சிங்கப்பூரில் இயந்திர மனிதக் கருவியின் உதவியுடன் மார்பக அறுவை சிகிச்சை என்றால் என்ன?

By ICTS
ஏப்ரல் 25, 2022
what is robotic assisted surgery

பல ஆண்டுகளாக, மருத்துவத் துறையில் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், நோயாளிகளுக்கு அதிக பயனுள்ள மற்றும் திறமையான வழிகளில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வழிவகுத்துள்ளன. இந்த தொழில்நுட்பத்தின் ஒரு உதாரணம் இயந்திர மனிதக்கருவியின் உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆகும். இது ரோபோடிக் (இயந்திர மனிதக்கருவி) அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு அறுவை சிகிச்சை இயந்திர மனிதக்கருவி அமைப்புகள் பல்வேறு நடைமுறைகளுக்கு உதவுகின்றன.

மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ரோபோடிக் அறுவைசிகிச்சை முறையானது, கேமரா கை மற்றும் பல்வேறு அறுவை சிகிச்சை கருவிகளுடன் இணைக்கப்பட்ட இயந்திரக் கைகளை உள்ளடக்கியது. ஒரு மருத்துவர் இந்த கைகளை கணினி பணியகத்தைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். இது அவர்களுக்கு அறுவை சிகிச்சை தளத்தின் உயர்-வரையறை முப்பரிமாணக் காட்சியை வழங்குகிறது. இது அணுக கடினமாக உள்ள பகுதிகளில் செயல்படும் போது மருத்துவர்களுக்கு கூடுதல் துல்லியமான கூறுகளை வழங்குகிறது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, அறுவை சிகிச்சை நிபுணர்களும் அவர்களது குழுக்களும் முதலில் கடுமையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் ரோபோடிக் உதவி அறுவை சிகிச்சை பொதுவாக குறைந்த ஊடுருவும் அறுவை சிகிச்சையுடன் தொடர்புடையது. மற்றும் தற்போது குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட சாவித் துளை அல்லது ‘லேப்ராஸ்கோபி’ அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்படும் பெரும்பாலான சூழ்நிலைகளில் இதைப் பயன்படுத்தலாம்.

உங்களுக்கு ஏன் ரோபோடிக் அறுவை சிகிச்சை தேவை?

பாரம்பரிய அறுவை சிகிச்சையை விட ரோபோடிக் அறுவை சிகிச்சை பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சையின் போது அதிக துல்லியம், நெகிழ்வுத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை வழங்குகிறது. மேலும் மருத்துவர்களால் அணுக முடியாத பகுதிகளில் அதிகத் தெளிவுடன் காண அனுமதிக்கிறது. எனவே, நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்துகிறது.

மேலும், நோயாளிகள் ரோபோ அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாரம்பரிய திறந்த அறுவை சிகிச்சைக்கு பதிலாக குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட அறுவை சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், சிறிய கீறல்கள் செய்யப்படுகின்றன. இதனால்:

  • சிக்கல்களின் ஆபத்து குறைகிறது
  • வலி குறைவாக உள்ளது
  • மருத்துவமனையில் தங்கும் காலம் குறுகிறது
  • அறுவை சிகிச்சையிலிருந்து மீட்படையும் காலம் குறைகிறது
  • குறைந்தபட்ச வடுக்கள் ஏற்படுகின்றன
  • இரத்த இழப்பு குறைவு

ரோபோடிக்-உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள்

ரோபோடிக் அறுவைசிகிச்சை என்பது ஒரு பல்துறை சிகிச்சை முறையாகும். தற்போது குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட சாவித் துளை அல்லது ‘லேப்ராஸ்கோபி’ அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்படும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது பயன்படுத்தப்படலாம். இதைப் பல மருத்துவத் துறைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படலாம்:

  • இரைப்பை குடல் அறுவை சிகிச்சை
    இரைப்பை குடல் அறுவை சிகிச்சைகளில் ‘கோலெக்டோமிகள்’ (பெருங்குடலின் ஒரு பகுதியை அகற்றுதல்), ‘காஸ்ட்ரெக்டோமிகள்’ (ஒரு பகுதியை அல்லது வயிறு முழுவதையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது) மற்றும் இரைப்பை ‘பைபாஸ்கள்’ (வயிற்றின் அளவை ஒரு சிறிய பையாக குறைக்கும் எடை இழப்பு அறுவைச் சிகிச்சை) ஆகியவை அடங்கும்.
  • பெண்ணோயியல் அறுவை சிகிச்சை
    ரோபோடிக் அறுவை சிகிச்சை பெரும்பாலும் கருப்பை நீக்கம், இடுப்பு உறுப்பு சரிவைச் சரிசெய்தல் மற்றும் ‘எண்டோமெட்ரியோசிஸ்’ பிரிதெடுத்தல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
  • மார்பக அறுவை சிகிச்சை
    நுரையீரல் அறுவைசிகிச்சை, ‘தைமெக்டோமி’(தைமஸ் சுரப்பியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்), உணவுக்குழாய் அறுவை சிகிச்சை மற்றும் பிறவற்றிற்கும் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பொதுவாக ரோபோடிக் அறுவை சிகிச்சையைப் பயன்படுத்துகின்றனர்.

பாரம்பரிய அறுவை சிகிச்சை முறைகளை விட ரோபோடிக் அறுவை சிகிச்சை பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சை முறையாக நிரூபிக்கப்பட்ட பல நிகழ்வுகளின் சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே இவை.

ரோபோடிக் தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் அனீஸ் அகமது

ரோபோடிக் அறுவை சிகிச்சையில் டாக்டர் அனீஸின் நாட்டம், ஐரோப்பிய கார்டியோதோராசிக் சர்ஜரி கல்லூரியில் (EACTS) ரோபோடிக் தொராசிக் அறுவை சிகிச்சையில் நிலை III சான்றிதழ் சிறப்புப் பயிற்சியைப் பெற்ற ஆசியான் குழுவில் முதலானவரானார். அவர் இப்போது ஆசியான் மற்றும் தெற்காசியாவில் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான பயிற்சித் திட்டத்தை வழிநடத்துகிறார். அவர் 2016 இல் சிங்கப்பூரின் ரோபோடிக் அறுவைசிகிச்சை சங்கத்தின் (RS3) துணைத் தலைவராக பணியாற்றினார் மற்றும் தற்போது சிங்கப்பூர் ரோபோடிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் (RS3) தலைவராக பணியாற்றுகிறார்

சுருக்கம்

சிக்கலான நிலைமைகளுக்குச் சிகிச்சையளிப்பது முதல் சேதமடைந்த உறுப்புகளை அகற்றுவது அல்லது சரிசெய்வது வரை பாரம்பரிய திறந்த அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே சாத்தியமாகியிருந்த நடைமுறைகளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மேற்கொள்ள, தொழில்நுட்பத்தின் வருகையால், ரோபோ-உதவி அறுவை சிகிச்சை, வழிவகுத்துள்ளது.

ரோபோடிக் அறுவை சிகிச்சையானது சிறிய அணுகல் புள்ளிகள் மற்றும் அதிக துல்லியத்துடன் அறுவை சிகிச்சையை எளிதாக மேற்கொள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உதவுகிறது. மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் விளைவுகளும் மேம்படுத்துகின்றன. இது அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அதிக ஆழமான புலனுணர்வு, இயக்கத்தின் வரம்பு மற்றும் துல்லியம் ஆகியவற்றை வழங்குகிறது - ஒரு இயந்திரத்தின் துல்லியத்துடன் அவர்களின் திறமையையும் திறனாய்வுச் சோதனையையும் ஒருங்கிணைக்கிறது. ரோபோடிக் அறுவை சிகிச்சை உங்களுக்கு ஏற்றதாக இருக்குமா என்பதைக் கண்டறிய, தயவுசெய்து உங்கள் மருத்துவரிடம் பேசத் தயங்காதீர்கள். அவர் உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதோடு உங்கள் நிலைக்கு சிறந்த சிகிச்சைத் திட்டத்தைத் தீர்மானிக்க முடியும்.

chevron-left
chevron-right