயக்கம் வருதல்
  • தலைச்சுற்றல்
  • இருமல்
  • இருமலின் போது இரத்தம் வெளியேறுதல் (ஹீமோப்டிசிஸ்)
  • நெஞ்செரிச்சல் / இரைப்பை ‘ரிஃப்ளக்ஸ்’

ஒட்டுமொத்தமாக, நீங்கள் அல்லது உங்களின் அன்புக்குரியவர் ஒரு மார்பக அறுவை சிகிச்சை நிபுணருடன் கலந்தாலோசிக்க வேண்டிய பல காரணங்கள் உள்ளன.

ஏதேனும் நோய், மருத்துவ நிலை, விபத்து, வளர்ச்சி அல்லது மார்புப் பகுதியில் ஏற்படும் நோய்கள் முதலியவை ஏற்படும் போது, உங்கள் நிலையைக் கண்டறிந்து, உங்கள் நிலைக்கு உகந்த சிகிச்சை தெரிவுகளை பரிந்துரைக்கும் ஒரு மார்பக அறுவை சிகிச்சை நிபுணரின் நிபுணத்துவம் தேவைப்படலாம்.

மார்பக அறுவை சிகிச்சை நிபுணரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்?

நீங்கள் ஒரு மார்பக அறுவை சிகிச்சை நிபுணருடன் கலந்தாலோசிப்பதற்கு முன், உங்கள் சுருக்கமான மற்றும் துல்லியமான மருத்துவ வரலாறு மற்றும் நீங்கள் தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் அனைத்து மருந்துகளின் பட்டியல் முதலியவற்றுடன் கடந்த கால அறுவை சிகிச்சைகள் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவரங்களையும் தயார் செய்து கொண்டு வருவது நல்லது..

ஆலோசனையின் போது, அறுவை சிகிச்சை நிபுணர் முதலில் உங்களிடமிருந்து மருத்துவ வரலாற்றை எடுத்து உங்கள் மருத்துவ பதிவுகளை மதிப்பாய்வு செய்வார். உங்களின் தற்போதைய அறிகுறிகளின் பட்டியலையும், உங்கள் மருத்துவ வரலாற்றையும் அவர்கள் உங்களிடம் கேட்பார். மேலும் உங்கள் ஒட்டுமொத்த உடல்நிலையை நன்றாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் உங்களைப் பற்றியும் உங்கள் பின்னணியைப் பற்றியும் மேலும் ஆராய்வார். இதைத் தொடர்ந்து, அவர் உங்கள் இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டைக் கேட்டல், அத்துடன் உங்கள் இரத்த அழுத்தத்தை எடுத்துக்கொள்வது உள்ளிட்ட உடல் பரிசோதனைகளைச் செய்யலாம். அத்துடன், மார்பு எக்ஸ்ரே அல்லது ஈசிஜி போன்ற கூடுதல் நோயறிதல் சோதனைக்கும் நீங்கள் அனுப்பப்படலாம்.

ஆலோசனைக்குப் பிறகு, உங்கள் மார்பக அறுவை சிகிச்சை உங்கள் நிலைக்கு ஏற்ப பழமைவாத சிகிச்சையை பரிந்துரைக்கலாம். அறுவை சிகிச்சையைப் பற்றிய விரிவான கலந்தாய்வில், அதன் நன்மைகள், அபாயங்கள், மாற்றுகள் மற்றும் சிக்கல்கள் உட்பட உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்படும். மேலும் உங்களுக்கு வழங்கப்ட்டுள்ள அனைத்து சிகிச்சை தேர்வுகளையையும் நீங்கள் ஆராய முடியும். இந்த அறுவை சிகிச்சை முறை குறித்து உங்களுக்கு மேலும் விளக்கமளிக்கப்படும்; இதன் செயல்முறை, நோக்கங்கள், மீட்பு நேரம் ஆகியவை குறித்து மேலும் அறியலாம்.

மார்பக அறுவைசிகிச்சைக்கான சர்வதேச மையத்தில், டாக்டர் அனீஸ் உங்கள் நிலையைப் பற்றி கலந்துரையாடி, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைத் திட்டத்தை உருவாக்குவதில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவார்.

மிகவும் பொதுவான மார்பக அறுவை சிகிச்சை என்ன?

தற்போது, சிங்கப்பூரில் மிகவும் பொதுவான மார்பக அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பவனவாக இருக்கின்றன. இதன் மூலம் புற்றுநோயை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் பரிசோதனைக்காக நுரையீரலில் இருந்து திசு மாதிரிகளைப் பெறவும் செய்யப்படுகிறது. இதய வால்வு மற்றும் ‘கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்ட்ஸ்’ (CABGs) போன்ற இதய அறுவை சிகிச்சைகள் இதயத் தமனி நோய் போன்ற இதய நோய்கள் உள்ள பல நோயாளிகளுக்குச் செய்யப்படுகின்றன.

chevron-left
chevron-right