கவனிக்க வேண்டிய உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறிகள்

By ICTS
செப்டம்பர் 30, 2022
oesophageal cancer singapore

உணவுக்குழாய் புற்றுநோய்

oesophageal cancer singapore

உணவுக்குழாய் புற்றுநோய் என்பது உணவுக்குழாயில் உள்ள உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியைக் குறிக்கிறது. இது உலகளவில் புற்றுநோய் இறப்புக்கான ஆறாவது பொதுவான காரணமாகும்.

உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்து யாருக்கு இருக்கிறது?

ஆபத்து காரணி என்பது உங்களுக்கு நோய் உண்டாவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் எதையும் குறிக்கிறது. உணவுக்குழாய் புற்றுநோயைப் பொறுத்தவரை பல ஆபத்து காரணிகள் உள்ளன:

  • முதுமை
  • புகைபிடித்தல்
  • மதுவின் பயன்பாடு
  • இரைப்பை உணவுக்குழாய் ‘ரிஃப்ளக்ஸ்’ நோய் (GERD)
  • ‘பாரெட்டின்’ உணவுக்குழாய்
    • o பாரெட்டின் உணவுக்குழாய் என்பது உணவுக்குழாயின் கீழ் பகுதியின் புறணிக்குள் உள்ள உயிரணுக்கள், உயிரணு கட்டமைப்பில் மாற்றங்களுக்கு உட்படும் ஒரு நிலை. இதன் விளைவாக உணவுக்குழாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் அசாதாரண உயிரணுக்கள் உருவாகின்றன. ‘பாரெட்டின் உணவுக்குழாய்’ பொதுவாக நீண்ட காலத்துக்கு, சிகிச்சையளிக்கப்படாத GERD இலிருந்து எழுகிறது.
  • உடல் பருமன், இது GERDக்கு வழிவகுக்கிறது
  • உணவுக்குழாய் இறுக்கங்கள்
  • ‘அச்சலாசியா’
    • அச்சாலாசியா என்பது உணவுக்குழாயின் மென்மையான தசை நார்கள் தளர்வடையத் தவறி, உணவுக்குழாய் அடைப்பு மற்றும் குறுகலுக்கு வழிவகுக்கும் ஒரு நிலை.

இருப்பினும், ஆபத்து காரணி இருந்தாலே உங்களுக்கு புற்றுநோய் வரும் என்று அர்த்தமல்ல. மேலும் ஆபத்து காரணிகள் எதுவும் இல்லாததால் உங்களுக்கு புற்றுநோய் வராது என்றும் அர்த்தமல்ல. நீங்கள் ஆபத்தில் இருப்பதாக நீங்கள் நினைத்தால் உங்கள் மருத்துடன் ஆலோசிப்பது முக்கியம்.

உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறிகள்

signs of oesophageal cancer singapore

உணவுக்குழாய் புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் இருக்கும்போது, புற்றுநோய் பெரியதாகி, உணவுக்குழாயில் தடையை ஏற்படுத்தும் போது பல அறிகுறிகள் ஏற்படலாம். சில நேரங்களில், புற்றுநோய் அருகிலுள்ள கட்டமைப்புகளை ஆக்கிரமித்து அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டிய அறிகுறிகள்:

விழுங்கும்போது வலி அல்லது சிரமத்தை அனுபவித்தல்

கட்டி முன்னேறி, உணவுக்குழாயைத் தடுக்கத் தொடங்கும் போது, ‘டிஸ்ஃபேஜா’ எனப்படும் ஒரு நிகழ்வை நீங்கள் அனுபவிக்கலாம். இது விழுங்குவதில் சிரமத்தைக் குறிக்கிறது. விழுங்கும்போது வலியும் இருக்கலாம். இது ‘ஓடினோபாஜியா’ என்று குறிப்பிடப்படுகிறது.

உணவுக்குழாய் புற்றுநோய் வேகமாக முன்னேறும். மற்றும் ‘டிஸ்ஃபேஜா’ திடீரென ஏற்பட்டு மிக வேகமாக முன்னேறும். பொதுவாக, திட உணவுகளை விழுங்குவதில் சில சிரமங்களை நீங்கள் முதலில் அனுபவிக்கலாம். மேலும் இந்த சிரமம் அதிகரித்து திரவங்களை விழுங்க முடியாமல் போகலாம். இதனால் நீங்கள் உட்கொள்ளும் திரவங்கள் வாந்தி வழியாக வெளியாகும். உணவுக்குழாய் புற்றுநோயால் ஏற்படும் டிஸ்ஃபேஜா ஒரு இயந்திரமயக் காரணமாகும். மேலும் டிஸ்ஃபேஜா வின் தீவிரம் பொதுவாக கட்டி எவ்வளவு பெரியது என்பதைப் பொறுத்தது. எனவே, நீங்கள் விழுங்குவதில் சிரமம் இருந்தால், தடை ஏற்பட்டால், இது ஒரு எச்சரிக்கை அறிகுறியாக நினைக்க வேண்டும்.

அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல்

உணவுக்குழாயில் புற்றுநோய் இருக்கும் போது, மார்பில் சிறிது அசௌகரியத்தை நீங்கள் அனுபவிக்க ஆரம்பிக்கலாம். ஏனெனில் புற்றுநோய் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும். மற்ற அறிகுறிகளில் வயிற்று வலி, அமில ‘ரிஃப்ளக்ஸ்’ மற்றும் மேல் வயிற்றுப் பகுதியில் பொதுவான அசௌகரியம் ஆகியவை அடங்கும்.

மார்பு வலி, அழுத்தம் அல்லது எரிச்சல்

சில நேரங்களில், உணவுக்குழாய் புற்றுநோய் மார்பு வலியையும் ஏற்படுத்தும். இந்த மார்பு வலி தீவிரமாக இருக்கும். மேலும் பொதுவாக நெஞ்சின் நடுவில் அழுத்தம் அல்லது எரியும் உணர்வு போன்ற உணர்வு இருக்கும். விழுங்கப்பட்ட உணவு உணவுக்குழாயின் கட்டி வளரும் பகுதியை அடையும் போது இது பொதுவாக நிகழ்கிறது. மற்றும் விழுங்கிய சில நொடிகளுக்குப் பிறகும் ஏற்படலாம். புற்றுநோய் உருவாக்கம் அதிகரிக்கும் போது வலி அதிகம் உணரப்படுகிறது.

விவரிக்க முடியாத எடை இழப்பு

உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு விவரிக்க முடியாத எடை இழப்பு ஏற்படுகிறது. புற்றுநோய் என்பது ஒரு ‘அனபோலிக்’ (எளிய மூலக்கூறுகளிலிருந்து சிக்கலான மூலக்கூறின் உருவாக்கம்) செயல்முறையாகும். மேலும் கட்டியின் வளர்ச்சி, பெரும்பாலும் அதிக அளவு உடலின் ஆற்றல் சக்தியைப் பயன்படுத்துகிறது. இதனால்தான் மக்கள் அடிக்கடி எடை இழக்கிறார்கள். ஏனெனில் புற்றுநோயின் வளர்ச்சி உடலில் ஆற்றல் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. உணவுக்குழாய் புற்றுநோயில், சாப்பிடுவதில் சிரமம் ஏற்படுவதால், மக்கள் தங்கள் உணவை விழுங்க முடியாமல் உடல் எடையை குறைக்கலாம். பசியின்மை புற்றுநோயிலும் நிகழலாம். இதன் விளைவாக வாய்வழி உட்கொள்ளல் குறைகிறது.

இருமல் அல்லது கரகரப்பு

கரகரப்பான மற்றும் கீறலாக ஒலிக்கும் குறல் நீண்டகாலம் நீடித்தல் என்பது உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

சுருக்கம்

உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் கவனிக்க வேண்டிய அறிகுறிகளை நன்கு புரிந்துகொள்ள இந்த குறுகிய வழிகாட்டி உங்களுக்கு உதவியிருக்கும் என்று நம்புகிறோம். உணவுக்குழாய் புற்றுநோயக்குச் சிகிச்சை அளிக்க முடியும். இருப்பினும், இது பெரும்பாலும் கட்டியின் அளவு, வகை, அது ஏற்பட்டிருக்கும் இடம் மற்றும் உங்கள் பொது ஆரோக்கியத்தைப் பொறுத்தது. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு ஏற்பட்டால், சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சைத் திட்டத்திற்கு சிங்கப்பூரில் உள்ள உணவுக்குழாய் புற்றுநோய் நிபுணரை அணுகவும்.

chevron-left
chevron-right