ஒரு நபர் எந்த உடல் செயல்பாடும் செய்யாமல் அல்லது அவர் இருக்கும் இடம் வெப்பமாக இல்லாமல் இருந்தும் அவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்தால், இந்த நிலை ‘ஹைப்பர்ஹைட்ரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மருத்துவ பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உடலின் பல்வேறு பகுதிகளில் அதிகப்படியான வியர்வை ஏற்படுகிறது. இதன் காரணமாக, சமூக கவலைகள், தன்னம்பிக்கை குறைதல், சொந்த உடலை நினைத்து வெட்கப்படுதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். இதைத் தவிரத்து, ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அன்றாட வாழ்க்கையில் தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
நமது தோலில் உள்ள வியர்வை சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக வியர்வையை உற்பத்தி செய்யத் தொடங்கும் போது ஹைப்பர்ஹைட்ரோசிஸ் ஏற்படுகிறது. உடலில் உள்ள மன அல்லது உடல் கோளாறு காரணமாக இது நிகழலாம். இந்த நிலையை சரிசெய்ய ஒரு நபர் சரியான சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். நிலைமையைப் பொறுத்து மருத்துவர் பல முறைகளை பரிந்துரைக்கலாம். சில சந்தர்ப்பங்களில், ஹைப்பர்ஹைட்ரோசிஸை முற்றிலுமாக அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
எந்தவொரு தோல் சார்ந்த நோய்க்கும் ஒருவர் தோல் மருத்துவரை அணுகலாம். இந்த மருத்துவர்களுக்கு உங்கள் பிரச்சனையைச் சரி செய்ய தேவையான திறமைகள் உள்ளன. மருத்துவர்கள் சில சமயங்களில் மூல காரணத்தைக் கண்டுபிடித்து, அதை சரிசெய்து, நோயாளிக்கு எல்லா நேரங்களிலும் வியர்ப்பதை நிறுத்தலாம்.
சாதாரணமாக, மனித உடல், உறுப்புகளை குளிர்விக்க வியர்க்கிறது. இது பொதுவாக அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி செய்யும் போதும், மன அழுத்தம் ஏற்படும் போதும், சுற்றுப்பறம் வெப்பமாக இருக்கும் போதும் ஏற்படும். இருப்பினும், ஹைப்பர்ஹைட்ரோசிஸ் விஷயத்தில், ஒருவருக்கு எந்த காரணமும் இல்லாமல் வியர்க்க ஆரம்பிக்கும். பிரச்சனை தொடர்ந்தாலும் வாழ்க்கையில் அது வேறு பல இடையூறுகளை விளைவித்தாலும் நோயாளி மருத்துவரைச் சந்திக்க வேண்டும். பின்வரும் பட்டியலில் உள்ள அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்:
யர்வை சுரப்பிகளைத் தூண்டும் பல்வேறு காரணிகள் இருக்கலாம். இது மனநல கோளாறுகள் அல்லது சில அடிப்படை நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
ஹைப்பர்ஹைட்ரோசிஸின் சில பொதுவான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
மாதவிடாய் நிறுத்தம்: இது ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முடிவடையும் ஒரு நிலை.
குறைந்த இரத்தச் சர்க்கரை: இரத்தத்தில் குறைவான சர்க்கரை உடல் சக்தியைக் குறைகிறது. இது வியர்வையை ஏற்படுத்தும்.
இதய நோய்: பல இதய பிரச்சனைகள், பலவீனம் மற்றும் உடலில் அதிகப்படியான வியர்வையுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன.
நரம்பு கோளாறுகள்: சமிக்ஞைகளை கடத்துவதில் நரம்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பகுதியில் கோளாறு ஏற்பட்டால், உடலின் இயல்பான செயல்பாடுகளில் ஒரு இடையூறு உருவாகிறது.
சில நோய்த்தொற்றுகள்: பல வகையான நோய்த்தொற்றுகள் ஹைப்பர்ஹைட்ரோசிஸை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோய்: உயர் இரத்த சர்க்கரை நமது ஒட்டுமொத்த அமைப்பை கடுமையாக பாதிக்கிறது.
பொதுவான பரிசோதனை: மருத்துவர் அடிப்படை மருந்துகள் மற்றும் நோய்களின் குடும்ப வரலாற்றை பரிசோதிப்பார். ஏதேனும் நரம்பு பிரச்சினைகள் அல்லது மனநல கோளாறுகள் உள்ளனவா என நோயாளி பரிசோதிக்கப்படலாம்.
இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள்: இந்த சோதனைகளில், நோயாளியின் உடலை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். இதில் ஏதேனும் தொற்றுகள் அல்லது ‘ஹைப்பர் தைராய்டிசம்’(தைராய்டு சுரப்பி அதிக அளவில் தைராய்டு சுரப்பிநீரைச் சுரத்தல்) மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவு போன்ற பிற நிலைகளுக்கான சோதனைகளும் அடங்கும்.
வியர்வை பரிசோதனை: பிரச்சனையின் சரியான இடத்தை மருத்துவர் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், ‘தெர்மோர்குலேட்டரி’ சோதனை, தோலின் மின் கடத்துத்திறனின் அளவீடு மற்றும் ‘அயோடின்-ஸ்டார்ச்’(மாவுச்சத்து இருப்பை பரிசோதித்தல்) சோதனை போன்ற பல்வேறு சோதனைகளை நடத்தலாம்.
ஹைப்பர்ஹைட்ரோசிஸை குணப்படுத்த, மருத்துவர் சில மருந்துகளைப் பயன்படுத்துவார். இந்த மருந்துகள் எந்த நோயாளிக்கும் வியர்வையைக் கட்டுப்படுத்தும். இந்த முறை தோல்வியுற்றால், நோயாளிக்கு அறுவை சிகிச்சைகள் மற்றும் மற்ற சிகிச்சைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். இந்த நுட்பங்களில் சில பின்வருமாறு:
ஆன்டிபெர்ஸ்பிரண்ட்ஸ்: மருத்துவரால் வழங்கப்படும் இந்த மருந்து உங்கள் சருமத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். இரவில் வியர்வை ஏற்படுவதைத் தவிர்க்க, படுக்கைக்குச் செல்வதற்கு முன் மற்றும் எழுந்த பிறகு இதைப் பயன்படுத்தவும்.
நரம்பு-தடுப்பான்கள்: இந்த மருந்தின் முக்கிய நோக்கம், இலக்கு நரம்புகள் ஒன்ரொடொன்று தொடர்புகொள்வதைத் தடுப்பதாகும். இதனால் வியர்த்தலின் அளவைக் குறைக்கலாம்.
ஆண்டிடிபிரஸண்ட்ஸ்: இந்த மருந்துகள் மன அழுத்தத்தை குணப்படுத்த மக்களுக்கு கொடுக்கப்படுகின்றன. நோயாளிகளின் வியர்வையைக் குறைக்கவும் இம்மருந்துகள் உதவுகின்றன.
கிரீம்கள்: தலை மற்றும் முகத்திற்கு, ‘கிளைகோபைரோலேட்’ போன்ற கிரீம்கள் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சிகிச்சையில் உதவும்.
‘நியூரோடாக்சினை’ உட்செலுத்துதல்: இந்த நச்சு ஒரு குறிப்பிட்ட பகுதியில் வியர்வையை விளைவிக்கும் எந்த நரம்பு முடிவையும் முழுமையாகத் தடுக்கிறது. குறிப்பிட்ட மாதங்களுக்குப் பிறகு முழு சிகிச்சையும் மீண்டும் செய்யப்பட வேண்டும்.
வியர்வை சுரப்பிகளை அகற்றுதல்: வியர்வை சுரப்பிகளை அகற்றுவதன் மூலம் அக்குள் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் வியர்த்தல் பிரச்சனையைக் குணப்படுத்தலாம். ஒரு உறிஞ்சும் சிகிச்சையும் செய்யப்படலாம், இது குறைவான ஊடுருவல் கொண்ட சிகிச்சையாகும்.
சிம்பதெக்டோமி: இந்தச் செயல்முறையில், வியர்வையை உண்டாக்கும் முதுகெலும்பு நரம்புகள் சில நுட்பங்களைப் பயன்படுத்தி அழிக்கப்படுகின்றன.
மைக்ரோவேவ் தெரபி: அதிக ஆற்றல் கொண்ட நுண்ணலைகள் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் செலுத்தப்படுகின்றன. இந்த அலைகள் வியர்வை சுரப்பிகளை முற்றிலுமாக மூடிவிடுகின்றன. இதைச் செய்து முடிக்க சுமார் 30 நிமிடங்கள் ஆகும். மற்றும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.
சிங்கப்பூரில் வியர்வை தொடர்பான எந்தப் பிரச்சனைக்கும், ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அறுவை சிகிச்சையை வழங்கும் ஐசிடிஎஸ் மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனை பெறலாம். இந்த மருத்துவ மையங்களில் உங்கள் நிலைக்கு முழுமையான தீர்வைக் காணலாம். மேலும், சிங்கப்பூரில் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சிகிச்சையை செய்து முடிக்க அதிக நேரம் எடுக்காது.