சுவாச மண்டலம் என்பது உடலின் மிக முக்கியமான கட்டமைப்புகளில் ஒன்றாகும். இது சுவாசக்குழாய்கள், நுரையீரல்கள் மற்றும் இரத்த நாளங்களை உள்ளடக்கிய உறுப்புகள் மற்றும் திசுக்களை கொண்டுள்ளது. அவை உடல் முழுவதும் பிராணவாயுவைக் கொண்டு செல்வதற்கும் இரத்தத்தின் மூலம் கரியமலவாயுவை வெளியேற்றுவதற்கும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சுவாச மண்டலத்தில், பிராணவாயுவின் ஓட்டத்தைத் தடுக்கும் அல்லது நிறுத்தும் எதுவும் எதிர்மறை நிகழ்வுகளுக்கு அல்லது மரணத்திற்கும் வழிவகுக்கும். எனவே, நமது நுரையீரலையும் சுவாச மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதை உறுதி செய்வது முக்கியம்.
யோகா பயிற்சியானது, சுவாச மண்டலத்தில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, பிராணயாமா உங்கள் பிராணவாயுவின் உட்கொள்ளலை ஐந்து மடங்கு அதிகரிக்கலாம். உங்கள் மூளை, இதயம், நுரையீரல் மற்றும் செரிமான உறுப்புகளுக்கு பிராணவாயு நிறைந்த இரத்தம் வழங்கப்படும் போது, உங்கள் உறுப்புகள் சிறப்பாக செயல்படவும் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் இது வழிவகுக்கும். ஆழ்ந்த சுவாசம் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும் வழக்கமான பயிற்சியின் மூலம், செயல்திறனை அதிகரிக்கிறது. மற்றும் ஆஸ்துமா, சைனஸ், மூச்சுத் திணறல், வைக்கோல் காய்ச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற சுவாச மண்டலத்தில் உள்ள சிக்கல்களைக் குறைக்கும்.
சுவாசப் பயிற்சிகளைத் தவிர, உடலின் தசைகளைச் செயல்படுத்தும் மற்றும் இரத்த ஓட்டத்தைத் தூண்டும் உடல் யோகாசனங்கள் உள்ளன. அதாவது உங்கள் நுரையீரல் விரிவடைந்து உங்கள் உடல் முழுவதும் பிராணவாயுவை விநியோகிக்க இவை துணைபுரிகின்றன. தலைகீழ் நிலைகள் உடல் முழுவதும் சுழற்சியை வியத்தகு முறையில் மாற்றுவதற்கு உதவுகின்றன. இதனால் புவியீர்ப்பு விளைவு காரணமாக இதயம் அதிக இரத்த விநியோகத்தைப் பெற முடிகிறது. மனஅழுத்தம், மோசமான தோரணை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் காரணமாக நுரையீரலில் உள்ள வாயு பரிமாற்றத்தில் பங்கேற்காத காற்றோட்ட அளவு கொண்ட பகுதிகளையும் இது பயன்படுத்துகிறது.
இவ்வகை யோகா, சுவாசித்தல் மற்றும் ஆதரவுளித்தலுக்கும் ஆழ்ந்த முக்கியத்துவம் அளித்து, மனம் மற்றும் உடல் பதற்றத்தின் இணக்கமான வெளியாக்குதலை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. இது பட்டைகள், கட்டைகள், போல்ஸ்டர்கள் மற்றும் போர்வைகள் போன்ற முட்டுகளைப் பயன்படுத்தும் தியானப் பயிற்சியாகும். ‘வின்யாசா’ மற்றும் ‘கார்டியோ யோகா’ மிகவும் கடினமானதாக இருக்கும். மறுசீரமைப்பு யோகா கடினத்தன்மை மிகவும் குறைந்தது. ஏனெனில் இது ஓய்வை ஊக்குவித்து, உடலின் மறுசீரமைப்பு மற்றும் மீட்பு சுழற்சிகளை புதுப்பிக்கும் நமது தன்னியக்க உணர்வு அமைப்பின் 'ஓய்வு மற்றும் மீட்டெடுப்பு' அம்சமான ‘பாராசிம்பேடிக்’ நரம்பு மண்டலத்தை நிறுவுகிறது. உதாரணத்திற்கு, திசு பழுது மற்றும் தூக்கம்.
இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மன அழுத்த ஹார்மோன்களை அமைதிப்படுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தில் செயலாற்றலை அதிகரிக்கவும், நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், மனநிலையை உண்டாக்கவும், குணப்படுத்துதல் மற்றும் மீட்கும் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. மறுசீரமைப்பு யோகா அடிப்படையிலான நடைமுறைகளைப் பயன்படுத்துவது உடலியல் நன்மைகளை அளிப்பதால் அது குணமடையும் நேரத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி காட்டியுள்ளது. உதாரணத்திற்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நமது தசைகள் மற்றும் இரத்தம் பிராணவாயு ஏற்றப்பட்டிருப்பதை உறுதி செய்வது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு முக்கியமாகும். எனவே, சுவாசக் கட்டுப்பாட்டுப் பயிற்சி செய்வதற்கான ஒரு சிறந்த வழியாக மறுசீரமைப்பு யோகா விளங்குகிறது. இது உங்கள் நுரையீரலை விரிவுபடுத்தி உங்கள் இரத்த ஓட்டம் மற்றும் தசைகளுக்கு பிராணவாயுவைக் கொண்டு செல்வதில் திறம்பட உதவுகிறது.
மறுசீரமைப்பு யோகாப் பயிற்சி செய்யும் போது, ஒவ்வொரு ஆசனத்திற்கும் ‘யின்’ யோகாவை விட அதிக நேரம் ஒதுக்கப்படுகிறது, பொதுவாக சுமார் 8-10 நிமிடங்கள். இது உங்கள் தசைகள் ஓய்வெடுக்கவும், எளிதாக நீட்டிக்கவும் அனுமதிக்கிறது. இதனால் ஆழமான நீட்சி சாத்தியமாகிறது. ஆசனங்கள் மிகவும் எளிதானவை மற்றும் அவை தனிநபருக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படலாம். இதனால் எவரும் இந்த யோகா பாணியை பின்பற்ற முடியும். ஆசனங்களின் போது ஆழமாக சுவாசிப்பது இந்த பயிற்சியின் அனைத்து நன்மைகளையும் பெறுவதற்கு முக்கியமாகும். ப்ராணயாமா போன்ற பல்வேறு சுவாச நுட்பங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் முக்கியமாக ஆழமாகவும், எளிதாகவும் மற்றும் உள்நோக்கத்துடன் சுவாசிப்பதில் கவனம் செலுத்தினால், அது சிறந்த முடிவுகளைத் தரும். நீங்கள் பிராணயாமா அல்லது வேறு எந்த சுவாச நுட்பங்களையும் தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் நுரையீரலுக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சாதகமான பாதிப்பைத் தரும் நான்கு பயனுள்ள மறுசீரமைப்பு யோகா ஆசனங்கள் கீழே உள்ளன. இந்த மென்மையான பயிற்சிகள் பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானவை என்றாலும் நீங்கள் அறுவைசிகிச்சை அல்லது காயத்திற்குப் பின் குணமடைந்து வரும்கட்டத்தில் இருந்தால், அவற்றைச் செய்ய உங்கள் மருத்துவரிடம் ஒப்புதலைப் பெறவும்.
மீட்பு செயல்முறைக்கு மிகவும் பயனுள்ள ஆசனங்களில் ஒன்று உதரவிதான சுவாசம். இது 90 வினாடிகள் ஆழ்ந்த சுவாசத்தை நோக்கமாக்க் கொண்டதாகும். இது உங்கள் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை மெதுவாகக் குறைக்கிறது. அதே நேரத்தில் உங்கள் நரம்பு, சுற்றோட்ட மற்றும் நாளமில்லா சுரப்பி மண்டலம் ஆகிவை புத்துயிர் பெறுச் செய்கிறது, இது தளர்வு மற்றும் மறுசீரமைப்பை ஊக்குவிக்கிறது.
உங்கள் கன்றுகளை உங்கள் இதயத்திற்கு மேலே உயர்த்துவதற்கு அவற்றிற்குக் கீழே ஒரு போல்ஸ்டரை வைத்து வசதியான நிலையில் படுத்து இருங்கள். உதரவிதான சுவாசத்தைத் தொடங்க, உங்கள் நுரையீரலில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஆழமாக உள்ளிழுக்கும்போது, உங்கள் கீழ் விலா எலும்புகள் வெளிப்புறமாக சுழன்று, வெளிப்புறமாக விரிவடைவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் முழுமையாக மூச்சை வெளியேற்றும்போது, உங்கள் விலா எலும்புகள் உள்நோக்கி சுழல வேண்டும், உள்ளேயும் கீழேயும் நகர வேண்டும்.
அடுத்த படியைச் செய்வது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. மெதுவான, நீண்ட, ஆழமான சுவாசத்தின் ஒத்திசைவை நீங்கள் அமைத்தவுடன், ஒவ்வொரு உள்ளிழுத்தல் மற்றும் வெளியாக்குதலின் போது ஒரு மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பிக்கலாம். இந்த மந்திரம் நேர்மறையான எண்ணங்களை உருவாக்க உதவும் சொற்றொடரைக் கொண்டது. உங்களுக்கு விருப்பமான மந்திரம் கிடைத்ததும், உங்கள் சுவாசத்துடன் ஒத்திசைந்து உங்கள் மந்திரத்தை மீண்டும் சொல்லும்போது 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆழமான நீண்ட சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் தோள்கள், முழு முதுகு, கழுத்து மற்றும் தலை ஆகியவற்றைத் தாங்கும் வகையில் ஒரு போல்ஸ்டர் அல்லது ஒரு பெரிய தலையணையில் மெதுவாக படுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வசதியாக இருந்தால், உங்கள் கீழ் முதுகுப் பக்கத்தில் எந்த உணர்திறனும் இல்லை என்றால், உங்கள் கால்களை நேராக தரையில் நீட்டலாம் அல்லது உங்கள் முழங்கால்களை வளைத்து மாற்றலாம். உங்கள் மார்பை மேலும் விரிக்க உங்கள் கைகளை பக்கவாட்டில் நீட்டிக்கவும்.
ஆழ்ந்த மூச்சை எடுப்பதால், இந்த ஆசனம் நிதானமடைச்செய்து மார்பு, கழுத்து மற்றும் தோள்பட்டை அழுத்தத்தை விடுவிக்கிறது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆழமான சுவாசங்களை எடுக்கும் வரை இதே நிலையில் இருங்கள். உங்கள் மருத்துவர் ஒப்புதல் அளித்த பின், நுரையீரல், இதயம் மற்றும் மார்புகளின் அறுவை சிகிச்சைகளில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கு வடுதிசு மற்றும் ஒட்டுதல்களை மெதுவாக களைவதற்கு இந்த ஆசனம் பலனளிக்கும். இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டிய அம்சம் என்னவென்றால், எந்தவொரு ஆசனமும் உங்களுக்கு கவலையையோ அச்சத்தையோ உண்டாக்குமானால் அந்த ஆசனத்தைச் செய்வதை நிறுத்திவிடவிம்.
கால்கள்-சுவரின்-மேல் ஆசனம் என்றும் அழைக்கப்படும் ‘விபரீத கரணி’, மிகவும் விரும்பப்படும் மறுசீரமைப்பு யோகா ஆசனங்களில் ஒன்றாகும். உங்கள் கால்களை உங்கள் இதயத்திற்கு மேலே உயர்த்துவதால், புவியீர்ப்பு ஓட்டத்தை மாற்றுவதன் மூலம், இந்த ஆசனம் வீக்கத்தைக் குறைக்கவும் சிரை இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
இந்த நிலைக்குச் செல்ல, தரையில் அல்லது படுக்கையில் வசதியாக உங்கள் வலது தோள்பட்டை மற்றும் இடுப்பை சுவரில் இருந்து சில அங்குலங்கள் தள்ளி உட்காரவும். மெதுவாக, உங்கள் இடது தோள்பட்டை மீது படுத்து, உங்கள் முதுகு மற்றும் தலையை தரையில் அல்லது படுக்கையில் சாய்த்து, உங்கள் கால்களை சுவரில் சாயச் செய்யுங்கள். உங்கள் கால்களை ஒரு நாற்காலியில் வைத்து உங்கள் முழங்கால்களை வளைத்து படுக்கையின் தலைமாட்டில் வைத்தும் இந்த ஆசனத்தைச் செய்யலாம். மேலும் மாறியாமைக்க வேண்டுமானால், உங்கள் தலை மற்றும்/அல்லது இடுப்புக்கு கீழே ஒரு தலையணை அல்லது மடித்த போர்வையை வைக்கவும். 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆழமான நீண்ட சுவாசங்களை செய்யும் வரை இந்த நிலையில் இருங்கள்.
இதை ஒரு யோகா ஆசனம் என்று செல்வதைவிட, இதை ஒரு தளர்வு நிலைக்குக் கொண்டு செல்லும் நுட்பம் எனலாம். இது உட்கார்ந்தும், நின்றும் படுத்தும் செய்யலாம். உங்கள் உடல் முழுவதிலும் தளர்வு உணர்வை சீராக உருவாக்க உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் இறுக்கமாக்குவதே இதன் குறிக்கோளாகும். உதரவிதான சுவாசத்தைச் சேர்ப்பதை உறுதிசெய்து, அதை முழு நேரத்திலும் தொடரவும். ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, உங்கள் முகத்தை முடிந்தவரை இறுக்மாக சுளிக்கவும். பின் இறுக்கத்தை விடுவித்து தாடையையும் முகத்தையும் மென்மையடைய விடவும்.
மீண்டும் மூச்சை முழுமையாக உள்ளிழுத்து, மெதுவாக மூச்சை வெளியேற்றுவதற்கு முன், உங்கள் மார்பு, மேல் முதுகு மற்றும் கழுத்தில் அழுத்தத்தை உண்டாக்கும் வகையில் உங்கள் மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, உங்கள் கைகளை முஷ்டிகளாக அழுத்தி, உங்கள் கைகள் மற்றும் விரல்களின் தசைகளையும் மூட்டுகளையும் முடிந்தவரை இறுக்கிய பின், மூச்சை விடும்போது உங்கள் விரல்களை முஷ்டி நிலையிலிருந்து விடுவிக்கவும்.
மூச்சை உள்ளிழுத்து, உங்கள் இடுப்பு தசைகள் மற்றும் பிட்டத்தின் தசைகள் அனைத்தையும் இறுக்கமாக்கி, உங்கள் வயிற்றை அழுத்தி பின்னர் மூச்சை மெதுவாக வெளிவிடவும். மூச்சை உள்ளிழுக்கும்போது உங்கள் கால்விரல்களை சுருட்டி உங்கள் கால்களின் அனைத்து தசைகளையும் செயல்படுத்தவும். மூச்சை வெளியேற்றும் போது உங்கள் தசைகளை தளர்ச்சியடையச் செய்யுங்கள். முழுமையான தளர்வு நிலையில் ஓய்வெடுத்து, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆழமான சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
யோகா உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும், வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை உருவாக்கவும், உங்கள் உள் உறுப்புகளில் உள்ள நச்சை நீக்கவும் உதவுகிறது. இது அறுவை சிகிச்சைக்கு முன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது மன அழுத்தம், பதற்றம், மலச்சிக்கல் மற்றும் சோர்வு போன்ற பக்க விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான நுட்பங்களையும் வழங்குகிறது. யோகா பிராணவாயு உடல் முழுதும் பாய உதவுகிறது மேலும் இந்த சுவாச நுட்பங்களை எங்கும் செய்யலாம்.
உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் மேம்படுத்தும், உங்கள் மார்பின் தசைகளை வலுப்படுத்த உதவும் சில ஆசனங்கள் கீழே உள்ளன. இந்த மென்மையான பயிற்சிகள் பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானவை என்றாலும், உங்கள் மருத்துவரிடம் ஒப்புதலை முதலில் பெறவும்.
சாதாரணமான குறுக்கு-கால் ஆசனத்தில் உட்கார்ந்து, உங்கள் வலது கையை உங்கள் முதுகுக்குப் பின்னால் வைத்து உங்கள் இடது மணிக்கட்டைப் பிடிக்கவும். மெதுவாக உங்கள் தோள்களை பின்னால் இழுத்து, உங்கள் மார்பை விரிவுபடுத்தும் போது மூச்சை உள்ளிழுக்கவும். மூச்சை வெளிவிட்டு மெதுவாக உங்களால் முடிந்த அளவு முன்னோக்கி வளைந்து, உங்கள் நெற்றியால் உங்கள் வலது முழங்காலைத் தொட முயற்சிக்கவும். மீண்டும் மூச்சை உள்ளிழுத்து உங்களை ஆரம்ப நிலைக்கு வரவும். இப்போது முன்பு செய்தது போலவே உங்கள் நெற்றியால் இடது முழங்காலைத் தொட முயற்சிக்கவும்.
இந்த ஆசனம் நுரையீரலுக்கு முக்கியமானது. ஏனெனில் இது இரத்த ஓட்டத்தை புதுப்பிக்கிறது. மற்றும் நுரையீரல் தசைகளில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றுகிறது. இது சுவாசக் கோளாறுகள், இருமல் மற்றும் சளி முதலிய அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் உதவும்.
உங்கள் வயிற்றில் படுத்து, உங்கள் நெற்றியை தரையில் வைக்கவும். உங்கள் முழங்கைகள் இரண்டையும் உங்கள் விலா எலும்பின் இருபுறமும் வைக்கவும். உள்ளங்கைகளை தரையில் தட்டையாக வைக்கவும். மெதுவாக, மூச்சை உள்ளிழுத்து உங்களை மேலே தள்ளுங்கள். உங்கள் முதுகு மற்றும் தொப்பை தசைகளை நீட்டும்போது உங்கள் மேல் உடலை உயர்த்தவும். நீங்கள் உங்கள் தலையை பின்னால் சாய்க்கலாம், ஆனால் உங்கள் கழுத்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்தவரை உங்கள் கைகளை நேராக்குங்கள். மேலும் இந்த ஆசனத்தில் சுமார் 15-30 வினாடிகள் இருங்கள்.
இந்த ஆசனம் மார்பு மற்றும் நுரையீரலை நீட்டவும், முதுகெலும்பை வலுப்படுத்தவும் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது.
மெதுவாக உங்கள் முதுகில் படுத்து, உங்கள் முழங்கால்களை மாற்றியமைத்து வளைத்து அல்லது உங்கள் பாதங்களை உங்களுக்கு முன்னால் நீட்டவும். மூச்சை உள்ளிழுக்கும் முன் உங்கள் முழங்கைகளை உங்கள் விலா எலும்புக்கு அருகில் வைக்கவும், உங்கள் தோள்பட்டைகள், முதுகெலும்பு மற்றும் மார்பெலும்பு ஆகியவற்றை கூரையை நோக்கி உயர்த்துவதன் மூலம் உங்கள் மார்பை மேலே தள்ளவும். உங்கள் தலையை மெதுவாக கீழே இறக்கி, உங்கள் உச்சந்தலையால் தரையைத் தொடவும். மார்பைத் விரிக்க ஆழமாக மூச்சை உள்ளிழுத்து விடவும். ஆசனத்தை மாற்றியமைக்க, உங்கள் முழங்கைகள் அதிக அழுத்தத்தில் இருந்தால் சமநிலையைப் பெறக உங்கள் முதுகெலும்பு மற்றும் தலைக்கு கீழே யோகா கட்டைகளை வைக்கலாம். நீங்கள் சௌகரியமாக இருக்கும் வரை இந்த நிலையில் இருங்கள். பின்னர் மெதுவாக தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும்.
மீன் ஆசனம் நுரையீரல் தசைகளை நீட்டி வலுப்படுத்துவதன் மூலம் ஆழமான சுவாசத்தை ஊக்குவிக்கிறது. அத்துடன் உடல் முழுவதும் சுழற்சி மற்றும் இரத்த விநியோகத்தை மேம்படுத்துகிறது.
உங்கள் முதுகெலும்பை நேராகவும், உங்கள் கால்களை உங்கள் முன் நீட்டியவாறும் வசதியாக உட்காரவும். மூச்சை உள்ளிழுத்து வலது காலை வளைத்து, வலது பாதத்தை உங்கள் இடது இடுப்புக்கு அருகில் வைக்கவும். மூச்சை வெளிவிட்டு, உங்கள் இடது காலை உங்கள் வலது இடுப்புக்குக் கீழே வைக்கவும். மூச்சை உள்ளிழுத்து, உங்கள் வலது கையை உங்கள் இடது காலிலும், உங்கள் இடது கையை உங்களுக்குப் பின்னால் வைக்கவும். மூச்சை வெளிவிட்டு மெதுவாக இடது பக்கம் திருப்பி உங்கள் இடது தோள்பட்டைக்கு மேல் பார்க்கவும். 30 விநாடிகள் இந்த ஆசனத்தில் இருந்து, மெதுவாக மூச்சை உள்ளிழுக்கும்போது, உங்கள் முதுகெலும்பு நேராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மெதுவாக, ஆசனத்திலிருந்து வெளியே வந்து மறுபுறம் மீண்டும் செய்யவும்.
இந்த ஆசனம் சுவாசக் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் அளிப்பதில் மிகவும் ஆற்றல் வாய்ந்தது. ஏனெனில் உடற்பகுதியை முறுக்குவது ஆழ்ந்த சுவாசத்தை ஊக்குவிக்கிறது. நுரையீரல் தசைகளை புதுப்பிக்கிறது. மற்றும் நுரையீரல் குழியில் பிராணவாயுவின் மேம்பட்ட சுழற்சிக்கு உதவுகிறது.
நிறைவாக, யோகாவின் பண்டைய நுட்பங்கள் நம் உடல் மற்றும் மன தேவைகளை சமநிலைக்குக் கொண்டு வருவது மட்டுமல்லாமல் நமது உடல் செயல்பாடுகளை மேம்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல் செயல்பாடுகளில் முன்னேற்றம் மற்றும் உடல் முழுவதும் இரத்தப் பரவல் அதிகரிப்பதன் காரணமாக மார்பக அறுவை சிகிச்சைக்கு சென்ற அல்லது செல்லும் நோயாளிகள் யோகா பயிற்சி செய்வதால் பெரிதும் பயனடைகிறார்கள்.