நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஹைப்பர்ஹைட்ரோசிஸ் பற்றிய உண்மைகள்

By ICTS
மே 14, 2022
hyperhidrosis facts

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்றால் என்ன?

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்பது உடற்பயிற்சி அல்லது வெப்பத்துடன் தொடர்பில்லாத அதிகப்படியாக வியர்க்கும் நிகழ்வைக் குறிக்கிறது. இது எல்லா வகையான தட்பவெட்ப நிலைகளில் வாழும் நபர்களை பாதிக்கிறது. மற்றும் இது கைகள், கால்கள், அக்குள் மேலும் முகம் போன்ற பகுதிகளை பாதிக்கிறது. மற்றும் பொதுவாக உடலின் இரு பக்கங்களையும் பாதிக்கிறது. ஹைப்பர்ஹைட்ரோசிஸ் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பாதிப்பது அல்லது முழு உடலையும் பாதிப்பது என வகைப்படுத்தலாம். ஹைப்பர்ஹைட்ரோசிஸில் வியர்வையின் அளவு ஒருவரது இயல்பான அளவை விட கணிசமாக அதிகமாக இருக்கும். மேலும் அரிப்பு, உடல் துர்நாற்றம், தோல் நிறமாற்றம், ஆடைகளில் கறை படிதல் மற்றும் சில சமயங்களில் துணிகளை நனைத்தல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

வியர்த்தல், மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது உடல் முழுவதும் உள்ள சிறிய வியர்வை சுரப்பிகளுக்கு நரம்புள் வழி சமிக்ஞைகளை அனுப்புகிறது. நம் உடலில் இருந்து வியர்வை வெளியேறும் போது, இது உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. வியர்த்தல் என்பது ஒரு இயற்கையான உடல் பொறிமுறையாகும். வெப்பநிலை அதிகரிப்பு அல்லது பதற்ற நிலை போன்ற உணர்ச்சிகள் உண்டாகும் சூழ்நிலைகளில் வியர்தல் அதிகரிகரிப்பது இயல்பானது. இருப்பினும், ‘ஹைப்பர்ஹைட்ரோசிஸ்’ அதிக அளவில் வியர்ப்பதைக் குறிக்கிறது.

ஹைப்பர்ஹைட்ரோசிஸுக்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில், காரணம் தெரிவதில்லை. ஆனால் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் உள்ளவர்கள் மற்றவர்களை விட அதிக உடல் வெப்பநிலையைக் கொண்டிருக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. சில சமயங்களில், தைராய்டு சுரப்பி, நீரிழிவு நோய், நரம்பு எரிச்சல் அல்லது மருந்துகளின் பக்க விளைவு போன்ற மருத்துவ நிலைகளால் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் ஏற்படலாம். அதிகமாக வியர்ப்பதினால் ஏற்படும் சிக்கல்களில், தோல் நோய்த்தொற்றுகள், மருக்கள், அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி முதலிய தோல் நிலைகளின் ஆபத்துகள் அடங்கும். ஹைப்பர்ஹைட்ரோசிஸ் வாழ்க்கைத் தரம் குறைவதற்கும் வழிவகுக்கும். ஏனெனில் அதிகப்படியாக வியர்த்தல், தினசரி செயல்பாடு, பொழுதுபோக்கு மற்றும் வேலை (எ.கா. எழுதுதல், இசைக்கருவிகள் கற்றல், விளையாட்டுகள் விளையாடுதல், நெட்வொர்க்கிங் மற்றும் சமூகத்தில் மற்றவர்களுடன் பழகுதல்) ஆகியவற்றில் தடையாக இருக்கலாம். இந்த தடைகளால் சங்கடம் மற்றும் பதற்றம் அதிகரிப்பதுடன் மனச்சோர்வு நிகழ்வுகளுக்கும் வழிவகுக்கும்.

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் எந்த அவ்வளவுக்குப் பொதுவானது?

ஒட்டுமொத்தமாக, ஒப்பீட்டுப் பார்க்கையில் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அரிதானது. இது மக்கள் தொகையில் 1%ஐ பாதிக்கிறது.

இருப்பினும், சில மருத்துவ நிலைமைகள் உள்ளவர்களுக்கு ஹைப்பர்ஹைட்ரோசிஸின் பாதிப்பு அதிகமாக இருக்கலாம். இந்த நோய்கள் வியர்வை சுரப்பிகள் மற்றும் அதை வழங்கும் நரம்புகளின் உடற்கூறியல் மாற்றத்திற்கு வழிவகுக்கலாம். இதன் விளைவாக நோயால் பாதிக்கப்பட்டவளுக்கு ஹைப்பர்ஹைட்ரோசிஸ் ஏற்படுகிற விகிதம் அதிகரிக்கிறது.

ஹைப்பர்ஹைட்ரோசிஸுக்கு வயது வரம்பு இல்லை

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் யாரையும் பாதிக்கும். கைக்குழந்தைகள், பதின்ம வயதினர் முதல் இளம் வயது வரைதினர் வரை உள்ளோர் மற்றும் முதியவர்களைக்[2]. கூட ஹைப்பர்ஹைட்ரோசிஸ் பாதிக்கும். ஹைப்பர்ஹைட்ரோசிஸ் இரு பாலினங்களையும் சமமாக பாதிக்கிறது. ஒருவர் ஹைப்பர்ஹைட்ரோசிஸினால் கவலைப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில், அதிகமாக வியர்ப்பதால் அவர்களுக்குத் தொழில் சார்ந்த ஆபத்து ஏற்படும், அவர்களின் சமூக வாழ்க்கையை பாதிக்கும் அல்லது அதிகப்படியான வியர்வை அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையை பாதிக்கும் என்று அவர்கள் கருதுவதே அவர்களின் கவலைக்குக் காரணங்களாகும்.

எந்த வயதிலும் நீங்கள் ஹைப்பர்ஹைட்ரோசிஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்த நிலை நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் பல ஆண்டுகளாக தொடரலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது குழந்தைகளில் ஏற்பட்டால், அவர்கள் வாழ்நாள் முழுதும் ஹைப்பர்ஹைட்ரோசிஸ்ஸுடன் வாழ நேரிடலாம்.

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் கணிக்க முடியாதது

ஹைப்பர்ஹைட்ரோசிஸினால் எப்போது பாதிக்கப்படுவீர்கள் என்பதை உங்களால் கணிக்க முடியாது. அதற்கு வழிவகுக்கும் பல காரணிகள் உள்ளன. மற்றும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தூண்டுதல்கள் உள்ளன. இருப்பினும், சிறந்த நிர்வகிக்கும் முறைகள் மற்றும் உங்கள் நிலையைப் பற்றிய சரியான வழிகாட்டுதலுடன், அறிகுறிகளை நன்கு கட்டுப்படுத்த முடியும். மேலும் அன்றாட வாழ்வில் ஏற்படும் விளைவுகளை குறைக்க முடியும். இந்த நிலையை மக்கள் சமாளிக்கும் சில வழிகளில், அணியும் ஆடைகளில் மாற்றங்கள் செய்வது மற்றும் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பது ஆகியவை அடங்கும். மற்ற மருத்துவ சிகிச்சைகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன. மேலும் அவை அனைத்தும் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் உள்ளவர்களுக்கு உதவ சரியான தேர்வுகளை வழங்குகின்றன.

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது

பெரும்பாலான மக்களுக்கு உடற்பயிற்சி செய்யும் போது, சூடான சூழலில் இருக்கும் போது அல்லது அவர்கள் கவலை அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் போது வியர்க்கும். இருப்பினும், ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்பது வியர்வையின் அளவு சாதாரணமாக வியர்ப்பதை விட அளவுக்கு அதிகமாக வியர்ப்பதைக் குறிக்கிறது.

ஹைப்பர்ஹைட்ரோசிஸினால் ஏற்படும் அனுபவங்கள் நபருக்கு நபர் மாறுபடும். - சிலருக்கு அது கைகளில் உண்டாகலாம், மற்றவர்களுக்கு அது அவர்களின் கால்கள், அக்குள் மற்றும் முகம் போன்ற இடங்களில் உண்டாகலாம். அதிகப்படியாக வியர்ப்பது, எவ்வொப்போது எத்தனை முறை ஏற்படுகிறது என்பதும் நபருக்கு நபர் மாறுபடும். சிலர் அதை வாரந்தோறும் அனுபவிக்கிறார்கள். மற்றவர்கள் ஒவ்வொரு நாளும், ஒரு நாளைக்கு பல முறை அதை அனுபவிக்கிறார்கள்.

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்பது சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு நிலை

ஹைப்பர்ஹைட்ரோசிஸ் வாழ்நாள் முழுவதும் இருக்கும். மற்றும் அதற்குக் காரணியாக ஒரு அடிப்படை மருத்துவ நிலை இருந்தால் ஒழிய பொதுவாக அதை குணப்படுத்த முடியாது. எ.கா. தைராய்டு பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். மருத்துவ சிக்கல்களைத் தீர்ப்பதால் ஹைப்பர்ஹைட்ரோசிஸுக்கு சிகிச்சையளிப்பதற்கு உதவும். இருப்பினும், முதன்மை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் (அதாவது அறியப்பட்ட குறிப்பிட்ட காரணம் இல்லாத ஹைப்பர்ஹைட்ரோசிஸ்) தானாகவே போய்விடாது.

இருப்பினும், ஹைப்பர்ஹைட்ரோசிஸ்ஸுக்குச் சிகிச்சையளிக்க வழிகள் உள்ளன. இந்த சிகிச்சை முறைகளை மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகளாகப் பிரிக்கலாம்.

மருத்துவ சிகிச்சை: அதிகபட்சம் 6 மாதங்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கும்

  • தொழில்துறை தர, வியர்வை எதிர்ப்பு மருந்து: இது பரிந்துரைக்கப்பட்ட வலிமையான ‘ஆன்டிபெர்ஸ்பிரண்ட்களைக்’ (வியர்த்தலைத் தடுக்கும் மருந்துகள்) கொண்டுள்ளது. மற்றும் அவை அறிகுறிகளுக்கு தற்காலிக நிவாரணம் வழங்க உதவுகின்றன. எனினும், இது நிரந்தரத் தீர்வு அல்ல.
  • ‘நியூரோடாக்சின்’ ஊசிகள்: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஊசி போடுவது, பெரும்பாலும் அக்குள். அந்த பகுதிக்கு வியர்வை சுரப்பிகளை வழங்கும் நரம்புகளைத் தடுக்க உதவுகிறது. இது பொதுவாக 3-6 மாதங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
  • அயோன்டோபோரேசிஸ்: குளியல் தொட்டியில் உள்ளங்கைகள்/கால்களை வைப்பது.

அறுவை சிகிச்சை முறை: நிரந்தர, உறுதியான தீர்வு

  • ‘சிம்பதெக்டமி’ : வியர்வையின் அதிகப்படியான உற்பத்திக்கு காரணமான நரம்புகளை அகற்றுவதற்கான ஒரு உறுதியான அறுவை சிகிச்சையாக ‘ஹைப்பர்ஹைட்ரோசிஸ்’ அறுவை சிகிச்சையைச் செய்யலாம் (‘சிம்பதெக்டமி’). இது அதிகப்படியான வியர்த்தலின் மூலத்தை அகற்றுவதால் ஹைப்பர்ஹைட்ரோசிஸுக்கு நிரந்தர தீர்வை வழங்குகிறது.
chevron-left
chevron-right