நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போவதால், நுரையீரல் புற்றுநோயின் சிறப்பியல்பு அடையாளமாக நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு ரிப்பன், வெள்ளை நிறத்தில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்த நவம்பரில், நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி, நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பின்பற்றக்கூடிய 5 குறிப்புகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
புகையிலை புகையின் வெளிப்பாடு நுரையீரல் புற்றுநோய்க்கான #1 காரணமாகும். நீங்கள் எவ்வளவு அதிகமாக புகைக்கிறீர்களோ, அதே போல் நீங்கள் புகைத்த வருடங்களும் உங்கள் ஆபத்தை கணிசமாக அதிகரிக்கின்றன. புகைப்பவர் விடும் புகையைச் சுவாசித்தாலும் நுரையீரல் புற்றுநோயை உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. தங்கள் வாழ்நாளில் ஒரு நாளும் புகைபிடிக்காத நபர்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகும் அபாயம் உள்ளது. இருப்பினும், புகைபிடிப்பவர்கள் அல்லது புகைபிடித்தவர்கள், இவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் வாய்ப்புகள் குறைவு.
இரசாயனங்கள் மற்றும் அவற்றின் துணை தயாரிப்புகளை கையாளும் தொழில்களில் பணிபுரிவது, உதாரணத்திற்கு கப்பல் கட்டுதல், ‘ஸ்ப்ரே பெயிண்டிங்’, ஆஸ்பெஸ்டாஸ்(கல்நார்)-தொடர்புடைய தொழில்கள் போன்றவை நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. உடல் பருமன் நுரையீரல் புற்றுநோயுடன் மட்டுமல்லமல் மற்றும், பல புற்றுநோய்களுடனும் நெருக்கமாக தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அதிகப்படியான உடல் கொழுப்பு புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
நுரையீரல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகளை குறைக்க நீங்கள் பின்பற்றக்கூடிய பல படிகள் மற்றும் குறிப்புகள் உள்ளன. உங்கள் ஆபத்தை குறைக்க உதவும் 5 குறிப்புகளை நாங்கள் இங்கு அளித்துள்ளோம்.
நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க 5 குறிப்புகள்
நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், புகைபிடிப்பதை நிறுத்துவதுதான்.
நீங்கள் ஒரு வருடம் அல்லது பல தசாப்தங்களாக புகைபிடித்திருந்தாலும், புகைபிடிப்பதை நிறுத்துவது நுரையீரல் புற்றுநோயைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும். புகையிலையில் நிகோடின் (இந்த போதை மருந்து சிகரெட் புகையில் உள்ள கடுமையான இரசாயனங்களில் ஒன்று), ‘ஹைட்ரஜன் சயனைடு’, ‘ஃபார்மால்டிஹைட்’, ஈயம், ‘ஆர்சனிக்’, ‘அம்மோனியா’ மற்றும் ‘பென்சீன்’ போன்ற பல நச்சுப் பொருட்கள் உள்ளன. இந்தப் பொருட்கள் நுரையீரல் புற்றுநோய் மட்டுமல்லாமல், மற்ற சுவாச நோய்கள் உண்டாகும் வாய்ப்பையும் அதிகரிக்கும்.
நீங்கள் பல வருடங்கள் பல சிகிரெட்டுகளை புகைத்து இருந்தபோதிலும், இப்போது புகைபிடிப்பதை நிறுத்துவதன் மூலம் நீங்கள் புகைபிடிக்காமல் இருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை படிப்படியாகக் குறைக்கலாம். புகைபிடிக்காதவர்கள், புகைப்பவர் வெளியாக்கும் புகையிலை புகையை உள்ளிழுப்பதைத் தவிர்ப்பது முக்கியம். அதற்கு புகை இல்லாத உணவகங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றைத் தேடிக் கண்டுபிடித்துச் செல்லலாம். உங்களைச் சுற்றியும், உங்கள் வீட்டிலும் அல்லது உங்கள் காரில் கூட புகைப்பிடிக்க வேண்டாம் என்று குடும்பத்தினரையும் நண்பர்களையும் கேட்டுக் கொள்ளுங்கள்.
சில நுரையீரல் புற்றுநோய்கள் வேலை செய்யும் போது கார்சினொஜன்ஸுடன் (புற்றுநோய்க் காரணிகளுடன்) ஆட்படுதலுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆர்சனிக், அஸ்பெஸ்டாஸ், நிக்கல், ரேடான், புகைக் கரி, மற்றும் துகள், மாசு போன்ற வெளியேற்றப் புகை போன்றவை இந்த நச்சு இரசாயனங்களில் அடங்கும். புற்றுநோய்க் காரணிகளுடன் தொழில்துறையில் வேலைசெய்த வருடங்களைப் பொறுத்தும் புற்றுநோய்க் காரணிகளின் வகையைப் பொறுத்தும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மாறுபடும்.
கப்பல் போக்குவரத்து, இரயில் பாதைகள், ஸ்ப்ரே பெயிண்டிங், செமிகண்டக்டர் போன்ற இரசாயனப் புகைகளைக் கொண்ட ஒரு தொழிலில் நீங்கள் பணிபுரிய நேர்ந்தால், பணியில் இருக்கும் போது உங்கள் கைகள், கால்கள் மற்றும் முகத்தை மூடுவதற்கு ஏற்ற, பொறுத்தமான பாதுகாப்புக் கவசங்களைப் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் ஆபத்தைத் தடுப்பதற்கான/குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிய வேண்டும்.
உடல் பருமன் நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். உண்மையில், உங்கள் உடலில் உள்ள உள்ளுறுப்பு கொழுப்புக் காரணமாக அனைத்து வகையான புற்றுநோய்களும் ஏற்படலாம் - உங்கள் முக்கிய உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு, பெரும்பாலும் வீக்கம் காரணமாக இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். உள்ளுறுப்பு கொழுப்பு உயிரணுக்கள் மிகப்பெரியவை. அவற்றில் பல உள்ளன. உடலில் உள்ள பிராணவாயுவுக்கு இந்த அதிகப்படியான கொழுப்புக்கு உடலில் அதிக இடம் இல்லை. அதனால் அந்தச் சூழல் வீக்கத்தைத் தூண்டுகிறது.
காயம் மற்றும் நோய்க்கு உடலின் இயற்கையான எதிர்வினை, அழற்சி ஆகும். ஒரு நபருக்கு ஆழமான வெட்டு ஏற்பட்டால், வெட்டைச் சுற்றியுள்ள பகுதி மென்மையாகவும் அழற்சியாகவும் மாறும். இந்த சிறிய அழற்சி சேதமடைந்த திசுக்களை சரிசெய்வதற்கு உதவுகிறது. மற்றும் காயத்தைச் சுற்றியுள்ள பகுதியைச் குணப்படுத்தும் செயல்முறைக்கு உதவுகிறது. இருப்பினும், அனைத்து அழற்சியும் நன்மை பயப்பவன அல்ல.
குறிப்பாக நீண்ட கால அழற்சியானது தேவையற்ற உள்ளுறுப்புக் கொழுப்பினால் உருவாகி உங்கள் உடலைச் சேதப்படுத்தும். எனவே நுரையீரல் புற்றுநோய் அல்லது பிற புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். உயிரணுக்கள் பெருமளவில் இனப்பெருக்கம் செய்யும்போது, அவற்றைச் சுற்றியுள்ள உயிரணுக்களைச் சேதப்படுத்தி நோயை உருவாக்கும் போது புற்றுநோய் ஏற்படுகிறது. ஏதேனும் தவறு நடக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தால், அதிகமான உயிரணுக்கள் நகலெடுத்து இனப்பெருக்கம் செய்து, கட்டி உருவாகும்.
இந்த காரணிகளின் காரணமாக, உடல் பருமன் அனைத்து புற்றுநோய்களின் அபாயத்தையும் அதிகரிப்பதால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்ற்றுவதும் பராமரிப்பதும் ஒருவருக்கு நன்மை பயக்கும்.
உங்கள் உடலின் ஆரோக்கியம் அல்லது நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. உங்கள் உணவில் சிறந்த தரமான மற்றும் போதிய அளவு பழங்கள் மற்றும் காய்கறிகள் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகள் பதற்றத்தைக் குறைப்பதாகவும், மனநிலையை உயர்த்துவதாகவும், சோர்வைக் குறைப்பதாகவும், பொதுவாக வாழ்க்கையை மேம்படுத்துவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது, இது நுரையீரல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் நோயாளிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உண்மையில், இது வாழ்க்கை முறையை சிறப்பாக மேம்படுத்த விரும்பும் எவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சுவாச இயக்கங்களையும் சரியான உடல் ஒழுங்கமைப்பையையும் சார்ந்திருக்கும் யோகா மற்றும் தை-சி போன்ற லேசான பயிற்சிகள் எண்டோர்பின்களை வெளியிட உதவும். இது மனநிலையை உறுதிப்படுத்தி, தூக்கத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது. யோகா, குறிப்பாக, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு நெகிழ்வுத்தன்மை, இயக்கம் மற்றும் வலிமையை உருவாக்க உதவுகிறது. உட்கார்ந்து, முறுக்கும் ஆசனங்கள் உங்கள் மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையைப் அகற்ற உதவுகின்றன. மேலும் இது கவலை மற்றும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நுட்பங்களையும் வழங்குகிறது.
புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளான மன அழுத்தம், சோர்வு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் யோகா உதவுகிறது. ஏனெனில் இது உடலில் பிராணவாயுவின் ஓட்டத்திற்கு உதவுகிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், குறிப்பாக யோகா சுவாச நுட்பங்களை எங்கும், எந்த நேரத்திலும் செய்யலாம். சிகிச்சையின் போது, மருத்துவரின் சந்திப்புக்காக காத்திருக்கும் போது, வேலை இடத்திலும் வீட்டிலும் பயிற்சி செய்யலாம். இதன் பலன்களும் இடங்களும் எண்ணில் அடங்கா.
யோகா மூலம், தனிநபர்கள் ஒரு ஆசனத்திலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதில் தங்கள் கவனத்தை செலுத்துவதால் மேம்பட்ட நல்வாழ்வின் உணர்வை அனுபவிக்க முடியும். இது அவர்களின் சுவாசம் மற்றும் மனவுடல் இணைப்புடன் இணைக்க வழிவகுக்கிறது. சுருக்கமாக, யோகா என்பது உடல் மற்றும் மனம் இரண்டிற்கும் நன்மைகளைத் தரும் ஒரு உடல் செயல்பாடு.
நீங்கள் குறிப்பாக அதிகமாக புகைப்பிடிப்பவராகவோ அல்லது கடந்த 10 ஆண்டுகளில் புகைபிடிப்பதை விட்டுவிட்டவராகவோ, நுரையீரல் புற்றுநோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டவராகவோ, நுரையீரல் அல்லது பிற புற்றுநோயால் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது இரசாயன புகைகள் சார்ந்த தொழில்துறையில் பணிபுரிபவராகவோ இருந்தால் உங்கள் நுரையீரலை பரிசோதிதுக் கொள்ளவும்.
ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், நுரையீரல் புற்றுநோயை (80% வரை) குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆரம்பகால கண்டறிதல், குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய மார்பக அறுவை சிகிச்சை முறையைப் ஒருவர் பெற உதவுகிறது - இது விரைவான மீட்பு மற்றும் குறுகிய காலத்திற்கு மருத்துவமனையில் தங்குவதற்கு வழிவகுக்கிறது.
ICTS இல், நுரையீரல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக ஆரம்பகால CT-CDT நுரையீரல் பரிசோதனையைக் கொண்டுள்ளோம். நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடைய தன்னியக்க ‘ஆன்டிபாடிகளைக்’ கண்டறியக்கூடிய ஆரம்பகால CDT-நுரையீரல் இரத்தப் பரிசோதனையும், பாரம்பரிய எக்ஸ்ரே மூலம் கண்டறிய முடியாத அளவுக்கு சிறியதாக இருக்கும் ஆரம்ப நிலை நுரையீரல் முடிச்சுகளைக் காட்ட குறைந்த கதிர்வீச்சு அளவைக் கொண்ட சிடி ஸ்கேன் ஆகியவையும் இதில் அடங்கும்.
எங்கள் ஆரம்பகால CT-CDT நுரையீரல் பரிசோதனைப் பற்றி இங்கே மேலும் படிக்கவும்.
இது 'புகைபிடிப்பவர்களின் நோய்' என்று அழைக்கப் பட்டாலும், தொழில்சார் வெளிப்பாடுகள் முதல் உடல் பருமன் வரை பிற ஆபத்து காரணிகள் உள்ளன என்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள். இதனால், அவற்றைத் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கத் தவறுகின்றனர்.
நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க, ஆபத்து காரணிகளைக் குறைப்பதற்கும், உங்கள் வாழ்க்கை முறையின் மாற்றங்களில் முதலீடு செய்வதற்கும் எந்த நேரமும் உகந்த நேரமே. ஒரு தனிநபருக்கு புகைபிடித்தல் வரலாறு இருந்தபோதிலும், தமக்கும் தம் குடும்பத்திற்கும் நுரையீரல் புற்றுநோயினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.