மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் (அல்லது தொராசிக் அறுவை சிகிச்சை மருத்துவர்) என்பது அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ ரீதியாக சிகிச்சை அளிக்கப்படும் மார்பக நிலைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர். அவர்கள் மார்புக் குழியில் காணப்படும் உறுப்புகள், திசுக்கள் மற்றும் எலும்பு அமைப்புகளில் கவனம் செலுத்துபவர்கள். இதில் நுரையீரல், உணவுக்குழாய் மற்றும் மூச்சுக்குழாய் ஆகியவை அடங்கும். மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்களால் சிகிச்சையளிக்கப்படும் பொதுவான நிலைமைகளுள் சில, நுரையீரல் புற்றுநோய், சரிந்த நுரையீரல் மற்றும் விலா எலும்பு முறிவுகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. வழக்கத்திற்கு மாறாக, அவர்கள் ‘தைமோமாஸ்’ (தைமஸில் வீரியம் மிக்க (புற்று நோய்) உயிரணுவால் ஏற்படும் நோய்கள்), உள்ளங்கை வியர்த்தல் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்கள் போன்ற நிலைகளுக்கும் சிகிச்சையளிக்கின்றனர்.
மார்பக நிபுணர்கள் பின்வருபவை உட்பட மார்பகத்தின் உள்ளே உள்ள கட்டமைப்புகளில் ஏற்படும் நோய்கள் அல்லது காயங்களுக்கு சிகிச்சையளிக்கிறார்கள்:
பொதுவாக, தொராசி நிபுணர்கள் உடலின் இந்த பாகங்களை பாதிக்கும் நிலைமைகளுக்கு அறுவை சிகிச்சை தலையீடுகள் மற்றும் சிகிச்சை முறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
சிங்கப்பூரில் உள்ள மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்கள், கார்டியோடோராசிக்(இருதய-மார்பக) அறுவை சிகிச்சைப் பயிற்சித் திட்டத்தில் இருதய அறுவை சிகிச்சையுடன் இணைந்த பயிற்சிக் காலத்தை முதலில் மேற்கொள்கின்றனர். அவர்களின் பயிற்சியின் இறுதி ஆண்டுகளில், மார்பக அறுவைசிகிச்சை துறையில் மிகவும் சிக்கலான மற்றும் முக்கிய பகுதிகளைச் செய்ய அவர்கள் பிரத்தியேகமாக மார்பக அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெறுகின்றனர்.
டாக்டர் அனீஸ் டொ.ப. அகமது 15 ஆண்டுகளுக்கும் மேலாக ‘தொராசிக் ஆன்காலஜி’, மிகக்குறைந்த ஊடுருவல் கொண்ட மார்பக அறுவை சிகிச்சை, ரோபோடிக் அறுவை சிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு நிபுணுவத்துடன், தொராசிக் அறுவை சிகிச்சை துறையில் பணியாற்றி வருகிறார். உலகின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட பாலிமர் விலா எலும்புக்கூடு புனரமைப்பைச் செய்து, மார்புச் சுவர் பிரித்தல் மற்றும் புனரமைப்பு ஆகியவற்றில் அவர் முன்னோடியாகவும் உள்ளார்.
மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க முடியும், அவை:
மார்பக அறுவை சிகிச்சை நிபுணருடன் உங்கள் முதல் ஆலோசனையின் போது, உங்கள் அறிகுறிகள் மற்றும் மருத்துவ வரலாறு பற்றி உங்களிடம் கேட்கப்படும். உங்கள் வரலாற்றின் அடிப்படையில் உங்கள் மருத்துவர் அதற்குத் தொடர்புடைய நோயறிதல் இமேஜிங் சோதனைகளை மேற்கொள்ளச் செய்வார். அவற்றில் பொதுவாக PET CT ஸ்கேன் மற்றும் MRIகள் அடங்கும்.
உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தின் நிலையை மதிப்பிடுவதற்கு நுரையீரல் செயல்பாட்டு சோதனைக்கும் அவர்கள் மேற்கொள்ளச் செய்வார்கள், மேலும் கிடைத்த முடிவுகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் மேலும் அறுவை சிகிச்சைகள் குறித்து நோயாளியுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.
பொதுவாக உங்கள் GP, இருதயநோய் நிபுணர், நுரையீரல் மருத்துவர் (சுவாச மருத்துவர்), புற்றுநோயியல் நிபுணர் அல்லது பிற தொடர்புடைய நிபுணர்கள் மார்பக அறுவை சிகிச்சை நிபுணரைக் காண பரிந்துரைப்பார்கள். ஆனால் நுரையீரல் புற்றுநோய் அல்லது நுரையீரல் ஆரோக்கியத்திற்கான பரிசோதனைக்காகவும், மற்ற நுரையீரல் நிலைகளை மதிப்பிடுவதற்காகவும் மார்பக அறுவை சிகிச்சை நிபுணருடன் நேரடி தொடர்பு தொடங்கப்படலாம். இருப்பினும், மேலே பட்டியலிடப்பட்டுள்ள நிபந்தனைகளில் ஏதேனும் உங்களுக்குக் கண்டறியப்பட்டிருந்து, பரிந்துரையைப் பெறவில்லை என்றால், தயவுசெய்து எங்களுடன் ஒரு ஆலோசனைக்காகப் பதிவு செய்ய தயங்காதீர்கள். இதன் மூலம் நாங்கள் உங்களுக்கு ஆரம்ப சிகிச்சையை அளிக்க முடியும்.