மனித இயந்திர அறுவை சிகிச்சை (மனித இயந்திர-உதவி அறுவைசிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது), குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட அறுவை சிகிச்சை (‘எம்ஐஎஸ்’) தளங்களில் மிகவும் மேம்பட்ட வடிவமாகும். - உடலில் சாவித்துளை அளவு கீறல்கள் (8 மிமீ) மூலம் செயல்முறைகள் செய்யப்படும். மனித இயந்திர அறுவை சிகிச்சை என்பது MIS இன் மிகவும் மேம்பட்ட வகையாகும். இது ஒரு காலத்தில் பாரம்பரியமாக திறந்த முறைகளால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு, அதாவது உடலில் ஒரு பெரிய கீறலை ஏற்படுத்துகிறது அறுவை சிகிச்சைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது,. இங்கே ICTS இல், மனித இயந்திரதின் மூலம் நுரையீரல் பிரித்தெடுத்தல் என்பது நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் விருப்பமான முறையாகும்.
சிங்கப்பூரில் மனித இயந்திர அறுவை சிகிச்சை என்பது ஒரு கேமராவுடன் இணைக்கப்பட்ட ஒரு மனித இயந்திரக் கையை உள்ளடக்கிய ஒரு அமைப்பைக் கொண்டுள்ளது. அத்துடன் அறுவை சிகிச்சைக் கருவிகளுடன் இணைக்கப்பட்ட பல இயந்திரக் கைகளையும் கொண்டுள்ளது. இந்த கைகள் மெல்லிய, நீளமான மற்றும் வெற்று குழாய்கள் ஆகும். அவை அறுவை சிகிச்சைத் தளத்தில் செய்யப்பட்ட சிறிய கீறல்கள் மூலம் உடலில் செருகப்படுகின்றன. அறுவை சிகிச்சை படுக்கைக்கு அருகில் அமைந்துள்ள கணினி பணியகத்தின் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர் இந்த கைகளை கட்டுப்படுத்துவார். பணியகம் அறுவை சிகிச்சை நிபுணர் உயர்-வரையறையில் அறுவைசிகிச்சை தளத்தின் உருபெருக்கப்பட்ட காட்சிகளைப் பெற வழி வகுக்கிறது. இதன் மூலம் சிக்கலான செயல்முறைகளை மிகவும் துல்லியமாகச் செய்ய இயலுகிறது. அறுவை சிகிச்சையின் போது அறுவை சிகிச்சை குழுவின் மற்ற உறுப்பினர்களும் மூல அறுவை சிகிச்சை நிபுணருக்கு உதவுவார்கள்.
மனித இயந்திர அறுவை சிகிச்சையின் தன்மையைக் கருத்தில் கொள்ளும் போது, மனித இயந்திர அறுவை சிகிச்சை முறையைப் பயன்படுத்தும் பல அறுவை சிகிச்சை நிபுணர்கள் அதை, மிகவும் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்வதற்கு, ஏற்புடையதாகக் கண்டறிந்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்ய, அறுவை சிகிச்சை நிபுணர்கள் அதிக துல்லியத்துடன், இயக்க வரம்பு மற்றும் கட்டுப்பாடுடன் செயல்பட, தங்கள் சொந்த கைகளுடன் ஒப்பிடுகையில், இயந்திரக் கருவிகளின் பயன்பாடு சிறந்தது என்று கண்டறிந்துள்ளனர். ‘ஸ்டீரியோஸ்கோபிக் 3D வீடியோ’ கேமராவின் பயன்பாடு, கணினி பணியகத்தில் காணக்கூடிய உயர்-வரையறைக் காட்சிகளுடன் அறுவை சிகிச்சை தளத்தின் சிறந்த காட்சிப்படுத்தலை அனுமதிக்கிறது. (வெறும் கண்ணைக் கொண்டு பார்ப்பதை விட சிறந்த உருப்பெருக்கம் மற்றும் அறுவை சிகிச்சை தளத்தின் ஆழமான உணர்வை அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு வழங்குகிறது). அதிக ஆழமான உணர்தல், துல்லியம், இயக்கம் மற்றும் கட்டுப்பாடு வரம்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்ள்ளும் போது, மனித இயந்திர அறுவை சிகிச்சையும் மிகவும் துல்லியமானது எனலாம்.
மேலும், நோயாளியின் கண்ணோட்டத்தில், மனித இயந்திர அறுவை சிகிச்சையின் குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய தன்மையைக் கருத்தில் கொண்டு, இரத்தப்போக்கு, வலி, தொற்று மற்றும் வடு போன்ற சிக்கல்களின் ஆபத்து குறைவாக உள்ளது. கீறல்களும் சிறியதாக இருப்பதால், நோயாளிகள் குணமடையும் நேரமும் அவர்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலமும் குறைகிறது. ஒரு குறுகிய மீட்பு நேரத்தைக் கொண்டிருப்பது, நோயாளியின் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்புவதற்கு அல்லது அவர்களின் நுரையீரல் புற்றுநோய்களுக்கான புற்றுநோயியல் சிகிச்சையில் மேலும் கவனம் செலுத்துவற்கும் உதவுகிறது.
2019 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில், ஆரம்ப கட்ட நுரையீரல் புற்றுநோய்க்கான நுரையீரலின் ஒரு பகுதி அகற்றுவது, ஒட்டுமொத்த உயிர்வாழ்வு விகிதங்கள் மனித இயந்திர அறுவை சிகிச்சையில் 86.1% ஆகவும், திறந்த அறுவை சிகிச்சையில் 83.2% ஆகவும் இருந்தது. இதன் மூலம் மனித இயந்திர அறுவை சிகிச்சை ஒரு பாதுகாப்பான நடைமுறைகுச் சாத்தியமான நுட்பமாகும் என்பது தெரிகிறது. இதனால் நீண்டகால நோக்கில் உயிர் பிழைப்பு விகிதங்கள் அதிகரிப்பதைக் காணலாம்.
மனித இயந்திர அறுவை சிகிச்சையின் பல நன்மைகள் உள்ளன. முக்கியமாக உடலில் உருவாக்கப்பட்ட சிறிய கீறல்கள் மூலம் அறுவைசிகிச்சைகளை குறைந்தபட்ச ஊடுருவல் முறையில் மேற்கொள்ள முடிகிறது. இது அறுவைசிகிச்சையினால் ஏற்படும் சிக்கல்களான இரத்தப்போக்கு, தொற்று மற்றும் வலி போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. மேலும் குறுகிய காலத்திற்கு மருத்துவமனையில் தங்குவதற்கும் குறுகிய மீட்பு நேரத்திற்கும் வழிவகுக்கிறது. மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிந்திய மீட்புக்குப் பிறகு சிறகய வடுக்களே உள்ளன.
மேலும், மனித இயந்திர அறுவை சிகிச்சை முறையைப் பயன்படுத்துவதன் மூலம், அறுவைசிகிச்சை செய்பவர்களுக்கு, அறுவை சிகிச்சை தளத்தின் சிறந்த காட்சிப்படுத்தல் மற்றும் இயந்திரக் கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அறுவை சிகிச்சையை அதிக துல்லியத்துடன் செய்யும் திறனை மனித இயந்திர அறுவை சிகிச்சை அளிக்கிறது.
மனித இயந்திர அறுவை சிகிச்சையின் தீமைகள் பின்வருமாறு:
அறுவை சிகிச்சைக்கான அறிகுறி சரியாக இருக்கும் வரை எவரும் மனித இயந்திர அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். உண்மையில், திறந்த முறைகள் மூலம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள இயலாத சில நோயாளிகள், இந்த செயல்முறையின் குறைந்தபட்ச ஊடுருவல் தன்மை காரணமாக இயந்திர அறுவை சிகிச்சைக்குத் தகுதியானவர்களாக மாறுவார்கள்.
எனவே மனித இயந்திர அறுவை சிகிச்சைக்கு உட்படுவதற்கான முடிவு, அறிகுறி, உடல் ஆராக்கியம் மற்றும் உங்கள் அறுவை சிகிச்சை நிபுணருடன் கலந்துரையாடல் ஆகியவற்றைப் பொறுத்தது. மனித இயந்திர இயங்குதளம் உங்களுக்கு ஏற்றதா என்பதை அறுவை சிகிச்சை நிபுணர் தீர்மானிப்பார்.
மனித இயந்திர அறுவை சிகிச்சை என்பது ஒரு புதிய வகை MIS ஆகும். இது பயனுள்ள, செலவு குறைந்த மற்றும் மிகவும் துல்லியமானது. இங்கே ICTS இல், டாக்டர் அனீஸ் பல நுரையீரல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க மனித இயந்திர அறுவை சிகிச்சையில் பயிற்சி பெற்றுள்ளார். மனித இயந்திர அறுவை சிகிச்சை உங்களுக்கு ஏற்ற சிகிச்சையா என்பதைக் கண்டறிய, எங்கள் மையத்திற்கு வாருங்கள். உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிப்போம். மேலும் உங்களுக்குத் தேவையான சிறந்த சிகிச்சை முறையைத் தீர்மானிப்போம்.
Spaggiari, Lorenzo, மற்றும் பலர். "ஆரம்ப-நிலை நுரையீரல் புற்றுநோய்க்கான மனித இயந்திர லோபெக்டோமிக்குப் பிறகு உயிர்வாழ்வது பற்றிய சுருக்கமான அறிக்கை." ‘ஜர்னல் ஆஃப் தோராசிக் ஆன்காலஜி’, ‘ஜர்னல் ஆஃப் தோராசிக் ஆன்காலஜி, 19 ஆகஸ்ட் 2019’, https://www.jto.org/article/S1556-0864(19)30666-5/fulltext.
அணுகப்பட்டது 8 டிசம்பர் 2022.