நுரையீரல் புற்றுநோய் பற்றி எல்லாம்

By ICTS
மே 25, 2021
Lung cancer

நுரையீரல்கள் நமது உடலின் ஒரு முக்கிய பாகம். அவை நமது உடலின் அமைப்பில் உள்ள வாயுக்களின் பரிமாற்றத்தின் முக்கிய செயல்பாட்டைச் செய்கின்றன. பிராணவாயு உறிஞ்சப்பட்டு கரியமலவாயு வெளியிடப்படுகிறது. இந்த செயல்பாடு ஒவ்வொரு உயிரணவுக்கும் முக்கியமானது. இந்த உயிரணுக்கள் சரியான அளவு பிராணவாயுவைக் கொண்டு மட்டுமே சரியாக இயங்க முடியும். இரத்தம் போதுமான அளவு பிராணவாயுவைப் பெறவில்லை என்றால், அதன் விளைவு ஆபத்தானது.

அதனால்தான் ஆரோக்கியமான நுரையீரல் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கிறது. இந்த நுரையீரல்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு நுரையீரல் கட்டமைப்புகள் மூச்சுக்குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளன

நுரையீரலின் உள்ளே, மூச்சுக்குழாய் மற்றும் அல்வியோலி(பிராணவாயு மற்றும் கரியமலவாயு பரிமாற்றம் நடைபெறும் மிகச் சிறிய காற்று பைகள்) வாயுக்களின் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன. நுரையீரல் புற்றுநோய் இந்த பகுதிகளில் ஏற்படலாம். இது பிராணவாயு மற்றும் கரியமலவாயு பாதையைத் தடுப்பது மட்டுமல்லாமல் நுரையீரலுக்குள் கொப்புளங்கள் மற்றும் திரவம் நிறைந்த பைகளை உருவாக்குகிறது. இது நுரையீரலுக்குள் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.

இது தவிர, புற்றுநோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. எனவே, இந்த நோயைக் குணப்படுத்த முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை தேவை.

புற்றுநோயைப் பற்றிய பொதுவான தகவல்

எந்த வகையான புற்றுநோயிலும், மாற்றியமைக்கப்பட்ட உயிரணுக்கள் உடலில் வேகமாக வளர்ந்து அருகிலுள்ள உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த வளர்ச்சி நம் உடலுக்கு ஆபத்தானது மற்றும் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. வயது, புகைபிடித்தல், உணவுப்பழக்கம் மற்றும் குடும்பத்தில் புற்றுநோயின் வரலாறு போன்ற பல்வேறு காரணங்களால் இது நிகழலாம். மீட்பு செயல்முறை புற்றுநோயின் நிலை மற்றும் சிகிச்சையின் வகையைப் பொறுத்தது. சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், புற்றுநோய் உயிரணுக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம்.

நுரையீரல் புற்றுநோய்கள் ‘சிறிய உயிரணு அல்லாத’ மற்றும் ‘சிறிய உயிரணு’ என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. புற்றுநோய் உயிரணுவின் அளவைப் பொறுத்து இவை பெயரிடப்பட்டுள்ளன. இந்த வகைகளின் அடிப்படை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

சிறிய-அல்லாத உயிரணுக்கள்

இது நுரையீரல் புற்றுநோயின் பொதுவான வகையாகும். இது மேலும் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

  • ‘ஸ்குவாமஸ்’ உயிரணுக்கள் புற்றுநோய்: நுரையீரலின் செதிள் உயிரணுக்களில் புற்றுநோய்க்கான முதன்மைக் காரணம் புகைபிடித்தல். இந்த புற்றுநோய் காற்றுப்பாதையில் இருக்கும் இந்த தட்டையான செல்களில் உருவாகிறது. அதன் பிறகு, புற்றுநோய் உயிரணுக்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன.
  • பெரிய உயிரணு ‘கார்சினோமா’: இந்த வகை நுரையீரல் புற்றுநோய் நுரையீரலின் எந்தப் பகுதியிலும் உருவாகலாம். இது வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோயாகும், இது மருத்துவர்களால் குணப்படுத்த கடினமாக உள்ளது.
  • ‘அடினோகார்சினோமா’: இது நுரையீரலின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. இது மருத்துவர்களால் எளிதில் கண்டறிய முடியும்.

சிறிய உயிரணு

இது குறைவான சதவீத மக்களில் மீண்டும் மீண்டும் வரும் புற்றுநோயாகும். இது சிறிய அல்லாத நுரையீரல் புற்றுநோயை விட வேகமாக வளர்ந்து பரவுகிறது. மற்றும் பெரும்பாலும் இதற்குக் கதிர்வீச்சு சிகிச்சை அல்லது கீமோதெரபி மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.

அறிகுறிகள் என்ன?

ஒவ்வொரு நபரையும் பொறுத்து நுரையீரல் புற்றுநோய் பல அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம். பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்று உங்கள் கவனத்திற்கு வந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகவும்:

  • மார்பு அசௌகரியம் மற்றும் வலி
  • குரலில் மாற்றம்
  • இருமும் போது இரத்தம் வெளியாவுதல்
  • சரியாக சுவாசிக்க முடியமலிருத்தல்
  • கடுமையான தலைவலி
  • திடீர் எடை இழப்பு
  • எப்போதும் சோர்வாக உணர்தல்
  • அடிக்கடி நுரையீரல் தொற்று ஏற்படுவது
  • பசியின்மை
  • இருமல் நீண்ட நேரம் இருத்தல்

நோய் கண்டறிதல்

உடல் பரிசோதனை

முதல் கட்டத்தில், மருத்துவர் நோயாளியின் ஆரோக்கியத்தை பரிசோதிப்பார். மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அடிப்படை அறிகுறிகளை பரிசோதிப்பார். நோயாளி சில மருந்துகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறலாம்.

டிஜிட்டல் ஸ்கேன்

CT, X-RAY மற்றும் MRI உட்பட பல வகையான ஸ்கேன்கள் செய்யப்படுகின்றன. இந்த ஸ்கேன்கள் உறுப்பின் உள் படத்தை உருவாக்கி, விரும்பிய முடிவை டிஜிட்டல் திரையில் காண்பிக்கும். இந்த வழியில், மருத்துவர் பாதிக்கப்பட்ட பகுதியை கண்டுபிடிக்க முடியும். சிங்கப்பூரில் ஆரம்பகால நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை சிறந்த நோயறிதலை வழங்குகிறது.

பயாப்ஸி

இது ஒரு திசு மாதிரியைப்பெறும் நுட்பமாகும். இந்த நடைமுறையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு, மேலும் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.

நுரையீரல் புற்றுநோய் எவ்வாறு குணமாகும்?

சிறிய-அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையானது சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கிச்சையிலிருந்து வேறுபடுகிறது. சிகிச்சையின் செயல்முறை, புற்றுநோயின் கட்டத்தைப் பொறுத்தது. அடுத்த கட்டங்களில், புற்றுநோயை முற்றிலுமாக அகற்றுவது மற்றும் அதன் வளர்ச்சியை நிறுத்துவது கடினம்.

பெரும்பாலான சூழ்நிலைகளில், நுரையீரலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பெரும்பாலான அறுவை சிகிச்சை நிபுணர்கள் தேர்ந்தெடுக்கும் முதல் தேர்வு இதுவாகும். சில நேரங்களில், நோயாளியின் உடலில் இருந்து ஒரு முழு நுரையீரல் அகற்றப்படும்.

இதைத் தவிர, நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்த இன்னும் சில முறைகள் உள்ளன. இந்த நுட்பங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

கீமோதெரபி

வேகமாக வளரும் புற்றுநோய் உயிரணுக்களை அழிக்க நோயாளிக்கு அதிக அளவு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

கதிர்வீச்சு சிகிச்சை

புற்றுநோய் உயிரணுக்களை ஒழிக்க உயர் ஆற்றல் கற்றைகள் நுரையீரலை குறிவைக்கின்றன.

இம்யூனோதெரபி

புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் நுரையீரல் புற்றுநோய் நிபுணரைக் காண எங்கே செல்வது?

உடலில், புற்றுநோய் மேலும் வளர்ச்சியடைவதைத் தடுக்க நுரையீரல் புற்றுநோய்க்குச் சரியான சிகிச்சை தேவை. சிங்கப்பூரில் நுரையீரல் புற்றுநோய் நிபுணர் இந்த நிலையில் உங்களுக்கு உதவ முடியும். சிங்கப்பூரில் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் கலந்து ஆலோசித்து, நுரையீரல் புற்றுநோயை அகற்றுவதற்கான முழுமையான செயல்முறையைப் பற்றி கேட்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும், நுரையீரல் நிபுணர் உங்கள் பிரச்சனையை ஆய்வு செய்வதற்கான கருவிகளையும் அறிவாற்றலையும் கொண்டிருப்பார்.

chevron-left
chevron-right