மேலோட்டம்

மயஸ்தீனியா கிராவிஸ் என்றால் என்ன?

‘மயஸ்தீனியா கிராவிஸ்’ (எம்ஜி) என்பது லத்தீன் மொழியிலிருந்து "கடுமையான தசை பலவீனம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இது உடல் செயல்பாடுகளால் படிப்படியாக மோசமாகும் தசை பலவீனத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் நோயாளிகள் காலையில் எழுந்திருக்கும் போது நன்றாக இருக்கலாம். ஆனால் நாள் முழுவதும் படிப்படியாக அதிக சோர்வடைவதை உணர்கிறார்கள். இது ஓய்வெடுப்பதன் மூலம் சீராகும். இது பொதுவாக 30 வயதுக்குட்பட்ட பெண்களிலும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிலும் காணப்படுகிறது.

‘எம்ஜி’யில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. முதலாவதாக, முழு உடலையும் பாதிக்கும் பொதுமைப்படுத்தப்பட்ட எம்.ஜி. இது கண்கள், தொண்டை, மார்புச் சுவர்கள் மற்றும் மூட்டுகளின் தசைகளில் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக கண் இமைகள் தொங்குதல் (ptosis), விழுங்குவதில் சிரமம், சுவாசம் மற்றும் நகர்வதில் சிரமம் போன்றவை ஏற்படுகின்றன.

Ocular MG பெரும்பாலும் கண் தசைகளை பாதிக்கிறது. மற்றும் ptosis மற்றும் இரட்டை பார்வையை ஏற்படுத்தும். பெரும்பான்மையானவர்கள் பொதுவான MG நோயால் பாதிக்கப்படுவதால் MG நோயாளிகளிடையே இது அரிதானது.

கடைசியாக, MG மற்றும் Thyoma இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது. இது ‘தைமஸ்’ சுரப்பியில் புற்றுநோயின் விளைவாக உருவாகும் கட்டியாகும். தைமோமா உள்ள நோயாளிகளில் 20-30% MGயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

MG அதன் நோயாளியை பாதிக்கும் அளவு, அதிகமாகவோ குறூவாகவோ இருக்கலாம். ஆனால் உடல் உழைப்பு, சில வகையான மருந்துகள், பிற நோய்கள் அல்லது கர்ப்பம் ஆகியவற்றால் மோசமடையலாம்.

மயஸ்தீனியா கிராவிஸின் அறிகுறிகள்

நோயாளிகள் பொதுவாக கண் தசைகளின் பலவீனத்தை அனுபவிக்கிறார்கள். இது காலப்போக்கில் உடலில் உள்ள மற்ற தசைகளுக்கும் பரவக்கூடும். அதன் அறிகுறிகள் பின்வருமாறு:

 • ஒன்று அல்லது இரண்டு கண் இமைகளும் தொங்குதல் (ptosis)
 • மங்கலான அல்லது இரட்டை பார்வை
 • நிலையற்ற அல்லது "தள்ளல்" நடை
 • கைகள் அல்லது கால்களில் பலவீனம்
 • விழுங்குவதில் சிரமம்
 • சுவாசிப்பதில் சிரமம்
 • தெளிவாகப் பேசுவதில் சிரமம்

MG இன் தீவிரம் ஆரம்ப அறிகுறிகளில் இருந்து சில மணிநேரங்கள் அல்லது சில நாட்களுக்குள் அதிகரிக்கலாம். மேலும் நாள் முடிவில் உடற்பயிற்சியின் போது மோசமடையலாம். சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அல்லது முறையற்ற முறையில் நிர்வகிக்கப்பட்டால், MG இறுதியில் நோயாளியின் விழுங்கும் அல்லது சுவாசிக்கும் திறனைப் பாதிக்கலாம். அது உயிருக்கு ஆபத்தானது.

மயஸ்தீனியா கிராவிஸின் காரணங்கள்

‘மோட்டார் நியூரான்கள்’ தசை இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகள். ஒவ்வொரு நரம்பு உயிரணுக்களும் நரம்புத்தசை சந்திப்பில் உள்ள ‘அசிடைல்கொலின்’ (ACh) எனப்படும் நரம்பியக்கடத்திகள் (தசையை சுருங்கச் சொல்லும் இரசாயன கலவைகள்) வழியாக அவற்றின் தொடர்புடைய தசை உயிரணுக்களுடன் தொடர்பு கொள்கின்றன. ஒரு சாதாரண சூழ்நிலையில், சுருக்கத்தை ஏற்படுத்த தசை உயிரணுக்களில் உள்ள ஏற்பிகளுடன் ‘ஆக்’ பிணைத்துக்கொள்ள முடியும். இருப்பினும். MG நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தன்னைத்தானே தாக்கும் ஒரு கோளாறு உள்ளது. நோய் எதிர்ப்பொருட்கள், வைரஸ் துகள்கள் மற்றும் ஊடுருவும் நோய்க்கிருமிகளுடன் பிணைப்பதன் மூலம் அவற்றைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றும் சில முக்கியமான செயல்பாடுகளைத் தடுக்கின்றன. அல்லது உடலுக்கு ஏற்பில்லாத பொருளை அழிக்க உடலுக்குச் சொல்லும் குறிச்சொல்லாக செயல்படுகின்றன. MG நோயாளிகளில், இந்த நோய் எதிர்ப்பொருட்கள் தசை ஏற்பியுடன் பிணைக்கப்படுகின்றன. இதனால் ‘ஆச்சி’னைப் பிணைப்பதில் இருந்து தடுத்துத் தசைச் சுருக்கத்தைக் குறைக்கிறது.

மற்ற நோய் எதிர்ப்பொருட்கள் ஏசிஎச் (Ach) மூலக்கூறுகளுடன் பிணைக்கப்படலாம். அவை உடலை அழிப்பதற்காக சமிக்ஞை செய்கின்றன. மற்றொரு பாதையில், நோய் எதிர்ப்பொருட்கள் தசை உயிரணுக்களுக்குத் தேவைப்படும் புரதங்களை அழிக்கக்கூடும். இது ACh உடன் இணைக்கும் ஏற்பிகளை உருவாக்குகிறது.

மார்பக எலும்பின் பின்னால் அமைந்துள்ள தைமஸ் சுரப்பி இந்த நோய் எதிர்ப்பொருட்கள் அதிக அளவில் சுரப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தைமஸ் சுரப்பி இந்த நோய் எதிர்ப்பொருட்களை உருவாக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இது பொதுவாக குழந்தைப் பருவத்தில் மிகவும் சுருங்ககிவிடுவதால் பெரியவர்களில் செயல்படாது. இருப்பினும், MG நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில், இந்த ஏற்பி-தடுக்கும் நோய் எதிர்ப்பொருட்களை உருவாக்கும் அதிக எண்ணிக்கையிலான உயிரணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மற்ற நோய் எதிர்ப்பொருட்கள் ஏசிஎச் மூலக்கூறுகளுடன் பிணைக்கப்படலாம். இதன் வாயிலாக உடலை அழிப்பதற்காக சமிக்ஞை செய்கின்றன. மற்றொரு பாதையில், நோய் எதிர்ப்பொருட்கள் தசை உயிரணுக்கள் தேவைப்படும் புரதங்களை அழிக்கக்கூடும். இது ACh உடன் இணைக்கும் ஏற்பிகளை உருவாக்குகிறது.

விசாரணை

மயஸ்தீனியா கிராவிஸ் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

MG நோயைக் கண்டறிவது, நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனைகளைப் பொறுத்தது. மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்ட சில சோதனைகள் கீழே காட்டப்பட்டுள்ளன:

 • ‘டென்சிலன்’ சோதனை: மருத்துவர் டென்சிலோன் என்ற மருந்தை வழங்குவார். இது ACh மூலக்கூறுகளின் முறிவைத் தடுக்கிறது. இதனால் தசைகளை செயல்பட அனுமதிக்கிறது. MG இல்லாத நோயாளிகளுக்கு, இது தசை சோர்வை மேம்படுத்தாது. இருப்பினும், MG நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடல் வலிமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அனுபவிப்பார்கள். அது சில நிமிடங்களுக்கு நீடிக்கும்.
 • ‘எலெக்ட்ரோமோகிராம்’ (EMG): இது நரம்பு மற்றும் தசை செயல்பாடு பற்றிய மின் பகுப்பாய்வு ஆகும். இது மருத்துவர்களுக்கு ஒரு உறுதியான அறிக்கையை அளிக்க உதவும்.
 • இரத்த பரிசோதனைகள்: MG நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இரத்தப் பரிசோதனையின் போது, தசை ஏற்பிகளுடன் பிணைக்கும் நோய் எதிர்ப்பொருட்களின் உயர் மட்டத்தைக் காட்டும். அல்லது ஏற்பிகளை உருவாக்க தசைகளுக்குத் தேவையான புரதங்களை அழிக்கும் நோய் எதிர்ப்பொருட்களைக் காட்டும்.

சிகிச்சைகள்

கோலினெஸ்டரேஸ் தடுப்பான்கள்

இந்த மருந்து MG இன் லேசான பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு ACH மூலக்கூறுகளின் முறிவைத் தடுப்பதன் மூலம் தசையின் சுருங்கும் திறனை அதிகரிக்கும். மருந்தின் மிகவும் பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துவகை ‘பைரிடோஸ்டிக்மைன்’ ஆகும்.

நோய் எதிர்பு மருந்துகள்

இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அடக்கி, தசைகளின் செயல்பாட்டை சீர்குலைக்கும் நோய் எதிர்ப்பொருட்களின் உற்பத்தியைக் குறைக்கும் ஒரு வகை மருந்துகள். இதில் பொதுவாக முதாலாவதாக பயன்படுத்தப்படுவது ‘ஸ்டீராய்டுதான்’. அறிகுறிகளைக் கட்டுப்படுத்த ‘சைக்ளோஸ்போரின்’ மற்றும் ‘அசாதியோபிரைன்’ போன்ற வலுவான நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படும். இந்த சிகிச்சையினால் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்படுத்துவதால் இந்த சிகிச்சை MG இன் மிகவும் தீவிரமான வடிவங்களுக்கு மட்டும் நிர்வகிக்கப்படுகிறது..

தைமெக்டோமி

‘தைமக்டோமி’ என்பது தைமஸ் சுரப்பியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றுவதாகும். இது எங்கள் மையத்தில் ‘மனிதஇயந்திர-உதவி’ அறுவை சிகிச்சையைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது, இதில் நோயாளிக்கு 3-4 சிறிய கீறல்கள் (8 மிமீ) மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மற்றும் வழக்கமாக 1 முதல் 2 நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி வடலாம். இந்த மேம்பட்ட அறுவை சிகிச்சை தளத்தின் மூலம், ‘மீடியன் ஸ்டெர்னோடமியைத்’ திறக்கும் வழக்கமான முறையிலிருந்து நாம் விலகிச் செல்ல முடிகிறது. இதைப் போன்ற கட்டி இருந்தால், உங்கள் விஷயத்தில் எந்த முறை சிறந்தது என்பதை உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் கந்தாலோசிப்பார். அறிகுறிகளின் தொடக்கத்திலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், நிவாரணத்துடன் மேம்பட்ட விளைவுகளுக்கான வாய்ப்புகள் அதிகம்.

பிளாஸ்மாபெரிசிஸ்

இரத்த பிளாஸ்மா நமது இரத்த உள்ளடக்கத்தில் 90%க்கும் அதிகமாக உள்ளது. மற்றும் உடலால் உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்பொருட்களைக் கொண்டு செல்கிறது. ‘பிளாஸ்மாபெரிசிஸ்’ செயல்முறை அடிப்படையில் நோயாளியின் இரத்த பிளாஸ்மாவை நன்கொடையாளர் இரத்த பிளாஸ்மாவால் மாற்றுகிறது, இது தசை ஏற்பிகளை சீர்குலைக்கும் எதிர்ப்பொருட்களின் இரத்தத்தை அகற்றும். இருப்பினும், இது ஒரு ஆபத்தான, விலையுயர்ந்த மற்றும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் சிகிச்சை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

IVg

‘இம்யூனோகுளோபுலினை’ நரம்புவழி உட்செலுத்துவதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கலாம். மற்றும் MG இல் ஏற்படும் ‘ஆட்டோஆன்டிபாடி’களின் விளைவுகளை குறைக்கலாம். இது கடுமையாக பாதிக்கப்பட்டு மோசமடையும் MGக்கு அளிக்கப்படும் சிகிச்சை. குறிப்பாக சுவாசித்தல் சம்மந்தம் பட்டிருக்கும் போது.

MG நோயாளிகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதாலும் அவர்களின் நோயைப் பற்றிய கல்வியைப் பெற்றிருப்பதாலும் தங்கள் நோயை நிர்வாகிக்க முடியும். இதைச் செய்வதற்கான சிறந்த வழிகளில் சில:

 • வாழைப்பழம், தக்காளி, ஆப்ரிகாட் மற்றும் ப்ரோக்கோலி போன்ற பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுதல்
 • அளவுக்கு மீறி உழைப்பதைத் தவிர்த்தல்
 • MG ஐ மோசமாக்கும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் நோயறிதலைப் பற்றி மருத்துவர்களுக்கு தெரியப்படுத்துதல்.
 • அதிக வெப்பத்தைத் தவிர்த்தல்