நிகோடின் பற்றி எல்லாம்: அது என்ன, அது ஏன் உங்களுக்கு கேடுவிளைவிக்கும் ஒன்று?

By ICTS
அக்டோபர் 5, 2021

ஷெர்லாக் ஹோம்ஸ், புகைபிடிப்பதை விட்டுவிடவும் நன்றாக சிந்திக்கவும் பயன்படுத்திய பிரபல ஊக்க மருந்தான நிகோடின் மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகள் ஆகிய இரண்டையும் கொண்ட ஒரு சர்ச்சைக்குரிய இரசாயன கலவையாகும்.

புகைபிடித்தல் இரண்டு முக்கிய காரணங்களுக்காக அடிமையாக்குகிறது - முதலாவது கையை வாய்க்கு நகர்த்தும்போது மீண்டும் மீண்டும் ஏற்படும் தசை நினைவக்கம், மற்றொன்று நிகோடினின் தூண்டுதலுக்கு பதிலளிக்கும் வகையில் மூளையால் உற்பத்தி செய்யப்படும் ‘எண்டோர்பின்’கள் என்ற இரசாயன கலவை ஆகும். இவை இரண்டும் சிகரெட் பழக்கத்திற்கு வழிவகுக்கும்.

எனவே, புகைப்பிடிப்பவர்கள் புகைபிடிப்பதை விட்டுவிட உதவுவதற்காக, புகைப்பிடிப்பவர்களை புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் நிகோடின் தயாரிப்புகளை மருந்து நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

நிகோடின் ஒட்டுவில்லைகள் / மெல்லும் பொருட்கள் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளர்களால் பரிந்துரைக்கப்படுவதாலும் அவை பாதுகாப்பானவை என்று தோண்றுவதாலும் அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. துல்லியமாகச் சொல்வதென்றால், புகைபிடிப்பதை விட பேட்ச்கள் மற்றும் மெல்லும் பொருட்களிள் பயன்பாடு விரும்பத்தக்கதே. ஆனால் நிகோடின் ஒரு கலவையாக நமக்கு இன்னும் பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். அதனால்தான் நிகோடின் மற்றும் பிற சேர்க்கைகளைக் கொண்ட புகை இல்லாத வாப்பிங் தயாரிப்புகள் இன்னும் எதிர்மறையான ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

நிகோடின் என்றால் என்ன?

நிகோடின் என்பது ஒரு மன செயல்முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாகும். இது நமது உடலில் இருந்து மூளைக்கு நரம்பியல் தூண்டுதல்களை விரைவுபடுத்துகிறது. உண்மையில், இது ‘காஃபினை’ விட மிகவும் சக்திவாய்ந்த தூண்டுதலாகும். நிகோடின், புகைபிடித்தல் அல்லது வாப்பிங் மூலம் பொழுதுபோக்கிற்காக உட்கொள்ளப்படுவதைத் தவிர, அதன் தூண்டுதல் விளைவுகளால் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், ஒரு சில நாட்களில் சார்புநிலையைத் தூண்டும் திறன் காரணமாக, அத்தகைய பயன்பாட்டிற்கு இது பாதுகாப்பானதாகக் கருதப்படவில்லை.

சுவாச அமைப்பில் புகைபிடிப்பதால் ஏற்படும் விளைவுகள்

நிகோடின் சுவாச மண்டலத்தை மூன்று வழிகளில் பாதிக்கிறது.

  • நிகோடின் மற்றும் அதன் தயாரிப்புகளின் நுரையீரலில் நேரடியாக தாக்கம்
  • மத்திய நரம்பு மண்டலத்தில் நிகோடின் மற்றும் அதன் துணை தயாரிப்புகளின் விளைவுகள்
  • நிகோடின் மற்றும் அதன் தயாரிப்புகளின் வளர்சிதை மாற்றங்கள் காரணமாக புற்றுநோயின் அதிக ஆபத்து

நேரடித் தாக்கத்தின் விளைவுகள்

புகைபிடித்தல் புகைப்பிடிப்பவர்களை எம்பிஸிமாவுக்கு(நுரையீரல் திசுக்களின் படிப்படியான சேதம்) வழிவகுக்கும். இது நுரையீரலின் காற்று இடைவெளிகளை அழிப்பதால் மூச்சுத் திணறலால் ஏற்படுகிறது.

மத்திய நரம்பு மண்டலத்தில் விளைவு (சிஎன்எஸ்)

நிகோடின் மற்றும் அதன் தயாரிப்புகள் ‘வேகல் ரிஃப்ளெக்ஸ்’ மற்றும் ‘பாராசிம்பேடிக் கேங்க்லியா’வைத் தூண்டுவதன் மூலம் மத்திய நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது மூச்சுக்குழாய் சுருக்கத்தின் விளைவாக சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகள் சுருங்குகின்றன.

ஒரு ஆய்வில், நிகோடின் மூளைக்குள் செலுத்தப்பட்டு மற்றும் அவர்களின் மூளை சமிக்ஞைகள் மற்றும் சுவாச முறைகள் கண்காணிக்கப்பட்டன. மூளையில் நிகோடின் செலுத்தப்பட்டவர்களுக்கு, சமிக்ஞைகள் வெடிப்புகளின் அதிர்வெண் அதிகரித்தது, இது ஒரு ஆழமற்ற மற்றும் விரைவான சுவாசித்தலுக்கு வழிவகுக்கும்.

புற்றுநோய் ஆபத்து

நிகோடின் மற்றும் அதன் தயாரிப்புகள், கட்டி வளர்ச்சியுடனும் மெட்டாஸ்டாஸிஸ்ஸுடனும் (புற்றுநோய் பரவுதல்) பல வழிமுறைகள் மூலம் (அதிகரித்த ஆஞ்சியோஜெனெசிஸ்) தொடர்புபடுத்தும் பல ஆய்வுகள் உள்ளன. அடிப்படையில், இதன் பொருள் நிகோடினின் நுகர்தல், கட்டிகள் பெரிய அளவில் வளரும் வாய்ப்புகளை அதிகரிக்கும். அவை நுரையீரலைத் தாண்டி மற்ற அமைப்புகளுக்கு பரவும் வாய்புகளையும் அதிகமாக்கும்.

மெட்டாஸ்டாசிஸ் என்பது புற்றுநோய் முன்னேற்றத்தின் ஒரு முக்கியமான படியாகும், இது ஆரம்ப கட்ட புற்றுநோய்களை சிகிச்சையளிப்பதற்கு மிகவும் கடினமான இறுதி நிலை புற்றுநோய்களாக மாற்றுகிறது. வளர்ந்து வரும் கட்டி உயிரணுக்களுக்கு இரத்த வழங்கதல் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயின் வளர்ச்சிக்கு நிகோடின் மேலும் உதவுகிறது.

இதயநாள அமைப்பு அமைப்பு மீதான விளைவுகள்

நிகோடின் நம் உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை தனித்துவமான வழிகளில் மாற்றுவதன் மூலம் இருதயநாள அமைப்பையும் பாதிக்கிறது. எனவே, நிகோடினின் நீண்ட காலப் பயன்பாடு இதய தமனி நோய்கள் மற்றும் இரத்த நாளங்களின் நோய்களின் வாய்ப்பை அதிகரிக்கிறது. ஏனெனில் இதயம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பிராணவாயுவைப் பெறுவது குறையும். நிகோடின் இதயத்தில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் மென்மையான தசைகளின் புறணியையும் தடிமனாக்கலாம். இது இதயத்தைச் சுற்றி இரத்த ஓட்டம் தடைபடுவதற்கு மேலும் பங்களிக்கிறது.

இந்த விளைவுகள், எளிமையாகச் சொன்னால், இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற இருதய நோய்களின் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

பிற அமைப்புகளில் விளைவுகள்

நுரையீரல் மற்றும் இதயத்திற்கு அப்பால், நிகோடின் நமது சிறுநீரகங்கள், நோயெதிர்ப்பு, இனப்பெருக்கம் மற்றும் கண் செயல்பாடுகளையும் மோசமாக பாதிக்கிறது. அவற்றில் சில:

  • சிறுநீரக செயலிழப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்தல்
  • பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு
  • கண்புரை உருவாக்கம்
  • சீர்குலைந்த / மாற்றப்பட்ட மாதவிடாய் சுழற்சிகள்
  • கருவுறுதலின் வாய்ப்பு குறைதல்

முடிவுரை

முடிவில், நிகோடின், சிகரெட் வடிவிலோ வேறு வடிவஇலோ பாதுகாப்பானது அல்ல. அதை உட்கொள்ளக்கூடாது. அது புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான மருத்துவ ஆலோசனையின் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அது பல தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் பொழுதுபோக்கிற்காக அதைப் பயன்படுத்தக்கூடாது.

chevron-left
chevron-right